தருண் விஜய்யின் தமிழ் பற்றுக்கு அரசியல் சாயம் பூசுவது சரியா?

தருண் விஜய் MP  அவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். கங்கை கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதில் மும்முரமாய் முயன்று வருகின்றார்.அதன்படி கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட கங்கை பயணம் நேற்று சென்னை வந்தடைந்தது. ஆளுநர் ரோசையா அவர்களும் திருவள்ளுவர் புகழ் பாடி நம்பிக்கை ஊட்டினார்.

நேற்று தருண் விஜய் அவர்கள் பேசும்போது இது ஒரு மகிழ்ச்சிகரமான தருணம். தமிழக மக்கள் என்னை அவர்களின் தம்பியாக கருதுகிறார்கள். என்னை தருண் விஜய் என்று அழைப்பதைவிட ‘தருண் தமிழ் விஜய்’ என்று அழையுங்கள் என்று கூறினார். நேற்று மட்டுமல்ல அவர் பல நேரங்களில் தமிழ் குறித்தும் திருக்குறள் குறித்தும் பெருமையாக பேசி வருகின்றார். வெறும் பேச்சோடு மட்டும் நில்லாமல் அவரது செயல்பாடுகளும் தமிழ் வளர்க்க அவர் பாடுபடுவதையே காட்டுகின்றது.

> திருக்குறள் ஆராய்ச்சி மாணவர்களை குடியரசு தலைவரை சந்திக்க ஏற்பாடு செய்தது.
>இமயத்தை விட உயர்ந்த தமிழை பரப்ப வடக்கில் 500 சிறப்பு மையங்கள் உருவாக்க நினைப்பது.
>இவரது கோரிக்கையை ஏற்று 2015ம் ஆண்டு முதல் வட மாநில பள்ளிகளில் திருவள்ளுவர் பிறந்ததின கொண்டாட்டம்.
>ராணுவத்தினரையும் திருக்குறள் படிக்க ராஜ்நாத்சிங்கிடம் வலியுறுத்தியது.
> ஜல்லிக்கட்டு தமிழர் கலாச்சாரம். போராடினால் நானும் வருவேன் என்று உரக்க சொன்னது.

இன்னும் இது போன்ற பல நல்ல தமிழ் நலன்  சார்ந்த தமிழ் பரப்பும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுவருகின்றார்.

ஆனால் இன்று ஒருசில அரசியல் கட்சிகள் அவர் அரசியல் செய்வதாக வசை பாடுகின்றன. தருண் விஜய்யின் செயல்பாடுகளில் அரசியல் பேசும் உங்களிடம் எனக்கு சில கேள்விகள் உண்டு.

> 60 ஆண்டுகள் தமிழ் மக்களை ஆண்ட உங்களால் செய்ய முடியாத ஒன்றை எங்கோ பிறந்த ஒருவர் செய்வதை நீங்கள் வெறுப்பது ஏன்?

> அப்படியே அவர் அரசியலுக்காகவே செய்கிறார் என்றாலும் அவர் செய்வது தமிழ் மொழிக்கு  தானே நல்லது செய்கின்றார். இத்தனைக்கும் அவர் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை. இங்கிருந்து தேர்தெடுக்கப்பட்ட எவரும் செய்ய முன்வராததை அவர் செய்யும் போது அதற்க்கு அரசியல் சாயம் பூசுவது கேவலமாக தெரியவில்லையா?

>தமிழக அரசியலில் ஊறித்திளைத்த நீங்கள் தமிழ் மொழி காக்க இதுவரை செய்தது என்ன?

இனியாவது தமிழ் வளர்க்க எதுவும் செய்யவிட்டாலும் செய்பவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் அரசியல் பெருமக்களே!!!

தமிழ் வாழ்க!!!
ஸ்ரீ 

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *