பேச, வாக்களிக்க லஞ்சம் வாங்கினால் கிரிமினல் குற்றமே “மாஸ்” காட்டிய உச்சநீதிமன்றம்

ஒரு உறுப்பினர் நாடாளுமன்றம், சட்டமன்றம் இவற்றில் பேசவோ அல்லது வாக்களிக்கவோ லஞ்சம் பெற்றால் அவர் மீது கிரிமினல் நடவெடிக்கை எடுக்கலாம் என 7 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

Read more

மணிப்பூர் கலவரம், காரணம் என்ன? | Manipur Violation In Tamil

மணிப்பூர் பிரச்சனைக்கு முக்கியமான காரணம், மெய்தேய் இனக்குழுவுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கிட அம்மாநில அரசு பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திட அம்மாநில உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, பழங்குடியின மக்கள் நடத்திய பேரணி, அதில் நடந்த வன்முறை தான் மணிப்பூர் வன்முறையின் துவக்கப்புள்ளி.

Read more

பொது சிவில் சட்டம் என்றால் என்ன? கொண்டு வருவது நல்லதா?

எப்படி குற்றவியல் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கிறதோ அதைப்போலவே உரிமையியல் சட்டம் அதாவது சிவில் சட்டமும் பொதுவானதாக இருந்தால் அதுவே பொது சிவில் சட்டம் [Uniform Civil Code]

Read more

ஜெய்ஸ்வால் இவ்வளவு கஷ்டப்பட்டாரா?? Yashasvi Jaiswal’s Success Story in tamil

காலையில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி சதம் அடித்துவிட்டு மாலையில் பானிபூரி விற்கும் கடையில் வேலை பார்ப்பேன். என்னோடு விளையாடிய நண்பர்கள் கடைக்கு வரும் போது எனக்கு கடினமாக இருக்கும். ஆனால் அதற்காக நான் கவலைப்படவில்லை – India’s U-19 World Cup Star Yashasvi Jaiswal

Read more

எவரெஸ்ட் சிகரம் பற்றிய 7 சுவாரஸ்யமான தகவல்கள் | Everest Mountain In Tamil

எவராலும் எட்ட முடியாத சாதனையை நாம் எப்போதும் எவரெஸ்ட் சிகரத்தோடு தான் ஒப்பிட்டு பேசுவோம். அதற்கு மிக முக்கியமான காரணம், எவரெஸ்ட் சிகரத்தின் உயரமும் அதில் ஏறி அதன் உச்சத்தை தொடுவதில் இருக்கக்கூடிய சவால்களும் தான். உலகத்திலேயே உயரமான சிகரமாக கருதப்படும் எவரெஸ்ட் சிகரம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே உங்களுக்காக……

Read more

10 அம்பேத்கர் சாதனைகள் உங்களுக்காக….

பாபாசாகேப் அம்பேத்கர் என்று அழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ஒரு புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி, சட்ட நிபுணர், பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர். அவர் நவீன இந்தியாவை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். அவர் ஏப்ரல் 14, 1891 அன்று பிரிட்டிஷ் இந்தியாவின் மத்திய மாகாணங்களில் (தற்போது மத்தியப் பிரதேசத்தில்) உள்ள மோவ் நகரில் பிறந்தார். அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று பரவலாகக் கருதப்படுகிறார், மேலும் இந்திய நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அளவிட முடியாதது.

Read more

ஷிவ் நாடார்: HCL நிறுவனரின் சாதனைக் கதை

HCL என்ற மாபெரும் தொழில்நுட்ப ஸ்தாபனத்தின் வாயிலாக இந்தியாவை தொழில்நுட்பத்தின் முக்கிய இடமாகவும் ஆசியாவில் உயர்ந்த நிலையிலும் இருப்பதற்கு முக்கியக்காரணம் ஷிவ் நாடார் என்றால் மிகையாகாது. நீங்கள் வெற்றிபெற உத்வேகமிக்க வெற்றிக்கதையை தேடினால் இந்தக்கதை நிச்சயம் உங்களுக்கானது தான்.

Read more

உங்கள் காருக்குள் எலி அட்டகாசம் செய்கிறதா? இதை செய்து பாருங்கள்

நாம் சில நாட்கள் காரை எடுக்காமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தால் எலிகள் காருக்குள் [Rat Problem] சென்று கார் சீட், இன்ஜின் ஒயர் உள்ளிட்டவற்றை கடித்து சேதமாக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒருமுறை காருக்குள் எலி இருப்பதை நீங்கள் பார்த்துவிட்டால் கொஞ்சமும் அலட்சியம் செய்திடாமல் அடுத்தமுறை எலி வராமல் இருக்க செய்திட வேண்டியவற்றை செய்திடுங்கள். எலிகள் ஒருமுறை வந்து போய்விட்டால் மீண்டும் மீண்டும் அதே இடத்திற்கு வர அதிக வாய்ப்புகள் உண்டு. ஆகவே உஷாராக இருப்பது நன்று.

Read more

2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வென்றவர்கள் யார்? அவர்களது சாதனைகள் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல்,மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய 6 பிரிவுகளில் மிகப்பெரிய பங்களிப்பு செய்திடும் சாதனையாளர்களை போற்றும் விதத்தில் உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றியாளர்களுக்கு விருதுடன் SEK 9,000,000 (Swedish Krona) வழங்கப்படும். இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ. 7 கோடியே 22 லட்சம். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. பிற துறைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது.

Read more

குடியரசுதின அலங்கார ஊர்தியை எப்படி தேர்வு செய்கிறார்கள்? அரசியலா? எதார்த்த நிகழ்வா?

பாதுகாப்பு அமைச்சகம் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி இதற்கான அறிவிப்புகளை மாநில அரசு, யூனியன் அரசு என அனைத்திற்கும் அனுப்பியுள்ளது. அதிலே குறிப்பிடப்பட்டு இருந்த கருப்பொருள் “India@75 – Freedom Struggle, Ideas @ 75, Actions @ 75, and Resolve @ 75” இதுதான். இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆம் ஆண்டினை கொண்டாடும் வகையில் அலங்கார ஊர்திகள் இருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.

Read more