ரசவாதி புத்தகம் யார் வாசிக்கலாம்? | The Alchemist Tamil Book Review

ரசவாதி என்கிற புத்தகத்தின் பெயரைப் பார்த்தவுடன் இது ஏதோ மந்திரம் சார்ந்த நூல் என்றோ வேதியியல் சார்ந்த நூல் என்றோ நினைத்துவிட வேண்டாம். வாழ்க்கையின் விளிம்பு நிலையில் யாருடைய ஆதரவும் இல்லாது இருந்தாலும் குறிக்கோளில் ஆழமான காதலும் அடைய முடியும் என்கிற நம்பிக்கையும் இருந்தால் உங்களுக்கு உதவிட இந்த பிரபஞ்சமே வரிந்து கட்டிக்கொண்டு வரும் என்பதை நிரூபிக்கும் ஒரு நாவல் தான் இந்தப்புத்தகம். நிச்சயமாக உங்களது அலமாரியை அலங்கரிக்க வேண்டிய ஒரு புத்தகம் தான்.


நூல்: ரசவாதி(The Alchemist)
நூலாசிரியர்: பாலோ கொயலோ(Paulo Coelho)
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
விலை : ₹262

ரசவாதி புத்தகம் சொல்லும் விசயம் என்ன?

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஆடு மேய்க்கும் சாண்டியாகோ எனும் ஒரு நபர் தனது இலக்கின் மீது தீவிரமாக இருக்கிறார். எப்படியேனும் தன்னுடைய இலக்கை அடைந்திட வேண்டும் என அவர் ஒவ்வொரு நொடியும் அது பற்றியே நினைத்துக்கொண்டு இருக்கிறார். அவருடைய நினைவு எப்போதுமே தன் கனவுகளை துரத்திச் செல்வதிலேயே இருப்பதால் இந்த பிரபஞ்சமே அவர் இலக்கை அடைய உதவுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது.

பிரபஞ்சம் என்றவுடன் மந்திரம், மாயம், தெய்வ சக்தி என்றெல்லாம் நினைத்துவிட வேண்டாம். சாண்டியாகோ சந்திக்கும் மனிதர்களும் அவர் சந்திக்கும் சூழ்நிலையும் அவருக்கு சாதகமாக இருந்துள்ளது. அதற்கு முக்கியக்காரணம், அவர் தனது இலக்கின் மீது கொண்ட தீராத காதல் கொண்டு இருந்ததால் இந்த பிரபஞ்சம் அவர் சந்திக்கும் மனிதர்கள் மூலமாகவும் அவருக்கு தகுந்த சூழ்நிலையை உருவாக்கி கொடுப்பதன் மூலமாகவும் இலக்கை அடைய உதவி இருக்கிறது.

ஒரு விசயத்தை ஆழமாக நம்பினால் அது நிச்சயமாக நடந்துவிடும் என பலர் சொல்லக் கேட்டு இருப்போம். அதைத்தான் இந்த நாவலில் உள்ள சாண்டியாகோவின் வாழ்க்கை நிகழ்வுகளும் நமக்கு உணர்த்துகின்றன.

உங்கள் இலக்கின் மீது அதிக நம்பிக்கை கொண்டு முயற்சித்தால் இந்த பிரபஞ்சமே நீங்கள் இலக்கை அடைய வாய்ப்பை உண்டாக்கும். ஒருவேளை உங்கள் இலக்கின் மீதான காதல் குறைந்து போனால் பிரபஞ்சமும் உங்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடும்.

Click Here To Download/Buy

இன்னும் பல புத்தகங்கள் பற்றிய பதிவுகள் இருக்கின்றன. அவற்றையும் வாசியுங்கள்.

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published.