அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு சமூகத்தில் சில திருட்டுகள் , கொலைகள் , வன்புணர்வு குற்றங்கள் நடைபெறுவது இயல்பானது . அப்படி நடைபெறுகின்ற குற்றங்களை நம்மால் தடுக்கவும் முடியும் .
கொடூர குற்றங்கள் அரங்கேறுகின்றன
12 வயது சிறுமி தொடர் வன்புணர்வு
சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது காது கேளாத வாய்பேச முடியாத சிறுமி அங்கு லிப்டில் வேலை பார்த்தவரில் தொடங்கி பிறகு அங்கு வேலைக்கு வந்த பிளம்பர் உள்ளிட்டவர்கள் வரை பலரும் தொடர்ச்சியாக சிறுமியை வன்புணர்வு செய்துள்ளனர் .
ஒரு ஆணுக்கு கூடவா சிறுமி என்கிற உணர்வு இல்லை
இப்படி ஒரு கேவலமான ஆண் கூட்டமே ஒரு சிறுமிக்கு எதிராக வன்கொடுமை குற்றம் செய்திருப்பது மிக மிக கேவலமானது , கொடுமையானது , வெட்க கேடானது .
ஆறுமாதங்களாக பெற்றோர் பிள்ளையின் நடவெடிக்கையை கவனிக்காமல் இருக்கலாமா ?
தொடரும் பெண்களுக்கெதிரான குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் பல காலமாக நடந்து வருகின்றது . தற்போது தான் அவை வெளிச்சத்திற்கு வருகிறது . ஆனால் சமூகத்தின் அக்கறையை பாலியல் வன்கொடுமை குற்றங்கள் இன்னும் பெறவில்லையோ என்றே தோன்றுகின்றது .
நிர்பயா ஓடும் பேருந்தில் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொடூரமாக கொல்லப்பட்டார் .
பிறகு ஆசிபா என்றொரு சிறுமி கோவில் வளாகத்தில் வைத்து வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் .
இவை தான் ஒட்டுமொத்த குற்றங்களா என்றால் இல்லை , இவை தான் இந்த சமூகம் ஓரளவிற்கு கண்டுகொண்ட வன்கொடுமை குற்றங்கள் . ஆனால் அதுவும் போதாது என்பதே என்னுடைய கருத்து .
கடுமையான தண்டனைகள் , தாமதமான தீர்ப்பு
கடுமையான தண்டனைகள் அனைத்து குற்றங்களுக்கும் நமது சட்டத்தில் இருக்கின்றன . குறிப்பாக பாலியல் வன்கொடுமைக்கு அதிகபட்சமாக மரண தண்டணை கூட இருக்கின்றது .
மேல்முறையீடற்ற நீதிமன்றங்கள் அவசியம்
தாமதமாக வழங்கப்படும் நீதி பயனற்றுப்போகும் .