கவியரசு கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு

மனிதர்கள் வந்துபோகும் இந்த தரணியிலே மறைந்தும் நிலைத்து நிற்கும் வல்லமை உடையோர் “படைப்பாளிகள்” தான். தமிழ் தாய் ஈன்றெடுத்த படைப்பாளிகளில் என்றும் தமிழக மக்களின் உள்ளங்களில் உயிர்ப்போடு வாழ்ந்துகொண்டிருப்பவர் கவியரசர் கண்ணதாசன். பிறப்பில் துவங்கி இறப்பு வரைக்கும், இளமையில் துவங்கி முதுமை வரைக்கும், மகிழ்ச்சியில் துவங்கி துன்பம் வரைக்கும், தோல்வியில் துவங்கி வெற்றி வரைக்கும் அனைத்து உணர்வுகளுக்குமான கவிதைகளை தமிழுக்குத் தந்தவர் கவியரசு கண்ணதாசன். கவியரசு கண்ணதாசன் அவர்கள் வெறும் கவிதைகளோடு தன் எல்லையை சுருக்கிக்கொள்ளாமல் அரசியல், மதம், ஆன்மீகம் என பரந்துபட்டு சிந்தித்து செயலாற்றினார்.

Read more

கண்ணதாசன் கவிதைகள்

அனுபவமே கடவுள் பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது

Read more

கவலைகளின் அளவு எப்படி இருக்க வேண்டும்? கண்ணதாசன்

கையளவாக இருக்கும்
வரை தான் கண்ணீருக்கும்
வேலை.. அது மலையளவு
ஆகும் போது மனமும்
மரத்துப் போகும்..!

மன்னிக்கப்படுவோம்
என்பதாலேயே பல தவறுகள்
செய்கிறோம்.. ஒரு
நொடிப்பொழுதில் விழும் அடி
ஆறுவதற்கு காலங்கள் ஆகுமே
என்பதை உணர்வதில்லை..!

Read more

நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பது எப்படி? – கண்ணதாசன்

முகத்துக்கு நேரே சிரிப்பவன்,
முகஸ்துதி செய்பவன்,
கூனிக் குழைபவன்,
கூழைக் கும்பிடு போடுபவன்,
இவனெல்லாம் நல்ல நண்பன் மாதிரியே தோற்றமளிப்பான்.

Read more

கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கேட்டதற்கு…

அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

Read more

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் : வாழ்க இல்லறம் !

தகராறு இல்லாத குடும்பம் இல்லை..
வீட்டுக்கு வீடு வாசப் படி..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை..
யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை..
ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால்
பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை..

Read more