குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாவது ஏன் ? | Need fast and final judgement against child sexual abuse | Tamil

அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு சமூகத்தில் சில திருட்டுகள் , கொலைகள் , வன்புணர்வு குற்றங்கள் நடைபெறுவது இயல்பானது . அப்படி நடைபெறுகின்ற குற்றங்களை நம்மால் தடுக்கவும் முடியும் .

 

கொடூர குற்றங்கள் அரங்கேறுகின்றன

 

ஆனால் அண்மையில் நடந்துவருகின்ற சிறு திருட்டு முதல் மிக கொடுமையான பாலியல் குற்றங்கள் வரை அனைத்துமே எதிர்பாராததாக மிக கொடுமையானதாக இருகின்றது .

 

 

இதற்கு முக்கிய காரணம் சரியான விசாரனை அமைப்புகள் இல்லாமல் போனதும் உடனடியாக குற்றங்களை விசாரித்து தீர்ப்பினை வழங்கக்கூடிய அமைப்புகள் இல்லாமல் போனதும் தான் முக்கிய காரணங்களில் ஒன்றென நினைக்கிறேன்.

 

 12 வயது சிறுமி தொடர் வன்புணர்வு

 

சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது காது கேளாத வாய்பேச முடியாத சிறுமி அங்கு லிப்டில் வேலை பார்த்தவரில் தொடங்கி பிறகு அங்கு வேலைக்கு வந்த பிளம்பர் உள்ளிட்டவர்கள் வரை பலரும் தொடர்ச்சியாக சிறுமியை  வன்புணர்வு செய்துள்ளனர் .

 

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இந்த கொடுங்குற்றம் அரங்கேறியிருக்கிறது . நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது இந்த நிகழ்வு .

 

ஒரு ஆணுக்கு கூடவா சிறுமி என்கிற உணர்வு இல்லை

 

இப்படி ஒரு கேவலமான ஆண் கூட்டமே ஒரு சிறுமிக்கு எதிராக வன்கொடுமை குற்றம் செய்திருப்பது மிக மிக கேவலமானது , கொடுமையானது , வெட்க கேடானது .

 

ஆறுமாதங்களாக பெற்றோர் பிள்ளையின் நடவெடிக்கையை கவனிக்காமல் இருக்கலாமா ?

 

நிச்சயமாக வன்கொடுமைக்கு ஆளாகி துன்பத்திற்கும் கொடுமைக்கும் ஆளான சிறுமியின் நடவெடிக்கையில் மாற்றம் வந்திருக்கும் . அதனை பெற்றோர்கள் கண்காணித்து அந்த குழந்தையை ஆரம்பத்திலேயே மீட்டெடுத்திருக்கலாம் . நாமும் கொஞ்சம் அக்கறையோடு செயல்பட வேண்டும் .

 

தொடரும் பெண்களுக்கெதிரான குற்றங்கள்

பெண்கள் பாதுகாப்பில் கடைசி இடம் – விழித்துக்கொள் இந்தியா
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் பல காலமாக நடந்து வருகின்றது . தற்போது தான் அவை வெளிச்சத்திற்கு வருகிறது . ஆனால் சமூகத்தின் அக்கறையை பாலியல் வன்கொடுமை குற்றங்கள் இன்னும் பெறவில்லையோ என்றே தோன்றுகின்றது .

 

நிர்பயா ஓடும் பேருந்தில் வன்கொடுமைக்கு ஆளாக்கி  கொடூரமாக கொல்லப்பட்டார் .

பிறகு ஆசிபா என்றொரு சிறுமி கோவில் வளாகத்தில் வைத்து வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் .

சென்னையில் சிறுமி ஹாசினி என்றொரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார் .

 

இவை தான் ஒட்டுமொத்த குற்றங்களா என்றால் இல்லை , இவை தான் இந்த சமூகம் ஓரளவிற்கு கண்டுகொண்ட வன்கொடுமை குற்றங்கள் . ஆனால் அதுவும் போதாது என்பதே என்னுடைய கருத்து .

 

கடுமையான தண்டனைகள் , தாமதமான தீர்ப்பு

 

கடுமையான தண்டனைகள் அனைத்து குற்றங்களுக்கும் நமது சட்டத்தில் இருக்கின்றன . குறிப்பாக பாலியல் வன்கொடுமைக்கு அதிகபட்சமாக மரண தண்டணை கூட இருக்கின்றது .

 

Child abuse
Child abuse

 

ஆனால் குற்றம் செய்த குற்றவாளி அந்த தண்டணையை எப்போது பெறுகிறார் என்று பார்த்தால் கிட்டதட்ட 6 முதல் 7 ஆண்டுகள் ஆகின்றன . அதற்குள்  குற்றவாளிகளில் பலர் இயற்கையான மரணத்தை அடைந்துவிடுகின்றனர் , இன்னும் பலர் குற்றத்தையே மறந்து விடுகின்றனர் , சமூகம் உட்பட .

 

மேல்முறையீடற்ற நீதிமன்றங்கள் அவசியம்

 

பல்லாயிரம் கோடிகளில் திட்டங்களை நிறைவேற்றுகிறோம் , விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடியாதா என்ன ? நிச்சயமாக முடியும் . ஆனால் அதற்கான அக்கறை , பொறுப்பு இதுவரை எவருக்கும் வந்ததாக தெரியவில்லை .

 

வெறும் ஊழல் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து விசாரிக்கப்படுவது போல ஒரு வன்கொடுமை வழக்கிற்கு கூட சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து தீர்ப்பு விரைவாக வழங்கப்பட்டது இல்லை என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு .

 

பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடைபெற்றால் 30 நாட்களுக்குள் அனைத்து விசாரணைகளும் முடிந்து தீர்ப்பு வழங்கப்படவேண்டும் .

 

 

அவ்வாறு வழங்கப்படும் தீர்ப்புகளுக்கான மேல்முறையீடு (குடியரசு தலைவர் கருணை மனு உட்பட) அனைத்தும் அடுத்த 30 நாட்களுக்குள் குற்றவாளிக்கு 61 நாளில் நிரந்தர தண்டணை கிடைக்கும் வண்ணம் சட்டங்களையும் நீதிமன்றங்களையும் மாற்றி அமைக்க வேண்டும் .

 

தாமதமாக வழங்கப்படும் நீதி பயனற்றுப்போகும் .

 

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *