நேர்மையாக இருந்து பாருங்க – அதோட சுகமே தனி

நேர்மையாக இருந்தால் கண்களைப் பார்த்து பேச முடியும். கண்களைப்பார்த்து பேசுகிறவர்களை அடிக்கடி பார்க்க முடிவதில்லை. காரணம், நேர்மை தூரமாகிவிட்டது

Read more

7 மாற்றங்களை செய்திடுங்கள் | புத்தாண்டு வாழ்த்துக்கள் : 2020

ஒவ்வொரு ஆண்டு புத்தாண்டு தினத்தின்போது பல்வேறு சபதங்களை ஏற்று பின்னர் இரண்டு மூன்று நாட்களில் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பும் பலரில் நானும் ஒருவன் தான். ஏன் நம்மால் அந்த மாற்றத்தை கொண்டுவர முடியவில்லை என அதற்கான காரணத்தை அறிய முற்பட்டால் பல்வேறு குழப்பங்கள் தான் மிஞ்சி நிற்கின்றன. ஆனாலும் புதிய ஆண்டில் புதிய விதிமுறைகளை நமக்கு விதித்துக்கொண்டால் தானே வாழ்க்கை செழிப்பானதாக அமையும். ஆகவே தான் இந்த கட்டுரையில் மிகவும் எளிமையாக நாம் ஒவ்வொருவரும் செய்துமுடிக்க முடிந்த சில விசயங்களை உங்களுக்காக பட்டியல் இட்டிருக்கிறேன்.

Read more

44 உயிர்கள் – கீழவெண்மணி அதிர்ந்தது டிசம்பர் 25, 1968

தஞ்சை , நம்மை பொறுத்தவரைக்கும் நெற்களஞ்சியம் . பச்சை பசேலென்று ஜொலிக்கும் ஊர் . 1960 களில் இப்போதிருப்பதைவிட பலமடங்கு செழித்து விளங்கியது . அந்த பசுமைக்கு பின்னால் எண்ணற்ற கூலித்தொழிலாளிகளின் வியர்வையும் ரத்தமும் அடங்கியிருந்தது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது . காரணம், அந்தப்பசுமை அவ்வளவு வீரியமாக இருந்தது. மிராசுதாரர்களும் பெரும் நிலத்துடன் அப்படித்தான் இருந்தார்கள். அவர்களிடமே நிலம் இருக்கும். உழைக்கும் திறன் உடம்பில் இருக்கிறவரைக்கும் உழைக்கலாம். அவர்கள் ஊதியமென்று எதை கொடுக்கிறார்களோ அதை மறுபேச்சு பேசாமல் வாங்கிக்கொள்ள வேண்டும். இதுதான் அன்றைய நிலைமை. பெரும்பாலானவர்களுக்கு ஒருபடி நெல் , ஒரு கோப்பை கூழ் தான் ஊதியம் . கிட்டத்தட்ட அடிமையாகவே அவர்கள் நடத்தப்பட்டார்கள் .

Read more

NRC,CAA,CAB முழு விளக்கம் தமிழில் | அசாம் ஏன் கொதிக்கிறது?| முஸ்லீம் மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?

NRC என்பதற்கான ஆங்கில விளக்கம் National Register of Citizens. தமிழில் தேசிய குடிமக்கள் பதிவேடு என சொல்லலாம். அதாவது இந்தியாவின் குடிமக்கள் யார் என்பதற்கான ஒரு பதிவேடு. இந்தியாவின் குடிமக்கள் யார்? அவர்களுக்கு என்ன தகுதி இருக்கவேண்டும்? என்பது குறித்த சட்டம் பல்வேறு காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

Read more

உங்கள் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் அபாயம் குறித்து எப்படி சொல்லிக்கொடுக்க போகிறீர்கள்?

சுற்றுசூழல் பொறியாளரும் ஆர்வலருமான ஜென்னா ஜெம்பெக் நேஷனல் ஜியோகிராபிக் சேனலில் கடல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளராகபணியாற்றுகிறார். 2015 ஆம் ஆண்டு நடத்திய ஆராய்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் 8.8 மில்லியன் டன்கள் குப்பை கடலில் கலப்பதாக அறிந்துகொண்டார், அதிர்ச்சியும் அடைந்தார். இதனால் தொலைக்காட்சியில் பணியாற்றுவதோடு நின்றுவிடாமல் அரசாங்கம் மற்றும் பல தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து இதற்கு தீர்வு காணும் முயற்சியிலும் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்.

Read more

வாழ்வில் ஜெயிக்க கல்வி ஒரு தடை அல்ல !

பள்ளிப்படிப்புகளை சிறப்பாக படிக்கின்ற குழந்தைகள் மிகவும் திறமையானவர்கள், எதிர்காலத்தில் அவர்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை பெற்றோர், ஆசிரியர் இடத்தில் இயல்பாக எழுகிறது. மறுபக்கம் பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்காத குழந்தைகள் திறமை அற்றவர்கள் என கருதப்படுகிறார்கள். அவர்களால் எதிர்காலத்தில் சாதிக்கவே முடியாது என கருதப்படுகிறார்கள். இந்த எண்ணத்தை மாணவர்கள் மனதிலும் விதைத்து விடுகிறார்கள். இந்த எண்ணம் அவர்களின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிடுகிறது என்பதே உண்மை.

Read more

குடியுரிமை சட்ட திருத்த மசோதா – அசாம் ஏன் வலிமையாக எதிர்க்கிறது?

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த மசோதாவில் முஸ்லீம் மதத்தவரை விட்டுவிட்டது, இலங்கை தமிழர்களை விட்டுவிட்டது உள்ளிட்ட காரணங்களுக்காகவே தமிழகத்தில் இருக்கின்ற கட்சிகள் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால் இந்த குடியுரிமை திருத்த மசோதாவை மிக தீவிரமாக எதிர்த்து வருகின்ற அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் இதே காரணத்திற்க்காக எதிர்க்கின்றனவா என்றால், நிச்சயமாக இல்லை. அவை வேறு சில காரணங்களுக்காகவே இம்மசோதாவை எதிர்க்கின்றன.

Read more

உள்ளாட்சி தேர்தலில் ஒரு ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பார்கள்? சிந்திக்க துவங்கிவிட்ட பலர்

சம்பாரித்த காசைத்தானே தருகிறார்கள், இனி எப்படியும் சம்பாரிக்கத்தானே போகிறார்கள் என சாக்குபோக்கு சொல்லிக்கொண்டு நீங்கள் செய்வதை நியாப்படுத்திக்கொள்ளாதீர்கள்.

Read more

மிகச்சிறப்பாக செயல்படுகிற மாநிலம் – தமிழ்நாடு “இந்தியா டுடே” – State of the States 2019

இந்தியாவின் முன்னனி நாளிதழான இந்தியா டுடே ஆய்வில் ஒட்டுமொத்தமாக மிகச்சிறப்பாக செயல்படும் பெரிய மாநிலம் மற்றும் சட்டம் ஒழுங்கில் சிறப்பாக செயல்படும் மாநிலம் ஆகியற்றிற்கான விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Read more

மகாராஷ்டிரா அரசியலில் நடந்த தவறுகள் என்ன? Maharastra Politics

தேர்தலுக்கு முன்னர் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. அந்தத்தேர்தலில் பாஜக 105 இடத்திலும் சிவசேனா 56 இடத்திலும் காங்கிரஸ் 44 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வென்றது. பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் சிவசேனா சுழற்சி முறையில் முதல்வர் பதவி வேண்டும் எனவும் இது தேர்தலுக்கு முன்னரே பேசப்பட்ட விசயம் தான் எனவும் கூறியது. ஆனால் இதற்கு பாஜக உடன்படவில்லை. இதனால் கோபமடைந்த சிவசேனா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

Read more