நாடாளுமன்ற கூட்டத்தொடர் ரத்து, ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது இல்லை

கொரோனாவால் முடங்கிய நாடு இப்போது தான் மெல்ல எழுந்து வருகிறது. பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்கள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் செயல்பட்டாக வேண்டும். அப்படி செயல்பட்டால் தான் மீண்டும் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முடியும். விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் முக்கியத்துவம் பெற்றிருக்கும் இந்த காலகட்டத்தில் கொரோனாவை பயன்படுத்தி இருக்கிறதோ அரசு என்ற சந்தேகம் எழுவதை எப்படி தவிர்க்க முடியும்.

Read more

மழை நேரங்களில் தூங்கும் உணர்வு ஏற்படுவது ஏன் தெரியுமா?

மழை நேரங்களில் பொதுவாக அனைவருக்கும் தூங்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்ற சில காரணங்கள் இருக்கின்றன. அதில் முதல் காரணம், குறைவான சூரிய ஒளி. நம் உடலில் சூரிய ஒளி படும் போது மெலடோனின் குறைவாகவும் செரோடோனின் அதிகமாகவும் சுரக்கிறது. இது நம்மை விழிப்புடன் இருக்க தூண்டுகிறது. இதுவே சூரிய ஒளி குறைவான நேரங்களில் எதிர்மறையாக நடைபெறும். நமக்கு தூக்க உணர்வை ஏற்படுத்தும்.

Read more

ரஜினி தாக்கத்தை ஏற்படுத்துவார் | எப்படி என அறிய முழுமையாக படியுங்கள்

ரஜினி எந்தவிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனில் ஆட்சி அமைக்கப்போவது திமுகவா அல்லது அதிமுகவா என்பதில் தான் ரஜினி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார். சொற்ப வாக்குகளே வெற்றியைத் தீர்மானித்து இருக்கிற சூழலில் ரஜினி அவர்கள் பெறக்கூடிய வாக்குகள் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும். ஆட்சியமைக்க திமுகவிற்கு சாதகமான சூழல் நிலவுவதாக கருத்தப்படக்கூடிய சூழ்நிலையில் அந்த வாய்ப்பை திமுகவிடம் இருந்து ரஜினியால் தட்டிப்பறித்து அதிமுகவிடம் கொடுக்க முடியும். இல்லையேல் அதிமுகவிற்கு போகவேண்டிய வாக்குகளை பெற்று திமுகவிற்கு வெற்றியை எளிதாக்கலாம். ஆக ரஜினி அவர்கள் இந்தத் தேர்தலில் தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்துவார். அவர் ஆட்சியை பிடிப்பார் என்பது சாத்தியமில்லாத ஒன்று.

Read more

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது ஏன் மிகவும் ஆபத்தானது?

எவரெஸ்ட் சிகரத்தில் குறிப்பிட்ட உயரத்தை கடந்தவுடன் மிகவும் ஆபத்தான பகுதி [death zone] வருகிறது. இங்கு மற்ற இடங்களில் இருப்பதில் 40% அளவு மட்டுமே ஆக்சிஜன் இருக்கும். மிக உயரத்தில் உடலை வருத்திக்கொண்டு மலையேறும் போது உடலின் அனைத்து செல்களுக்கும் ஆக்சிஜன் தேவைப்படும். மிகக்குறைந்த அளவு மட்டுமே ஆக்சிஜன் இருக்குமென்பதால் உடல் செயலற்று போக அதிக வாய்ப்பு இருக்கிறது.

Read more

பகுத்தறிவு கடவுளுக்கு எதிரானதா? படித்துவிட்டு சொல்லுங்கள்

புகைத் தொடர் வண்டியை கண்டுபிடித்தவர் யார் என்றால் மிரளுவார்கள். நம் வீட்டில் எரிகின்ற மின் விளக்கைக் கண்டறிந்தவர் யார் என்றால் வாய் திறக்க மாட்டார்கள். புற்று நோயைக் குணப்படுத்தும் ரேடியத்தை கண்டறிந்தவர் யார் என்றால் பேசவே மாட்டார்கள். தமிழ்நாட்டை வளப்படுத்தும் காவிரியாற்றின் பிறப்பிடம் எது என்று வினவினால் கவலை கொள்ள மாட்டார்கள். ஆனால் எமதர்மனுடைய வாகனம் எது என என்று கேட்டால் உடனே எருமைக் கடா என்று பதில் சொல்வார்கள். கைலாயம், வைகுந்தம், சொர்க்கம், நரகம் பற்றிக்கேட்டால் சென்று பார்த்து வந்தவர்களைப்போல மட மடவென்று பதில் சொல்லுவார்கள்

Read more

ஆடை வாங்க விவசாயிகளுக்கு ரூ 1 கோடி கொடுத்த தில்ஜித் தோசாஞ் | Diljit Dosanjh

அண்மையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை முற்றிலுமாக நீக்கக்கோரி ‘டெல்லி சலோ’ எனும் மாபெரும் பேரணியை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். 10 நாட்களுக்கும் மேலாக நடந்துவரும் இந்தப்போராட்டத்திற்கு பொதுமக்களின் ஆதரவும் குவிந்துவருகிறது. அரசு பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட இன்னும் முடிவு எட்டப்படாத சூழலில் போராட்டம் தொடருகிறது.

Read more

என். டி. ராமராவ் பார்முலா ரஜினிக்கு ஒத்துவருமா?

என். டி. ராமராவ் ஆந்திராவில் கட்சி துவங்கிய சில மாதங்களிலேயே ஆட்சியை பிடித்தார் என்பதையே உதாரணமாகக்கூறுகிறார்கள். என். டி. ராமராவ் எந்த அளவிற்கு புகழ்பெற்ற நடிகரோ அதற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத திரைப் புகழ் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ஒரு வெற்றிக்கு திறமையும் புகழும் மட்டுமே போதுமானது கிடையாது. மாறாக, சரியான தருணமும் சூழ்நிலையும் மிகவும் அவசியமான காரணிகள்.

Read more

போராட்டங்களில் வன்முறை, தீர்வை தருமா?

தனி நபர்களாக இருக்குபோது ஒழுக்கத்தை கடைபிடிக்கிற பலர் , கூட்டமாக சேரும்போது வன்முறையாளர்களாக எளிதில் மாறிவிடுகிறார்கள். வன்முறை ஒருபோதும் மக்களின் ஆதரவை பெற்றுத்தராது. பாமக அரசியல் கட்சியின்

Read more

லவ் ஜிஹாத் தடுப்பு சட்டம் : சரியா? தவறா?

இந்துப்பெண்களை ஏமாற்றி திருமணத்துக்காக மதம் மாற்றிடும் செயல்களை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள ‘லவ் ஜிகாத் எதிர்ப்பு சட்டம்’ ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றிருக்கிறது. யாரை திருமணம் செய்திட வேண்டும், எந்த

Read more

11 மாத பிரதமர் வி.பி. சிங் இன்றளவும் கொண்டாடப்படுவது ஏன்?

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார். மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக சிறு வயதான வி.பி.சிங்கை தத்தெடுத்துக்கொண்டார். விஸ்வநாத் பிரதாப் சிங் என்பதனை வி.பி.சிங் என அழைத்துவந்தார்கள். படிப்பில் நல்ல கெட்டிக்காரராக விளங்கிய வி பி சிங் எதிர்காலத்தில் மிகப் பெரிய அணு விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற லட்சியத்துடனேயே படித்து வந்தார். ஆனால் காலம் அவரை அரசியலுக்கு அழைத்து வந்தது.

Read more