எகிப்து பிரமிடுகள் ஏன் இன்றும் பிரம்மிப்பானவை? எகிப்து பிரமிடுகள் எப்படி கட்டப்பட்டன?

கிசாவின் உயரமான பிரமிடு எந்த தொழில்நுட்பமும் இல்லாத காலகட்டத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட உயரமான படைப்பு இதுதான். இதன் உயரம் 146.5 மீ. மனிதனால் உருவாக்கப்பட்ட உயரமான படைப்பு இதுதான் என்கிற சாதனையை அடுத்த 3800 ஆண்டுகளுக்கு தன்னகத்தே கொண்டிருந்தது.

பண்டையகால எகிப்தில் வாழ்ந்த மக்களுக்கு இறப்புக்கு பிறகான வாழ்க்கையில் அதீத நம்பிக்கை உண்டு. உயிரோடு இருக்கும் போது எப்படி வாழ்க்கை உள்ளதோ அதைப்போலவே இறப்புக்கு பிறகும் வாழ்க்கை உண்டு என்ற அவர்களின் நம்பிக்கை காரணமாக தங்களை ஆண்ட மன்னர்களுக்கு மிகப்பெரிய பிரமிடுகளை கட்டினார்கள். இந்த பிரமிடுகள் அனைத்தும் ஆட்சி செய்த மன்னர்களுக்கும் சில நேரங்களில் ராணிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் கட்டப்பட்டன. சாதாரண மக்களுக்கு இப்படிப்பட்ட பிரமிடுகள் கட்டப்படவில்லை. எகிப்தை போலவே சீனா உள்ளிட்ட பிற இடங்களிலும் பிரமிடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், எகிப்தில் உள்ள பிரமிடுகள் மிகவும் பழமையானவை மற்றும் பெரியவை. தற்போது, கிசாவின் உயரமான பிரமிடு தான் மக்களை ஈர்க்கும் விதத்தில் ஒரு முழுமையான பிரமிடாக இருக்கிறது. இதன் உயரம் 146.5 மீ. மனிதனால் உருவாக்கப்பட்ட உயரமான படைப்பு இதுதான் என்கிற சாதனையை அடுத்த 3800 ஆண்டுகளுக்கு தன்னகத்தே கொண்டிருந்தது கிசா பிரமிடு.


உண்மையை சொல்லவேண்டும் என்றால், இவ்வளவு உயரமான பிரமிடுகளை எப்படி எகிப்தியர்கள் கட்டினார்கள் என்ற உண்மை இதுவரைக்கும் யாருக்கும் தெரியவே இல்லை. ஆகவே தான் இதனை ஏலியன்ஸ் கட்டினார்கள் என்றுகூட சொல்கிறார்கள்.

கிசாவின் உயரமான பிரமிடு சுமார் 23 லட்சம் சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லின் எடையும் 20 டன்கள் முதல் 80 டன்கள் வரைக்கும் இருக்கும். கிசாவின் உயரமான பிரமிடை கட்டுவதற்கு தேவையான கற்களை கிசாவில் இருந்து 500 மைல்களுக்கு தொலைவில் உள்ள அஸ்வான் என்ற இடத்தில் வெட்டி எடுத்து கொண்டு வந்திருக்கிறார்கள் என கண்டறிந்து இருக்கிறார்கள். கற்களை வெட்டி இருக்க மிகவும் பழைய முறையையே கையாண்டு உள்ளார்கள். அதன்படி, பாறையில் துளையிட்டு அதற்குள் மரத்தால் ஆன ஆப்புகளை இறுக்கி பின்னர் அதிலே தண்ணீரை பாய்ச்சி உள்ளார்கள். ஈரப்பதத்தால் மரம் விரிவடையும் போது பாறை உடைந்து உள்ளது. பிறகு அவற்றை நைல் நதி வாயிலாக இங்கே கொண்டுவந்துள்ளார்கள். 

 

23 லட்சம் சுண்ணாம்பு கற்களையும் இப்படி ஓரிரு நாட்களில் மாதங்களில் கொண்டுவந்து பிரமிடு கட்டிவிட முடியுமா என்ன? சுமார் 200 ஆண்டுகள் இந்த பிரமிடை கட்டியுளார்கள். பல நூறு காலங்கள் ஒரே இனமே ஆட்சி செய்தபடியால் அவர்களால் இத்தகைய மிகப்பெரிய பிரமிடுகளை எந்தவித தடையும் இன்றி கட்டிமுடிக்க முடிந்துள்ளது. 

எப்படி மிகச்சரியாக கோணங்களை கணித்தார்கள், உயரத்திற்கு எப்படி கற்களை கொண்டு சென்றார்கள் என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடைகளை இன்னும் ஆராய்ச்சியாளர்கள் தேடுகிறார்கள்.

பிரமிடுகளை அடிமைகள் கட்டினார்களா?

பொதுவாகவே ஒரு மாபெரும் படைப்பு உருவாக்கப்படுகிறது எனில் அதிலே அடிமைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பார்கள் என்ற கருத்தாக்கம் உருவாவது இயற்கை. எகிப்து பிரமிடு கட்டியதில் அடிமைகள் பயன்படுத்தப்பட்டார்கள் என்றே பல வரலாற்று அறிஞர்களும் கூறி வந்தார்கள். ஆனால், சமீப காலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் பிரமிடுகளுக்கு அருகே கிடைத்த தொல்பொருள்களில் இருந்து பிரமிடு கட்ட வேலை செய்தவர்கள் மிகவும் மரியாதையாகவும் அக்கறையோடும் பார்த்துக்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளது. 

ஒரு அடிமைக்கு தரப்படாத அத்தனை சவுகரியங்களும் உணவு பொருள்களும் கட்டுமான பணியாளர்களுக்கு தரப்பட்டுள்ளது. அவர்கள் அதிகமாக வேலை செய்திட அதிகமாக உணவு உட்கொண்டார்கள். சிறப்பாக வேலை செய்தவர்களுக்கு பாராட்டும் கிடைத்துள்ளது.

பிரமிடு கட்டுமானம் அதிசயம்

தொழில்நுட்பம் ஏதும் இல்லாத காலகட்டத்தில் கட்டப்பட்ட பிரமிடுகள் இத்தனை ஆண்டுகள் இருப்பதே பெரிய அதிசயம் தான். எப்படி அளவீடுகளை இதனை கட்டியவர்கள் செய்தார்கள் என்பது இன்றளவும் பேசுபொருளாக இருக்கிறது . அவர்கள் ஏதேனும் ஒரு முறையை அல்லது கருவியை பயன்படுத்தியே இருக்க வேண்டும் என இன்றளவும் அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். அதனை கண்டறிய முயற்சி நடக்கிறது. 

உதாரணத்திற்கு, பிரமிடுகளின் கதவுகள் மிகவும் கனமானதாக இருந்தன. வெளியில் இருந்து யாரேனும் திறந்துவிடக்கூடாது என்ற நோக்கில் அவை வடிவமைக்கப்பட்டன. வெளியே இருந்து எப்படி திறக்க வேண்டும் என்பது எகிப்தியர்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருந்தது. ஆனால், உள்ளே இருந்து மிக சுலபமாக அவற்றை திறக்க முடியும். இதனை கிரேட் பிரமிடை விஞ்ஞானிகள் ஆய்வு செய்திடும்  போதுதான் கண்டறிந்தார்கள். அவை பெரிய ஸ்விவல் கதவுகள், உள்ளே இருந்து ஒரு கையால் திறக்க முடியும். ஆனால் வெளியில் இருந்து எவ்வளவு பேர் தள்ளினாலும் திறக்க முடியாத வகையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு இருந்தன. இப்படிப்பட்ட விளைவை உருவாக்க எகிப்தியர்கள் 20 டன் எடை கொண்ட கதவுகளை எப்படி சமன் செய்திட முடிந்தது என்பது இன்றளவும் மறைந்திருக்கும் அதிசயம் தான்.

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *