போட்டிகளுக்கு ஏற்ற காமராஜர் கவிதை | Kamarajar Kavithai In Tamil

கர்ம வீரர் காமராஜர் தமிழக அளவில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் மிகப்பெரிய ஆளுமை மிக்க தலைவராக திகழ்ந்தவர். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி உள்ளிட்டவற்றில் பல மாணவர்கள் தேர்வு செய்திடும் ஓர் ஒப்பற்ற தலைவராக காமராஜர் அவர்கள் திகழ்கிறார். அவருடைய வாழ்க்கையையும் முக்கிய நிகழ்வுகளையும் காமராஜர் கவிதை (Kamarajar Kavithai In Tamil) என உங்களுக்கு தருவதில் மகிழ்ச்சி.

கறைபடியா கரங்கள் காமராஜர் கவிதை

தமிழகத்தின் கல்விக்கண் திறக்க
விருதுநகரில் ஜூலை 15, 1903 ஆம்
நாளன்று விழிக்கண் திறந்தார்
தலைமகனார் காமராஜர்…



அம்மாவால் ஆசையாக “ராசா” என
அழைக்கப்பட்டு “காமாட்சி” என்று
தழுவி காமராஜர் என நின்றது…



தலைவர்களின் சுதந்திர பேச்சுக்களால்
உள்ளம் கவரப்பட்டு காங்கிரஸ் உறுப்பினர் ஆனால் 16 ஆம் வயதினிலே …



இளம் வயதிலேயே சிறையின் வாசம்
இவர் வசம் வந்துவிட துணிச்சலும்
கூடவே வந்து சேர்ந்தது….



தன் கஷ்டங்களை
ஒருபோதும் நினைக்காது
தேசத்தின் நலன்களில்
முழுமையாய் ஈடுபட்டவர்….



பசிக்கு ஆடு மாடு மேய்த்தவர்களை
பசிக்கு உணவிட்டு கல்வி எனும்
பெரும் வரத்தை ஏழைக்குழந்தைகளுக்கு
இலவசமாய் தந்தவர்…



எதிர்க் கட்சியினரும் நல்லாட்சிக்கு
உதாரணமாய் சொல்லிவரும்
காமராஜர் ஆட்சி தந்தவர்…



தன் தாயென்றாலும்
சிறப்பு சலுகை கூடாதென்று
அதிகாரியை கடிந்து கொண்ட
உத்தம புதல்வர்…



நேர்மையாய் நடந்துகொள்ளும்
அதிகாரிகளை நொந்து கொள்ளும்
இக்கால ஆட்சியாளர்கள் போலல்லாமல்
தட்டிக்கொடுத்து பாராட்டும் நல்லவர்….



பிரதமர் ஆகும் வாய்ப்பிருந்தும்
தனக்கு அது தகுந்த பதவியல்ல
என்றெண்ணி தகுந்தோரை
அமரச்செய்து அழகு பார்த்தவர்…..



என்றெல்லாம் மக்கள் பணத்தில்
நிறைவேற்றும் திட்டங்களுக்கு
மக்கள் பணத்திலேயே விளம்பரம்
போட்டுக் போலி அரசியல்வாதிகள்
போலல்லாமல் விளம்பரம் செய்திட செலவாகும் பணத்தையும் நல்ல திட்டங்களில் செலவிட்ட தலைவர் காமராஜர்….



துவண்ட வேட்டி கட்டியிருந்தாலும்
தமிழக மக்களின் வாழ்வு பொழிவுற
என்றும் உழைத்த மாமனிதன் காமராஜர்…..



தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை
கல்விக்கண் திறந்தவர், பெருந்தலைவர், கருப்பு காந்தி
என எத்துனை புகழ் பாடினும்
சாதாரண மனிதனாகவே இருக்க விரும்பிய மாமனிதர்…..



சொத்துக்கள் சேர்த்து வைத்தால்
வரலாற்றில் இடம் பிடிக்கலாம்
என்று எண்ணும் இன்றைய அரசியல்
வியாதிகளுக்கு “நேர்மையான நல்லாட்சி” தான் வரலாற்றில் இடம் தரும் என்ற மருந்தை அன்றே தந்த மருத்துவர்…



வரலாற்றின் பக்கங்களில் இனியொரு பெயர் காமராஜருக்கு நிகராக எழுதப்படும் வாய்ப்பு இல்லாத அளவிற்கு மக்களாட்சி தந்த மகத்தான தலைவர் காமராஜர்….



தமிழகத்தின் தலைமகன்
நேர்மையின் புதல்வன்
நல்லாட்சியின் வேந்தன்
பாரத ரத்னா வென்ற
தவப் புதல்வன் காமராஜர்….

வரும் தலைமுறைக்கு
நல்லாட்சி செய்திடவும்
நேர்மையாக இருந்திடவும்
மிகப்பெரிய வாழ்வியலை
உதாரணமாய் தந்துவிட்டு
போன பெருமகனாரின்
வாழ்வியலை பின்பற்றுவோம்!

Here, kavithai is availableilable in tamil about the massive leader kamarajar. Students can use this kamarajar kavithai in school competitionsetition. Whenever you use this kamarajar kavithai in tamil do some changes, add your points.

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *