2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வென்றவர்கள் யார்? அவர்களது சாதனைகள் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல்,மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய 6 பிரிவுகளில் மிகப்பெரிய பங்களிப்பு செய்திடும் சாதனையாளர்களை போற்றும் விதத்தில் உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றியாளர்களுக்கு விருதுடன் SEK 9,000,000 (Swedish Krona) வழங்கப்படும். இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ. 7 கோடியே 22 லட்சம். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. பிற துறைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது.

அண்மையில் 2022 ஆம் ஆண்டிற்கான நோபல் விருது வென்றவர்களின் விவரங்கள் நோபல் பரிசு தேர்வு கமிட்டியால் வெளியிடப்பட்டது. யாருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது, அவர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன என்பதை விரிவாக இந்தப்பதிவில் காணலாம்.

  1. 2022 அமைதிக்கான நோபல் பரிசு
  2. 2022 பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு
  3. 2022 மருத்துவ துறையில் நோபல் விருதுகள்
  4. 2022 இயற்பியல், வேதியல் நோபல் விருதுகள்
  5. 2022 இலக்கியத்துக்கான நோபல் பரிசு

2022 அமைதிக்கான நோபல் பரிசு

2022 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஒரு வழக்கறிஞர் மற்றும் இரண்டு அமைப்புகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. 

பெலாரசை சேர்ந்த வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு [Ales Bialiatski] அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ரஷ்ய போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் உரிமைக்காக போராடியதற்காக அலஸ் பியாலியாட்ஸ்கிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பு நினைவகம் [Organization memorial], ரஷ்யா உக்ரைன் மேல் போர் தொடங்கியதில் இருந்து நடக்கும் போர்க் குற்றங்களைப் பற்றித் தொடர்ந்து உலக அரங்கில் வெளிப்படுத்தி வருகிறது. அதற்காக அந்த அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் உரிமைகளுக்கான உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பு [Organization Centre for Civil Liberties], மனித உரிமைகளைக் காக்கவும், அதனை வலுப்படுத்தவும் தொடங்கப்பட்டது. மேலும் உக்ரைன் ஜனநாயகம் மேம்படுத்தி வலுப்படுத்த பெரும் பங்கு அளித்துள்ளனர். அதற்காக அந்த அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 

2022 ஆம் ஆண்டிற்க்கான நோபல் பரிசு மூன்று அமெரிக்க அறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பென் பெர்னாக் [Ben S. Bernanke], டக்ளஸ் டைமண்ட் [Douglas W. Diamond], பிலிப் டிவிக் [Philip H. Dybvig] ஆகிய மூவருக்கும் இந்த ஆண்டிற்கான நோபல் விருது பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் வங்கிகள், நிதி நெருக்கடிகள் தொடர்பான ஆய்வுகளை விரிவாக நடத்தி இருக்கிறார்கள்.

பொருளாதார வளர்ச்சியில் வங்கிகள் ஆற்றும் முக்கியப் பங்கு என்ன, வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் எப்படி அமைய வேண்டும், வங்கித் துறையில் ஏற்படும் நெருக்கடிகளுக்குக் காரணம் என்ன, அவற்றை எப்படித் தடுக்கலாம், நிதி நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை மேற்கொண்டு ஆராயவும் தீர்வுகளைக் காணவும் மூவருடைய பணிகளும் பெரிதும் உதவியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

2022 மருத்துவ துறையில் நோபல் விருதுகள்

மருத்துவத்துறைக்கான 2022 ஆம் ஆண்டின் நோபல் விருது ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மரபியல் நிபுணரான ஸ்வாண்டே பாபோவுக்கு [Professor Svante Pääbo] வழங்கப்பட்டது. நவீன மனிதர்களின் அழிந்துபோன உறவினராக கருதப்படும் நியாண்டர்டாலின் மரபணுவை வெற்றிகரமாக வரிசைப்படுத்தியதற்காக ஸ்வான்டே பாபோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. மனிதகுலத்தின் ஆரம்பகால மூதாதையர்களில் இருவரின் மரபணு அடையாளத்தைக் கண்டுபிடித்தமைக்கும், மனித பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய பாதையை திறந்ததற்கும் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

2022 இயற்பியல், வேதியல் நோபல் விருதுகள்

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அலைன் ஆஸ்பெக்ட் [Alain Aspect] (பிரான்ஸ்), ஜான் எப் கிளாசர் [John Clauser] (அமெரிக்கா), ஆண்டன் ஜீலிங்கர் [Anton Zeilinger] (ஆஸ்திரியா) ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் குவாண்டம் துகள்களின் நிலைகளைப் பற்றி ஆய்வினை செய்துள்ளனர். அதில் ஒரு துகள் இரண்டு தனித்தனி துகள்களாக பிரிக்கப்பட்டாலும் அவை ஒரு துகள் போல செயல்படுகின்றன என்பதை கண்டறிந்துள்ளனர். இது குவாண்டம் தொழில்நுட்பத்தில் புதிய பாதையை திறந்துள்ளது. 

வேதியிலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் கரோலின் பெர்டோசி [Carolyn Bertozzi], டென்மார்க்கின் மோர்டன் மெல்டல் [Morten Meldal] மற்றும் அமெரிக்காவின் பேரி ஷார்ப்லெஸ் [Barry Sharpless] ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மூலக்கூறுகள் ஒருகிணைப்பு மற்றும் உயிரிக்க வேதியியல் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சிக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட உள்ளது.

2022 இலக்கியத்துக்கான நோபல் பரிசு

2022 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸுக்கு [[Annie Ernaux]] அறிவிக்கப்பட்டுள்ளது. L Occupation என்ற நூலை எழுதியதற்காக அவரது இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. “தனிப்பட்ட அனுபவங்கள், பிரிவினைகள் குறித்து ஆழமாகவும் தைரியமாகவும் எழுதும் திறனுக்காக” வழங்கப்படுகிறது.

அவரது எழுத்தில்,  பாலினம், மொழி மற்றும் வர்க்கம் தொடர்பான வலுவான ஏற்றத்தாழ்வுகளால் பாதிப்பிற்கு உள்ளாகும் வாழ்க்கையை ஆராய்கிறார். அவரது இந்த ஆசிரியர் பயணம் மிகவும் சிக்கலானது, சவாலானது.

நோபல் பரிசு சில சுவாரஸ்ய தகவல்கள்

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *