பைக், காருக்கு இன்சூரன்ஸ் எடுத்தே தீர வேண்டுமா? Insurance பற்றிய முழு தகவல்

பைக் மற்றும் கார் வாங்கியிருக்கும் நாம் ஒவ்வொரு ஆண்டும் சில ஆயிரங்கள் செலவு செய்து இன்சூரன்ஸ் போடுவோம். ஆனால், நாம் அந்த இன்சூரன்ஸை பயன்படுத்தியே இருக்க மாட்டோம். அப்படிப்பட்ட சூழலில் ஏன் ஒவ்வொரு வருடமும் இதற்கு வேறு செலவு செய்கிறோம்? இன்சூரன்ஸ் எடுத்தே தீர வேண்டுமா? எது நடந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என இன்சூரன்ஸ் எடுக்காமல் இருக்க முடியாதா? என நமக்கு நாமே கேள்வி கேட்டுக்கொள்வோம். அப்படிப்பட்ட கேள்வி உங்களுக்கு இருந்தால் இந்தப்பதிவு உங்களுக்கு பதில் சொல்லும்.

Read more

எங்கே விழப்போகிறது சீனாவின் Long March 5 ராக்கெட்? உலக நாடுகள் அதிர்ச்சி

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் தியான்ஹே [Tianhe] எனும் விண்வெளி மையத்தை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. அதற்கான பொருள்களை சுமந்துகொண்டு Long March 5 என்ற ராக்கெட் ஏப்ரல் 29 அன்று சீன விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்டது. பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டி பயணிக்கும் போது ராக்கெட் அது தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சுமார் 18 டன் எடையுள்ள சீனாவின் Long March 5 ராக்கெட் பூமியை நோக்கி கட்டுப்பாடு இல்லாமல் வந்துகொண்டு இருக்கிறது. எந்த இடத்தில் எந்த நேரத்தில் விழும் என்பது தெரியாமல் விஞ்ஞானிகள் கவலையடைந்து வருகிறார்கள்.

Read more

கொரோனா தடுப்பு மருந்து பார்முலாவை இந்தியா போன்ற நாடுகளுக்கு கொடுக்க கூடாது : பில்கேட்ஸ்

அண்மையில் Sky News எனும் பிரிட்டஷ் பத்திரிகைக்கு பேட்டியளித்தார் உலக பணக்காரர் என அறியப்பட்டவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ், அப்படி அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தின் பார்முலாவை கொடுக்கலாமா என கேட்டபோது அவர் சற்றும் தயக்கமின்றி ‘கூடாது’ என பதிலளித்தார். அவர் அதற்கு பாதுகாப்பு காரணங்கள், தடுப்பு மருந்தின் தரம் குறித்த சந்தேகம் உள்ளிட்டவைகளை காரணமாக கூறினாலும் கூட பில்கேட்ஸ் இப்படி கருணையே இல்லாமல் கூறிவிட்டாரே என பலரும் ஆதங்கப்படுகின்றனர்.

Read more