அதிமுக வலுவாக இருப்பது அவசியம்!

தமிழகம் இத்தனை ஆண்டுகாலம் ஒரு பகுத்தறிவு மிக்க மாநிலமாக பயணித்ததில் திமுக – அதிமுக என்ற மாபெரும் கட்சிகளின் பங்கு அதிகம். ஒருவேளை இவற்றில் ஒன்று இல்லாமல் போய் வேறொரு கட்சி இவற்றில் ஒன்றின் இடத்தை பிடித்தாலும் அது தமிழகத்திற்கு சிக்கலே. அதற்காகவே அதிமுக என்ற இயக்கம் ஒரு வலுவான இயக்கமாக தமிழகத்தில் நிலைத்திருப்பது அவசியம் என நினைக்கிறேன்.

Read more

முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றம் தந்தாரா? வாங்க அலசலாம்

முதலமைச்சராக திரு ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று சில வாரங்களே ஆகியுள்ளன என்ற சூழ்நிலையில் அவருடைய செயல்பாட்டை நம்மால் சரியான முறையில் எடை போட முடியாதுதான் என்றாலும் கூட அவர் முன்னெடுக்கும் விசயங்கள், அவர் நடந்துகொள்ளும் விதம் நல்ல விதமான நம்பிக்கையை நம்மிடம் அளிக்கிறதா என்பது பற்றித்தான் இங்கே அலச இருக்கிறோம். உங்களது கருத்துகளையும் நீங்கள் தவறாமல் இங்கே பதிவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Read more

ஏமாற்றியது ரஜினி, உயிர் துறப்பது நீயா? ரசிகனே விழித்துக்கொள்

ரஜினி அவர்களின் கட்சி ஆரம்பிக்கப்போவது இல்லை என்ற அறிவிப்புக்கு முழு பொறுப்பாளி அவரே. அதனால் ஏற்படும் விமர்சனம் மற்றும் அவமானத்தை தூக்கி சுமக்க வேண்டியவரும் அவரே. அதனை முதலில் அனைவரும் உணருங்கள். நீங்கள் வெறும் ரசிகர்கள் தான், அவரது முடிவெடுக்கும் விசயத்தில் எள்ளளவும் நீங்கள் தாக்கத்தை ஏற்படுத்தாத போது அந்த செயலுக்கு நீங்கள் ஏன் பொறுப்பாளியாக ஆக வேண்டும். அவரது உடல்நலனை பிரதானமாகக் கொண்டு இத்தனை ஆண்டு காலம் இழுத்தபடித்த ஒரு விசயத்தில், அவரை நம்பியோரை நிலைகுலையச்செய்திடும் என்று தெரிந்தும் ஒரு முடிவை எடுக்கிறார் எனில் அவரே அதற்காக வாதாட வேண்டியவர்.

Read more

கமல் – திமுக கூட்டணி நடக்குமா? நடந்தால் என்னவாகும்?

யார் முதல்வர் என்ற கேள்விக்கு பதில் தேட வேண்டிய அவசியமும் இந்த கூட்டணியால் ஏற்படும். ஸ்டாலின் அவர்கள் தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அதில் எந்தவித சமரசமும் நடக்காது என்ற போதிலும் கூட கமல் அந்த கூட்டணிக்குள் நுழையும் போது நிச்சயமாக பெரிய பதவி ஒன்றை தனது கட்சிக்காக கேட்கவே செய்வார். அது துணை முதல்வர் பதவி வரைக்கும் கூட செல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்தக்கூட்டணி அரங்கேறும் பட்சத்தில் கமல் அவர்களின் கட்சிக்கு சில வெற்றிகள் சாத்தியமாகலாம்.

Read more

கமலின் 7 அதிரடி திட்டங்கள், வரவேற்பும் சந்தேகங்களும்

இல்லத்தரசிகளின் உழைப்பு அங்கீகரிக்கப்படும் வகையில் அவர்கள் செய்யும் வேலைக்கு சரியான ஊதியம் வழங்கப்படும். விவசாயத்தை “வருமானமும் நேர்மையும் லாபமும் உள்ள தொழில்” ஆக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்திற்கு “பசுமைப் புரட்சி பிளஸ்” என பெயரிடப்பட்டுள்ளது.

Read more

ரஜினி தாக்கத்தை ஏற்படுத்துவார் | எப்படி என அறிய முழுமையாக படியுங்கள்

ரஜினி எந்தவிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனில் ஆட்சி அமைக்கப்போவது திமுகவா அல்லது அதிமுகவா என்பதில் தான் ரஜினி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார். சொற்ப வாக்குகளே வெற்றியைத் தீர்மானித்து இருக்கிற சூழலில் ரஜினி அவர்கள் பெறக்கூடிய வாக்குகள் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும். ஆட்சியமைக்க திமுகவிற்கு சாதகமான சூழல் நிலவுவதாக கருத்தப்படக்கூடிய சூழ்நிலையில் அந்த வாய்ப்பை திமுகவிடம் இருந்து ரஜினியால் தட்டிப்பறித்து அதிமுகவிடம் கொடுக்க முடியும். இல்லையேல் அதிமுகவிற்கு போகவேண்டிய வாக்குகளை பெற்று திமுகவிற்கு வெற்றியை எளிதாக்கலாம். ஆக ரஜினி அவர்கள் இந்தத் தேர்தலில் தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்துவார். அவர் ஆட்சியை பிடிப்பார் என்பது சாத்தியமில்லாத ஒன்று.

Read more

என். டி. ராமராவ் பார்முலா ரஜினிக்கு ஒத்துவருமா?

என். டி. ராமராவ் ஆந்திராவில் கட்சி துவங்கிய சில மாதங்களிலேயே ஆட்சியை பிடித்தார் என்பதையே உதாரணமாகக்கூறுகிறார்கள். என். டி. ராமராவ் எந்த அளவிற்கு புகழ்பெற்ற நடிகரோ அதற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத திரைப் புகழ் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ஒரு வெற்றிக்கு திறமையும் புகழும் மட்டுமே போதுமானது கிடையாது. மாறாக, சரியான தருணமும் சூழ்நிலையும் மிகவும் அவசியமான காரணிகள்.

Read more

போராட்டங்களில் வன்முறை, தீர்வை தருமா?

தனி நபர்களாக இருக்குபோது ஒழுக்கத்தை கடைபிடிக்கிற பலர் , கூட்டமாக சேரும்போது வன்முறையாளர்களாக எளிதில் மாறிவிடுகிறார்கள். வன்முறை ஒருபோதும் மக்களின் ஆதரவை பெற்றுத்தராது. பாமக அரசியல் கட்சியின்

Read more

சாதிய தீண்டாமை செய்திடும் மூடர் கூட்டம் இன்றும் உண்டு

கடலூர் மாவட்டத்தில் இருக்கிறது தெற்குத்திட்டை பஞ்சாயத்து. இங்கு வன்னியர் குடும்பங்கள் அதிகமாகவும் பிராடுத்தப்பட்ட பிரிவு மக்கள் குறைவாகவும் வசிக்கிற பஞ்சாயத்து. இந்த முறை இந்தப் பஞ்சாயத்து தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களால் மட்டுமே தலைவர் பதவிக்கு போட்டிபோட இயலும்.

Read more

நல்ல வாய்ப்பை தவறவிட்டாரா விஜயகாந்த்?

இப்போதைய அரசியல் சூழ்நிலையில் விஜய்காந்த் முந்தைய வேகத்தோடு இருந்தாரெனில் மிகப்பெரிய மாற்றத்தை அவரால் செய்திருக்க முடியும். கட்சியை பெரிய அளவில் அவர் கொண்டு சேர்த்திருக்க முடியும்.
இப்படிப்பட்ட ஒரு அற்புதமான சூழலை விஜயகாந்த் தவறவிட்டுவிட்டார் என்பதே எதார்த்தமான உண்மை.

Read more