எம்லைன் பங்கர்ஸ்ட் : பெண்கள் வாக்குரிமைக்காக போராடி வென்ற பெண் | Emmeline Pankhurst (1858 – 1928)

எம்லைன் பங்க்ஹர்ஸ்ட் ஒரு முன்னணி பிரிட்டிஷ் கால பெண்கள் உரிமை ஆர்வலராக இருந்தார், அவர் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை வென்றெடுக்க இயக்கத்தை வழிநடத்தினார். அவர் இறப்பதற்கு முன்னதாக 21 வயதை எட்டிய பெண்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றனர்.

பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்க வழிவகை செய்திடும் சட்டம் முதன் முதலாக செப்டம்பர் 19,1893 அன்று நியூஸிலாந்து [New Zealand] நாட்டில் தான் கொண்டுவரப்பட்டது. உலகிலேயே முதல் முறையாக பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை கொடுத்த நாடு என்ற பெருமையை நியூஸிலாந்து நாடு இதன் மூலமாக பெறுகிறது. 1902 இல் ஆஸ்திரேலியா, 1906 இல் பின்லாந்து, 1913 இல் நார்வே, 1915 இல் டென்மார்க் என ஒவ்வொரு நாடும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை கொடுத்து வந்தது. அண்மையில் 2011 ஆம் ஆண்டு தான் சவூதி அரேபியாவில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

இப்படி பல நாடுகள் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை கொடுத்திருந்தாலும் கூட இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படாமல் இருந்தது. பிரிட்டிஷ் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்படவேண்டும் என போராடியவர் தான் எம்லைன் பங்க்ஹர்ஸ்ட். ஜூலை 14, 1858 இல் மான்செஸ்டர் பகுதியில் இருக்கும் ஒரு தீவிர அரசியல் குடும்பத்தில் பிறந்தார் எம்லைன் பங்கர்ஸ்ட். 1879 இல் ரிச்சர்ட் பங்கர்ஸ்ட் என்பவரை மணந்து கொண்டார். இவர் தான் பெண்கள் திருமணத்திற்கு முன்னும் பின்னும் சொத்துக்களை வைத்திருக்க வழிவகை செய்திடும் சட்டங்களை கொண்டுவர காரணமாக இருந்தவர். இவரது திடீர் மரணம் [1898] எம்லைன்க்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

vote for nation

1889 ஆம் ஆண்டில், எம்லைன் மகளிர் உரிமக் கழகத்தை நிறுவினார், இந்தக் கழகத்தின் முக்கிய நோக்கம் திருமணமான பெண்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பெறுவது ஆகும். அக்டோபர் 1903 இல், அவர் மிகவும் போர்க்குணமிக்க மகளிர் சமூக மற்றும் அரசியல் ஒன்றியத்தை (WSPU) உருவாக்கினார். இந்த அமைப்பு அதன் செயல்பாடுகளால் பிரபல்யமானது. இந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கு ‘வாக்குரிமை’ என பெயர் சூட்டப்பட்டது. இந்த அமைப்பில் எம்லைன் மகள்கள் கிறிஸ்டபெல் மற்றும் சில்வியா இருவரும் தீவிரமாக இருந்தனர். பிரிட்டிஷ் அரசியல்வாதிகள், பத்திரிகைகள் மற்றும் பொதுமக்கள் இந்த அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டங்கள், ஜன்னல்களை அடித்து நொறுக்குதல், தீக்குளிப்பு மற்றும் உண்ணாவிரதம் ஆகியவற்றால் ஆச்சரியப்பட்டனர். அதேசமயம், இந்த அமைப்பின் மீது இதே காரணங்களுக்காக விமர்சனமும் செய்யப்பட்டது.

இப்படி போராட்டம் நடந்திடும் அமைப்பினர் கைது செய்யப்பட்டால் அவர்கள் சிறைக்குள்ளும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதனால் ”Cat and Mouse’ Act எனும் பரவலாக அறியப்பட்ட சட்டநடைமுறை பின்பற்றப்பட்டது. அதாவது, சிறையில் உண்ணாவிரதம் நடத்துகிறவர்கள் உடல் மெலிந்திடும் போது அவர்கள் வெளியே விடப்படுவார்கள். வெளியே உடல் தேறிய பிறகு மீண்டும் கைதுசெய்யப்படுவார்கள்.

இவர்களின் தொடர் முயற்சியின் பலனாக 1918 இல் 30 வயது நிரம்பிய பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. 1928 [14 June 1928] இல் 21 வயது நிரம்பிய ஆண் பெண் இருவருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. இதற்கு பின்னர் தான் எம்லைன் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் மறந்துபோன சுதந்திர போராட்ட வீராங்கனை : அஞ்சலை அம்மாள்
பெண்களுக்கான கட்டுரைகள் பல இங்கே உள்ளன, படிக்கலாம்






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *