சென்னை IIT யில் 5G க்கான சோதனை
இந்தியாவில் தற்போது 4G இணைய வேகம் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது . கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 4G சேவையை வழங்குகின்றன .
அடுத்தகட்டமாக 5G சேவையினை இந்தியாவில் கொண்டுவர சோதனைகள் தொடங்கப்போகின்றன . ஆம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவிக்கையில் “தொலைதொடர்பு அமைச்சகம் சென்னை IIT இல் தொடங்கவிருக்கும் ஆய்வுகளுக்கு உதவி செய்யும் “என்றார் .
இந்த சோதனை இந்திய தொலைதொடர்பில் மைல்கல்லாக இருக்கப்போவதுடன் , தொலைதொடர்பு நிறுவனங்கள் 5G க்கு மாறுவதற்கும் உதவி மற்றும் அறிவுரைகளை வழங்கும் .
5ஜி சேவையினை வழங்குவதன் மூலமாக இந்திய அரசிற்கு அலைக்கற்றை ஏலத்தின் மூலமாக $27 மில்லியன் கிடைக்கும் .
பாமரன் கருத்து