நல்ல பெற்றோராக இருப்பது எப்படி? 5 விசயங்கள்

ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகள் வெற்றியாளர்களாக வர வேண்டும் என்றே விரும்புகிறார்கள். தங்கள் ஒட்டுமொத்த வாழ்வையும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்காக இழக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் சிலரது பிள்ளைகள் வெற்றியாளராக மாறுகிறார்கள், சிலரது பிள்ளைகள் பின்னடைவை சந்திக்கிறார்கள். பிள்ளைகள் இளம் வயதில் இருக்கும் போது பெற்றோர்கள் செய்திடும் ஒவ்வொரு விசயமும் பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை பல பெற்றோர்கள் உணர்ந்து இருப்பது இல்லை. இங்கே நான் குறிப்பிடப்போகும் 5 எளிய விசயங்கள் உங்களை நல்ல பெற்றோராக மாற்றும் என நம்புகிறேன்.

Read more

ஹாரி பாட்டர் எழுத்தாளர் ஜே கே ரௌலிங் எப்படியெல்லாம் நிராகரிக்கப்பட்டார் தெரியுமா?

எந்த விதத்தில் பார்த்தாலும் எனக்கு தெரிந்தவரையில் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தவள் நானாகத்தான் இருப்பேன்

ஹாரிபாட்டர் என்ற நாவலின் மூலமாக பில்லியனர் ஆக மாறிய முதல் பெண் எழுத்தாளர் என்ற பெருமைக்கு உரிய ரௌலிங் சொன்ன வார்த்தைகள் தான் இவை. அடுத்த நாவல் எப்போது வரும்? ஹாரிபாட்டருக்கு என்னவாகும்? என உலகம் முழுமைக்கும் இவரது அடுத்த பதிவிற்க்காக காத்திருந்தவர்கள் கோடி. இவருடைய புத்தகங்கள் 73 மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு கிட்டத்தட்ட 20 மில்லியன் பணத்தை சம்பாதித்த இவர் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நபரா? என உங்களின் புருவம் உயரலாம். ஆனால் அதுதான் உண்மை.

Read more

கொரோனா காலத்தில் எப்படி நடந்துகொள்வது? – ஐக்கிய நாடுகள் அமைப்பு கொடுக்கும் ஆலோசனை

உலக சுகாதார நிறுவனம் ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியையும் அல்லது 75 நிமிடங்கள் அதி தீவிர உடற்பயிற்சியையும் பரிந்துரைக்கிறது. இதற்காக சில பரிந்துரைகளை வழங்கி இருக்கிற உலக சுகாதார நிறுவனம் சரியான நபர்களின் ஆன்லைன் வீடியோக்களையும் பார்த்து உடற்பயிற்சியை வீட்டிலிருந்தே மேற்கொள்ளலாம் என கூறியிருக்கிறது.

Read more

கொரோனா காலத்தில் பெற்றோர்கள் நடந்துகொள்வது எப்படி? UNICEF ஆலோசனை

தற்போது நாம் சந்தித்துக்கொண்டு இருக்கும் ஊரடங்கை இதுவரைக்கும் சந்தித்ததே இல்லை. பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் ஓடாமல் இத்தனை நாட்கள் இருக்க முடியுமா என நாம் எக்காலத்திலும் நினைத்துபார்த்திருக்கவே மாட்டோம். ஒரே இடத்தில் அடைந்திருப்பது, வருமான குறைவு போன்றவை போதும் ஒவ்வொருவருக்கும் மன அழுத்தம் உண்டாக்கிட. ஆனால் நீங்கள் ஒரு எதார்த்தத்தை உணர்ந்துகொள்ள வேண்டும், நீங்கள் மட்டுமே இத்தகைய நிலையில் இருக்கவில்லை. சரியாக சொல்லப்போனால் உலகம் முழுமைக்கும் இப்படித்தான் இருக்கிறது. உங்களைக்காட்டிலும் பலமடங்கு ஏழை எளியவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

Read more

கணவன்மார்களே, ஒரு மனைவியின் நிலை புரிந்ததா உங்களுக்கு – யாழினி

ஏன் எப்போ பாத்தாலும் கத்திகிட்டே இருக்க …வர வர உனக்கு ஏதோ ஆயிடுச்சு.. இப்படி பல்வேறு குடும்பங்களில் ஆண்கள் பேசுவதை கேட்டிருக்கலாம். வீட்டிற்குள்ளேயே அடைபட்டு கிடந்தால் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் அதே நிலை வரும். கணவன்மார்களே, ஒரு மனைவியின் தனிமை புரிந்ததா உங்களுக்கு – யாழினி

Read more

குழந்தைகளுக்கு அறிவியலை போதியுங்கள் யூகங்களை அல்ல

சிந்தித்தல் >> சோதனை >> முடிவு : இந்தப்படிநிலைகளை நாம் அறிவியல் எனக்கூறலாம். இதற்கு மாற்றாக இன்னும் சில விசயங்கள் இருக்கின்றன. அவற்றில் சிந்தித்தல் என்பது மட்டுமே இருக்கும். சோதனை என்பது இருக்கவே இருக்காது. ஒருவேளை சிந்தித்து சொல்லப்படும் விசயம் நடந்துவிட்டால் சோதனை வெற்றியாகக்கொள்ளப்படும் இல்லையெனில் அப்படியே விடப்பட்டுவிடும். இதைத்தான் நான் இங்கே “யூகங்கள்” என குறிப்பிடுகிறேன். யூகங்களை குழந்தைகளுக்கு ஏன் கற்பிக்கக்கூடாது என்பதற்கு முன்னால் நாம் அறிவியல் என்றால் என்ன என்பதற்கான விரிவான விளக்கத்தை தெரிந்துகொள்வோம்.

Read more

ஒரு தாய் நினைத்தால் அறிஞனை உருவாக்கலாம் | எடிசன் என்ற அறிஞன் உருவான கதை

ஒரு குழந்தை மூவரைத்தான் எந்தவித பாகுபாடும் இல்லாமல் நம்பத்துவங்குகிறது. அம்மா, அப்பா மற்றும் அதன் ஆசிரியர். இந்த மூவரில் எவரேனும் ஒருவர் அந்தக்குழந்தையின் பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கு ஊக்கமளித்தால் நிச்சயம் ஒருநாள் அந்தக்குழந்தை மிகப்பெரிய ஆளுமையாக இந்த சமூகத்தில் உருவெடுத்து நிற்கும். குறிப்பாக, ஒரு குழந்தையை அதிகம் நேசிக்கின்ற அம்மா ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு அந்தப்பொறுப்பு என்பது அதிகம் இருக்கிறது. இந்தப்பகுதியில் நாம் பார்க்கப்போகும் “கண்டுபிடிப்புகளின் பேரரசன் – தாமஸ் ஆல்வா எடிசன்” அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவம் என்பது மிகச்சிறந்த உதாரணமாக இருக்கும்.

Read more

நான் சந்தோசமா இருக்கனும் அவ்வளவுதான்

அறிவியல் பூர்வமாகவோ அல்லது எதார்த்தமாகவோ சொல்லவேண்டுமெனில் இந்த வாழ்க்கை என்பதும் உறவுமுறைகள் என்பதும் பிரிவுகளின் போது கண்ணீர் என்பதும் அர்த்தமற்றது தான். ஆனால் இந்த உலகம் இவ்வளவு அமைதியாக அழகாக கடந்து போவதற்கு காரணமும் அர்த்தமற்ற அவற்றை பின்பற்றுவதனால் தான்.

Read more

குழந்தைகளின் கல்வியில் கண்மூடித்தனமாக முதலீடு செய்வது சரியா?

இந்தியப்பெற்றோர்கள் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் படிப்பிற்காக தங்களது அன்றாட வருமானம், சேமிப்பு அனைத்தையும் செலவு செய்கின்றனர். அதேபோல பிள்ளைகளின் கல்விக்காக கடன் வாங்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் கணிசமாகவே அதிகம் தான். இதில் ஒரு சிறப்பம்சம் இருக்கிறது, சில பத்தாண்டுகளுக்கு முன்பு அடுப்பூதும் பெண்களுக்கு எதற்கு கல்வி என கேட்டவர்களும் கூட இன்று பெண் பிள்ளைகளையும் உயர் படிப்புகள் வரை படிக்க வைக்க நினைக்கிறார்கள். இதற்காக தங்களது தலையையும் அடமானம் வைக்க இந்தியப்பெற்றோர்கள் துணிகிறார்கள்.

Read more

உங்கள் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் அபாயம் குறித்து எப்படி சொல்லிக்கொடுக்க போகிறீர்கள்?

சுற்றுசூழல் பொறியாளரும் ஆர்வலருமான ஜென்னா ஜெம்பெக் நேஷனல் ஜியோகிராபிக் சேனலில் கடல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளராகபணியாற்றுகிறார். 2015 ஆம் ஆண்டு நடத்திய ஆராய்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் 8.8 மில்லியன் டன்கள் குப்பை கடலில் கலப்பதாக அறிந்துகொண்டார், அதிர்ச்சியும் அடைந்தார். இதனால் தொலைக்காட்சியில் பணியாற்றுவதோடு நின்றுவிடாமல் அரசாங்கம் மற்றும் பல தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து இதற்கு தீர்வு காணும் முயற்சியிலும் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்.

Read more