Why INDIA most dangerous country for women | பெண்கள் பாதுகாப்பில் கடைசி இடம் – விழித்துக்கொள் இந்தியா
பாமரன் கருத்து
Thomson Reuters Foundation அண்மையில் நடத்திய ஆய்வு முடிவுகளை வெளியிட்டது Survey Results here . அதன்படி பெண்களுக்கான வன்முறைகள் (Crime Rate against Women) அதிகமாக நடக்கின்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கின்றது இந்தியா . இதில் ஆச்சரியம் , வெட்கக்கேடு என்னவென்றால் போர் , தலிபான் , தீவிரவாத செயல்கள் என பல குற்றங்கள் நடைபெறுகிற ஆப்கானிஸ்தான் , சிரியா ,சோமாலியா போன்ற பல நாடுகள் இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் தான் இருக்கின்றன .
World’s 10 Most Dangerous Countries for Women
India (1st Place)
Afghanistan
Syria
Somalia
Saudi Arabia
Pakistan
Democratic republic of Congo
Yemen
Nigeria
United States
2011 இல் எந்த அடிப்படையில் நாடுகள் வரிசை படுத்தப்பட்டதோ அதே அடிப்படையில் தான் இந்த ஆண்டும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலிடப்பட்டன . அப்போது பின்னால் இடம்பெற்ற இந்தியா தற்போது முதலிடத்தை பிடித்திருக்கின்றது .
பெண்களுக்கு எதிரான வன்முறையினை குறைக்க ஆக்கபூர்வமான செயல்பாடுகள் இல்லை
இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது பெண்களுக்கு எதிராக வன்முறைகள் (Crime against women) , பாலியல் குற்றங்கள் (Rape) நடைபெற்றாலும் அதனை தடுக்க முறையான முயற்சிகளை அரசு மேற்கொள்ளவில்லை என்பது தான் . டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா (nirbaya) பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு இறந்தார் , அப்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது , சில மசோதாக்களும் வந்தன .
ஆனால் இன்னொரு பெண் அதேபோன்று பாலியல் குற்றத்திற்கோ ஆசிட் வீச்சுக்கோ , கொலைகளுக்கோ உள்ளாகும் சூழ்நிலையே இன்னும் நிலவுவதாக கூறப்படுகிறது .
இன்றளவும் குழந்தைகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்படுவதும் , ஒருதலைகாதலால் வெட்டி கொலை செய்யப்படுவதும் , ஆசிட் வீச்சும் நடந்துகொண்டு தான் இருக்கின்றது .
அடுப்பை மாற்றிய பிரதமர் பாதுகாப்பை கொடுக்க மறந்துவிட்டார்
இந்தியாவின் தற்போதைய நிலைக்கு வெறும் பிரதமரை மட்டுமே குறை சொல்லிவிட முடியாது , சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்குமே இந்த அவமானத்தில் பங்கு இருக்கின்றது . நம்மை விட அதிக அக்கறையோடு செயல்பட்டிருக்கவேண்டிய பிரதமர் அவ்வாறு செயல்படவில்லை .
அதிகாரத்தில் இருப்பவர்களின் அலட்சியம்
சமைக்கும்போது புகையில் துன்பப்படும் பெண்களுக்கு மானியவிலையில் சிலிண்டர் கொடுத்து பெண்களின் நிலையை உயர்த்திவிட்டதாக கூறிடும் பிரதமர் , பெண்கள் தான் தேசத்தின் கண்கள் என கூறிடும் பிரதமர், பெண்களின் முன்னேற்றத்திற்க்காக கடுமையாக உழைக்கின்றேன் என கூறிடும் பிரதமர் நிச்சயமாக அவரது தோல்வியை இந்த விசயத்தில் ஒப்புக்கொண்டு இந்தியாவை பெண்கள் பாதுகாப்பாக வாழும் தேசமாக மாற்ற கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் .
பெண்கள் பாதுகாப்பிற்கு நமக்கு பொறுப்பில்லையா ?
என்னதான் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் அவை குற்றம் நடந்த பின்பு தண்டணை கொடுக்கவே உதவும் . நமது அனைவரின் கடமையும் குற்றம் நடைபெறாமல் தடுப்பதே . இதற்கு சமூகத்தில் வாழுகிற அனைவருக்குமே பொறுப்பிருக்கிறது .
பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளுக்கு பெண்கள் குறித்தும் எவ்வாறு ஒழுக்கமாக நடந்துகொள்ளுதல் வாழ்விற்கு நன்மை பயக்கும் என்பதனை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
பெண் பிள்ளைகளுக்கு எவ்வாறு இந்த சமூகத்திடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதனை பயிற்றுவிக்க வேண்டும் .
அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் மட்டுமே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க முடியும் .