தனியார் நிறுவனங்களில் அதிகரிக்கும் பாலியல் துன்புறுத்தல், பெண் பணியாளர்கள் என்ன செய்திட வேண்டும்?

ஊதிய உயர்வு துவங்கி பல்வேறு விசயங்களில் தனது மேலதிகாரியை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதனால் பல தனியார் அலுவலகங்களில் பெண் பணியாளர்களுக்கு எதிராக பாலியல் தொந்தரவு அதிகரித்து வருவதாக தெரியவருகிறது. பாலியல் தொந்தரவு புகாரை அலுவலகங்கள் முறையாக விசாரிக்கின்றனவா? பெண் பணியாளர்கள் என்ன செய்திட வேண்டும்? வாருங்கள் பேசுவோம்.

Read more

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் விமானி உஷா சுந்தரம் | நேரு உள்ளிட்ட தலைவர்கள் நம்பிய விமானி

இந்தியாவின் மிக முக்கிய தலைவர்களான நேரு, படேல் உள்ளிட்ட தலைவர்கள் உஷா மற்றும் அவரது கணவர் வி சுந்தரம் விமானிகளாக இருந்த மைசூர் மகாராஜாவின் விமானத்தில் செல்வதையே விரும்பினார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் பெண் விமானி உஷா பின்னாட்களில் பெண்கள் இத்துறையில் முன்னேற பெரும் உந்து சக்தியாக இருந்தார்.

Read more

சர்வதேச மகளிர் தினம் – சமத்துவமின்மையை உடைக்க போராட வேண்டும்

புற உலகத்தில் ஏற்படும் மாற்றங்களை விட தன்னிடத்தில் ஏற்படும் மாற்றம் என்பது ஒவ்வொருவருக்கும் அவசியம். பெண்களுக்கோ அது மிக மிக அவசியம். இப்போது தான் தனது பார்வையை மாற்றிக்கொண்டு வருகிற சமூகத்தில் தனக்கான வாய்ப்பு கொடுக்கப்படும் காலம் வரைக்கும் காத்திருக்காமல் தனது கனவுகளை நோக்கி பெண்கள் பயணப்பட வேண்டும். தனக்குள்ளே கனவுகளை ஆசைகளை திறமைகளை புதைக்கும் போக்கை விட்டு புறப்பட்டால் வெற்றி நிச்சயம்.

Read more

உயர்த்தப்படும் பெண்களுக்கான திருமண வயது 21, நல்லதா? காரணம் என்ன? சட்டசிக்கல் என்ன?

ஆண்களுக்கான திருமண வயது 21 ஆகவும் பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும் இருந்துவரும் சூழலில் பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்தும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. விரைவில் இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களின் திருமண வயதை உயர்த்துவதன் மூலமாக அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் ஏற்படும் எனவும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இளம்வயதிலேயே தாய்மை அடைதல் உள்ளிட்ட சிக்கல்களை தடுக்க முடியும் என்ற அடிப்படையில் இந்த வயது உயர்வு கொண்டுவரப்படுகிறது. ஆனால், ஏற்கனவே பல்வேறு மத சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் இந்தியாவில் இந்த சட்டம் எப்படி இயற்றப்பட இருக்கிறது என்பதையும் இது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் பேசுவது அவசியம்.

Read more

ஷகிரா பாப் பாடகியின் வெற்றிக்கதை | Shakira Isabel Mebarak Ripoll Success Story

பாப் உலகில் கிட்டத்தட்ட அனைத்து விருதுகளையும் வாங்கிவிட்ட ஒரு பாப் பாடகி தான் ஷகிரா. இளமைப்பருவத்தில் இவரது குரல் ஒரு பாடகருக்கான குரல் போல இல்லாமல் இருந்தது. ஆனால் தொடர்ச்சியாக அவர் எடுத்த முயற்சிகளின் விளைவாக ஏழை குடும்பத்தில் பிறந்த ஷகிரா இன்று மாபெரும் பாப் பாடகியாக மாறியிருக்கிறார், கோடிகளில் சம்பாதிக்கிறார், பாடல் எழுதுகிறார், உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். ‘Whenever, Wherever‘, ‘Hips Don’t Lie.’ and ‘Waka Waka‘ என்பன போன்ற பல சூப்பரான ஆல்பம்களை பாடியுள்ள ஷகிரா கிராமி விருது, லத்தீன் கிராமி விருது, அமெரிக்கன் மியூசிக் விருது என பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறார். உலகம் முழுமைக்கும் இவரது 70 மில்லியன் ஆல்பம்கள் விற்று தீர்ந்துள்ளன.

