செயற்கை நிலா – Artificial moon | China’s New Project

 


 

China artificial moon
China artificial moon

 

வரும்காலங்களில் சீனாவில் உள்ள குழந்தைகளிடம் “பூமிக்கு எத்தனை நிலவுகள்?” என கேட்டால் ஒன்று என சொல்ல மாட்டார்கள் . இரண்டு …மூன்று என ஆண்டுக்கு ஆண்டு மாறுபட்ட எண்ணிகையை செல்வார்கள் . குழந்தைகளின் மீது தவறில்லை , வானில் எத்தனை நிலாக்களை  காண்கிறார்களோ அத்தனையை தானே சொல்லுவார்கள் . ஆம் நண்பர்களே 2020 வாக்கில் சீனா செயற்கையாக தயாரிக்கப்பட்ட நிலாக்களை வானில் நிலை நிறுத்தப்போகிறது .

 


 

உலக நாடுகள் அனைத்திற்குமே ஒரு பேராசை உண்டு , அது யார் புத்திசாலி , திறமைசாலி என்பதை காட்டிக்கொள்ளவே . போர் அவ்வளவு எளிதானது அல்ல என்பதனால் அவை கண்டுபிடிப்புகளின் மூலமாக தங்களை முன்னிறுத்திக்கொள்ள விண்வெளி ஆராய்ச்சி போன்றவற்றினை முடுக்கிவிடுகின்றன .

 

China planned to launch artificial moon
China planned to launch artificial moon



1990 களில் ரஸ்யா , சூரிய ஒளியினை பிரதிபளித்து பூமியின் மீது செலுத்தும் விதமாக மிகப்பெரிய கண்ணாடியை விண்வெளியில் அமைக்க திட்டமிட்டது . பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது .



தற்போது சீனா , பூமிக்கு ஒளியூட்டக்கூடிய  செயற்கை நிலவினை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருகின்றது .



இதன்படி பூமிக்கு மேலே 500 கிலோமீட்டர் உயரத்தில் சாட்டிலைட் ஒன்று நிலைநிறுத்தப்படும் . அதற்கு மேலே சுற்றப்பட்டு இருக்கும் ஒளியினை உமிலும் தகடுகள் நிலவினை போன்று , சூரியனில் இருந்து பெற்ற ஒளியினை பூமியின் மீது எதிரொளிக்கும் . இதனால் பூமிக்கு வெளிச்சத்தை இந்த செயற்கை நிலவு அளிக்கும் .


 

சீனாவின் செயற்கை நிலவின் பயன்களும் சந்தேகங்களும்


சீனாவின் செயற்கை நிலவின் மூலமாக எந்தவொரு குறிப்பிட்ட பகுதிக்கும் வெளிச்சத்தை கொடுக்க முடியும் . கிட்டத்தட்ட 50 சதுர கிலோமீட்டர் அளவுள்ள பகுதிக்கு ஒளியூட்ட முடியும் 



புதிய செயற்கை நிலவின் மூலமாக வெளிச்சமூட்டுவதினால் 1 . 2 பில்லியன் யுவான் சேமிக்கலாம் என சீனா தெரிவித்துள்ளது .



பேரிடர் காலங்களில் வெளிச்சம் ஏற்படுத்திட செயற்கை நிலவு பயன்படலாம் .

 

இயற்கைக்கு முரணாக செயற்கை நிலவினை அமைப்பதென்பது மிகவும் பிரச்சனைக்கு உரிய செயலாக கருதப்படுகிறது . இதனால் ஒளி மாசு ஏற்பட்டு புதிய பிரச்சனைகள் உண்டாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

 

இதற்கு சீனா அளித்துள்ள பதிலில் முதலில் செயற்கை நிலவானது பாலைவன பகுதியில் சோதிக்கப்படும் , பின்னர் எந்தவொரு பாதிப்பும் இல்லையென தெரிந்தால் மட்டுமே நகரங்களில் பயன்படுத்தபடும் என அறிவித்துள்ளது .

 


 

பாமரன் கருத்து

 

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *