How to make LAVA lamp in your home? | Tamil | ஒளிரும் லாவா விளக்கினை வீட்டில் செய்வது எப்படி?

Here is the procedure and scientific explanation about “How to make Lava Lamp in tamil”

 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வுகளை பெற்றோரின் துணையின்றி சிறுவர்கள் செய்துபார்க்க கூடாது

 

Experiment Name : Make LAVA lamp in Home

 

ஒளிரும் விளக்குகள் என்றாலே சிறுவர்களுக்கு கொள்ளைப்பிரியம்தான் . மின்சாரமின்றி ஒளிரக்கூடிய லாவா விளக்கினை வீட்டில் எளிமையாக எவ்வாறு செய்வது என்பதனைதான் பார்க்க இருக்கின்றோம் .

 

LAVA lamp
LAVA lamp

 

தேவையான பொருள்கள்

 

  • காலியான கண்ணாடி பாட்டில் அல்லது வாட்டர் பாட்டில்

 

 

  • சமையல் எண்ணெய் தேவையான அளவு

 

 

  • சுத்தமான நீர் தேவையான அளவு

 

 

  • Food Colouring

 

 

Alka-seltzer tablets மாத்திரை (சாதாரணமாக மெடிக்களில் வாங்கலாம் )

 

செயல்முறை

 

காலியான வாட்டர் பாட்டிலில் பாதிக்கும் அதிகமாக சமையல் எண்ணெய்யை நிரப்பிக்கொள்ளுங்கள் (வீணாக போகிறது என எண்ண வேண்டாம் , உங்கள் குழந்தை கற்க போகிறது )

 

இப்போது தண்ணீரை நிரப்புங்கள்

 

Child making lava light in home
Child making lava light in home

 

நன்றாக கவனித்தால் மேலாக ஊற்றிய தண்ணீர் எண்ணெய்க்கு அடியில் சென்று இருக்கும்

 

இதற்கு காரணம் நீரின் density அதாவது அடர்த்தி அதிகமாக இருப்பதனால் எண்ணெய்க்கு அடியில் நீர் சென்றுவிடுகிறது .

 

பிறகு சிறிதளவு food colouring சிறிதளவு கலந்திடுங்கள் .

 

அது தண்ணீரோடு மட்டுமே கலந்திடும் , எண்ணெயோடு கலக்காது .

 

இப்போதுதான் இறுதிக்கட்டம் , உங்களது குழந்தையின் கைகளில் மாத்திரையை சிறு துண்டுகளாக உடைத்து கொடுத்து பாட்டிலுக்குள்ளே போட சொல்லுங்கள் .

 

இப்போது மாத்திரை நீருடன் வினை புரிந்து சிறு சிறு காற்றுக்குமிழிகளை உண்டாக்கும் .

 

அதன்காரணமாக காற்றுக்குமிழ்கள் வெளியேறும் பாதையில் வண்ண தண்ணீரும் மேல்நோக்கி குமிழ்களாக வெளியேறும்போது அழகாக காட்சி தரும் .

 

பாட்டிலுக்கு பின்னால் மின்சார விளக்கினை வைத்தால் காற்றுக்குமிழிகள்   வெளியேறும்போது அழகாக காட்சியளிக்கும் .

 

கேள்விகள்

 

தண்ணீருக்கு மேலே எண்ணெய் சென்றது எதனால் ?

 

பதில் : அடர்த்தி (density) . எண்ணெயின் அடர்த்தியைவிட நீரின் அடர்த்தி அதிகம் . அதனால் தான் அடர்த்தி அதிகமுள்ள நீர் அடியிலும் அடர்த்தி குறைவான எண்ணை மேலேயும் இருக்கின்றன.

 

Water Density : 997 kg/m3

 

Oil Density : 870 – 920 kg/m3

 

Explanation :

 

சாதாரணமாக பார்க்கும்போது தண்ணீரை விட எண்ணெய்யை பார்க்கும்போது எண்ணெய் தான் அதிக அடர்த்தியுள்ளதை போன்று தோன்றும் . ஆனால் அடர்த்தி என்பது ஒவ்வொரு அணுக்களுக்கும் இடையிலான நெருக்கம் .

 

எண்ணெய் அதிக மூலக்கூறுகளை கொண்டிருப்பதனால் அவற்றிற்கு இடையில் பிணைப்பு குறைவானதாகவும் நீருக்கு மூலக்கூறுகள் குறைவானதாக இருப்பதனால் அவற்றால் அதிகமாக நெருங்கி இருக்க முடியும் .

 

பாமரன் கருத்து
பாமரன் கருத்து

Share with your friends !

2 thoughts on “How to make LAVA lamp in your home? | Tamil | ஒளிரும் லாவா விளக்கினை வீட்டில் செய்வது எப்படி?

Leave a Reply

Your email address will not be published.