ஜெய்ஸ்வால் இவ்வளவு கஷ்டப்பட்டாரா?? Yashasvi Jaiswal’s Success Story in tamil

காலையில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி சதம் அடித்துவிட்டு மாலையில் பானிபூரி விற்கும் கடையில் வேலை பார்ப்பேன். என்னோடு விளையாடிய நண்பர்கள் கடைக்கு வரும் போது எனக்கு கடினமாக இருக்கும். ஆனால் அதற்காக நான் கவலைப்படவில்லை – India’s U-19 World Cup Star Yashasvi Jaiswal

Read more

வாழ்க்கையில் ஜெயிக்க கட்டாயம் படிக்க வேண்டுமா? படிக்காமல் சாதித்தவர்கள் இருக்கிறார்களே?

“சாதிக்க படிப்பு அவசியமில்லை” என்கிற பரவலான வாசகத்தை கேட்கும் பல பள்ளி மாணவ மாணவியரும் இளைஞர்களும் “சாதிக்க, வாழ்க்கையில் முன்னேற நன்றாக படிக்க வேண்டிய அவசியமில்லை” என புரிந்துகொள்கிறார்கள். ஆனால், சாதிக்க படிப்பு அவசியமில்லை என்பது கல்வி பயிலும் வாய்ப்புள்ளவர்களுக்காக சொல்லப்பட்டது அல்ல என்பதையும் அது போதிய கல்வி அறிவு பெற முடியாதவர்களும் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டது என்பதையும் மாணவ மாணவியர் உணர வேண்டும்.

Read more

1 மாணவருக்காக 50KM பயணித்து பாடம் நடத்தும் ஆசிரியர், பிறகு நடந்த பெரிய மாற்றம்

மகாராஷ்டிராவின் புனே நகரத்திலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் ஜந்தர் என்ற இடத்திற்கு அருகே செல்வதற்கு சரியான சாலைவசதியோ மின்சார வசதியோ இல்லாத கிராமம் இருக்கின்றது . அந்த கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார் ரஜினிகாந்த் மேண்டே . 2010 இல் இவர் பணிக்கு சேரும் நேரத்தில் சுற்றுவட்டாரத்தில் இருந்து 12 மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர் . 

Read more

கொரோனாவால் மீன் விற்கும் தனியார் பள்ளி ஆசிரியர்

பள்ளிகள் எப்போதும் திறக்கப்படும் என உறுதியாகத் தெரியாத சூழ்நிலையில் சுபீஷ் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். ஆமாம், தனது கிராமத்திற்கு அருகே ஒரு இடத்தில் மீன் கடை ஒன்றைத் திறந்தார். பிறர் என்ன நினைப்பார்கள் என்பதெல்லாம் குடும்பத்தை நடத்திட பணம் வேண்டும் என்ற கவலைக்கு பின்னால் மறைந்து போனது. தனது கிராமத்தில் எளிதாக மீன் கிடைக்கும் என்பதனால் மீனைக் கொள்முதல் செய்து விற்பனை செய்திட துவங்கினார் சுபீஸ். தற்போது அவருக்கு குடும்பத்தை நடத்திட போதுமான அளவு பணம் மீன்கடை மூலமாக கிடைக்கிறது.

Read more

ஜீவித் குமாருக்கு வாழ்த்துக்கள், ஆனால் மறந்துவிடாதீர்கள்

இப்போது ஜீவித் குமார் என்ற அரசுப்பள்ளி மாணவரின் வெற்றியைக் கொண்டாடுகிறோம். ஆனால் போதிய பயிற்சி வாய்ப்பு கிடைக்காமல் நீட் தேர்வில் சரியான மதிப்பெண்களை பெறாமல் வீட்டில் அழுது புலம்பிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் கண்ணீர் துளிகளை தலையணைகள் உறுஞ்சிக்கொள்ள அனுமதித்துவிட்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். ‘நியாபக மறதி’ என்பது தமிழக மக்களிடம் இருக்கும் பெரும் குறைபாடு. ஆகவே தான் நியாபகப்படுத்திட இந்தப்பதிவை எழுதுகிறேன்.

Read more

JEE தேர்வில் இண்டெர்நெட், கோச்சிங் இல்லாமல் 89.11% மார்க் பெற்று அசத்திய பழங்குடியின மாணவி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கிப்போயின. பொருளாதாரத்தில் மட்டும் கொரோனா தாக்குதலை ஏற்படுத்தவில்லை, பல மாணவர்களின் படிப்பிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது கொரோனா பாதிப்பு. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் மமதா எனும் 17 வயது மாணவி. இவர் Joint Entrance Examination (JEE) தேர்வுக்கு படித்து வந்தார். இவர் தெலுங்கானாவில் இருக்கும் மிகவும் பின்தங்கிய பழங்குடியின இனத்தை சேர்ந்த மாணவி.

Read more

தேயாத ஏணி “ஆசிரியர்” | ஆசிரியர் தின வாழ்த்துக்கள் | TEACHERS DAY QUOTES TAMIL

ஆயிரம் பிள்ளைகள் கூட்டிஎல்லோருக்கும் நல்ல பாடம் ஊட்டிஅரவணைப்பில் நல்வழி காட்டிசிகரத்தை அடையாளம் நீட்டிஏணியாய் தன்னையும் மாட்டி ஏறி செல்லடா என்மகனே என்றுநரைமுடி கண்டாலும் வழுக்கைத் தலை வந்தாலும்உடல் தலறிப்போனாலும்தளராத

Read more

நினைப்பதைவிடவும் நாம் வலிமையானவர்கள்

வாழ்வின் பெரும்பான்மையான நேரங்களில் நாம் யார் பின்னாடியோ ஓடிக்கொண்டே தான் இருக்கிறோம். அதுதான் பல சமயங்களில் நமக்கு ஏமாற்றத்தை தந்துவிடுகிறது. இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். ஆகவே பிறரை நோக்கி செல்வதை விட்டுவிட்டு உங்களை தேடி கண்டுபிடிக்க முயலுங்கள். நீங்கள் இதுவரை நினைத்துக்கொண்டிருப்பதை விடவும் சிறப்பானவர்கள். அதனை நீங்கள் முதலில் நம்ப வேண்டும். உங்களிடம் உள்ள சிறப்பான விசயத்தை மேலும் மெருகேற்றிக்கொள்ள நீங்கள் உங்களது வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். அதை நீங்கள் செய்ய பயணித்தால் வழிகளில் உங்களது வாழ்க்கைக்கு தேவையான விசயங்கள் அனைத்தும் தானாகவே கிடைக்கும்.

Read more

அதென்ன “மகிழ்ச்சி பாடத்திட்டம்” – டெல்லி அரசுப்பள்ளிகளில் நடத்தப்படும் புதுவித பாடத்திட்டம்

ஒருவர் கல்வி கற்கிறார் எனில் அந்தக்கல்வியானது அவருக்கு மகிழ்ச்சி, விழிப்புணர்வு, தன்னம்பிக்கை மற்றும் சமூகத்திற்கு அவசியமான மனிதனாக எப்படி நடந்துகொள்வது போன்றவற்றை தர வேண்டும். இதுதான் கல்வியின் தார்மீக நோக்கமாக இருக்க வேண்டும். இதனை அடிப்படையாகக்கொண்டுதான் டெல்லி அரசாங்கம் “மகிழ்ச்சி பாடத்திட்டம்”ஒன்றினை வடிவமைக்க துவங்கியது. ஜூலை,2018 இல் சில டெல்லி அரசுப்பள்ளிகளில் மட்டுமே சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட “மகிழ்ச்சி பாடத்திட்டம்” தற்போது கிட்டத்தட்ட 1000 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடத்தப்படுகிறது. தினசரி 45 நிமிட கால அளவுள்ள இந்த வகுப்பானது நர்சரி முதல் 8 ஆம் வகுப்பு வரை நடத்தப்படுகிறது.

Read more

தோனியை போல இருக்காதீர்கள் – இந்த விசயத்தில்

மிகச்சிறந்த கேப்டன் என்று சொல்லக்கூடிய தோனி அவர்களை பல நாட்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் காண முடியாமல் தவித்து வருகின்றனர். நிச்சயமாக அவர் IPL போட்டிகளில் ஆடுவார் என நம்பலாம். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்போ “20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் அவர் ஆட வேண்டும்” என்பதுதான். இந்தியாவை உயர்ந்த தூரத்திற்கு அழைத்துச்சென்றவருக்கு தகுந்த மரியாதையோடு பிரிவு உபச்சாரம் நடத்துவது தான் சிறந்தது.

Read more