Read more

திட்டங்கள் எல்லாம் பெண்களுக்கு ஆனால் பதவியோ ஆண்களுக்கு, சூப்பர் சமூகநீதி

திமுக 173 இடங்களில் போட்டியிடுகிறது அதிலே பெண்களுக்கு 12 இடங்கள். அதிமுக 171 இடங்களில் போட்டியிடுகிறது அதிலே பெண்களுக்கு 14 இடங்கள். மக்கள் நீதி மையம் 154 இடங்களில் போட்டியிடுகிறது அதிலே பெண்களுக்கு 12 இடங்கள். நாம் தமிழர் கட்சி மட்டும் தான் 234 தொகுதிகளில் போட்டியிடுகிறது அதிலே பெண்களுக்கு 114 இடங்களை ஒதுக்கியுள்ளது.

Read more

ரேப் செய்ய வந்தவனை கொன்ற 19 வயதுபெண் விடுதலை | போராளி

விசாரணைக்குப்பிறகு தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவரைத்தான் தற்காத்துக்கொள்ள இளம்பெண் கொன்றுள்ளார்  என தெரிந்தபடியால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு தொடர்ச்சியாக அதிகரித்து

Read more

1 மணி நேரம், 45 வகையான உணவு, 9 வயது சிறுமி | நீங்களும் சாதிக்கலாம்

கொரோனா உலகம் முழுவதையும் முடக்கிப்போட்டது அனைவரும் அறிந்ததே. இந்த இக்கட்டான காலகட்டத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொண்டதாக சிலர் மட்டுமே கூறினார்கள். அவர்கள் தங்கள் தொழில் நிமித்தமாக வேகமாக சுழன்று வேலைபார்த்துக்கொண்டு இருந்தவர்கள். இந்த கொரோனா அவர்களுக்கு சற்று ஓய்வு அளித்தது. தங்கள் துறைகளில் திறனை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பாக இந்த ஓய்வை பயன்படுத்திக்கொண்டார்கள். அப்படித்தான் இந்த முடக்க காலத்தை சாதனைக்கான விளைநிலமாக மாற்றியிருக்கிறார் 9 வயதான லட்சுமி சாய் ஸ்ரீ.

Read more

மாதவிடாய் சுகாதார பொருட்களை இலவசமாக வழங்க சட்டமியற்றிய முதல் நாடு ஸ்காட்லாந்து

வெளியிலேயே சொல்லத்தயங்கும் வார்த்தையாக மாதவிடாய் மாறிபோனதன் விளைவோ அல்லது ஆண்களுக்கு அப்படியொரு பிரச்சனை எழுவது இல்லை என்பதனாலோ குடும்ப அளவிலும் கூட அதற்காக பணம் ஒதுக்கி பெண்களுக்கு சரியான மாதவிடாய் பொருள்களை வாங்கிக்கொடுக்கும் போக்கு பெரும்பான்மையான குடும்பங்களில் இல்லை. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் சில சமயங்களில் அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சுகாதாரமான மாதவிடாய் பொருள்களை இலவசமாக பெண்களுக்கு அவ்வப்போது வழங்கி வருகின்றன.

Read more

எம்லைன் பங்கர்ஸ்ட் : பெண்கள் வாக்குரிமைக்காக போராடி வென்ற பெண் | Emmeline Pankhurst (1858 – 1928)

பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்க வழிவகை செய்திடும் சட்டம் முதன் முதலாக செப்டம்பர் 19,1893 அன்று நியூஸிலாந்து [New Zealand] நாட்டில் தான் கொண்டுவரப்பட்டது. உலகிலேயே முதல் முறையாக பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை கொடுத்த நாடு என்ற பெருமையை நியூஸிலாந்து நாடு இதன் மூலமாக பெறுகிறது. 1902 இல் ஆஸ்திரேலியா, 1906 இல் பின்லாந்து, 1913 இல் நார்வே, 1915 இல் டென்மார்க் என ஒவ்வொரு நாடும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை கொடுத்து வந்தது. அண்மையில் 2011 ஆம் ஆண்டு தான் சவூதி அரேபியாவில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

Read more