எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது ஏன் மிகவும் ஆபத்தானது?

வானில் இருந்து குதிப்பது, மிகப்பெரிய கட்டிடத்தில் கயிறே கட்டாமல் ஏறுவது, ஆழ்கடலில் நீந்துவது என்பது போன்ற சாகசங்கள் சிலருக்கு மிகவும் பிடித்தவை, அதுவே வாழ்க்கையின் சுவாரஸ்யம் என நம்புவோர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உச்சம் தொடும் சாகச உணர்வை கொடுப்பது ‘எவரெஸ்ட் சிகரம்’ ஏறுதல். மிகவும் சிக்கலான, ஆபத்தான மற்றும் பலரால் செய்து முடிக்க முடியாத சவாலான காரியமாகவே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது இருந்து வருகிறது.

ஏன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது அவ்வளவு சிக்கலானது? கடல் மட்டத்தில் இருந்து 29,029 அடி [8,848 மீட்டர்] உயரத்தில் இருக்கிறது எவரெஸ்ட் சிகரம். இதுதான் உலகிலேயே மிகப்பெரிய சிகரமாக இருக்கிறது. எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலாக ஏறியவர் சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே எனும் இருவர் தான். இவர்கள் 1953 ஆம் ஆண்டில் ஏறி சாகசம் படைத்தார்கள். இதுவரைக்கும் சுமார் 4000 பேர் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இருந்து அவ்தார் சிங் சீமா [Avtar Singh Cheema] என்பவர் தான் முதன் முதலாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார். உலக அளவில் இவர் தான் பதினாறாவது நபர். இந்திய ராணுவம் மேற்கொண்ட மூன்றாவது திட்டத்தில் பங்கேற்று இவர் இந்த சாதனையை 1965 இல் செய்தார். அதற்கு முந்தைய இரன்டு திட்டங்கள் தோல்வி அடைந்தன.

எவரெஸ்ட் சிகரத்தில் குறிப்பிட்ட உயரத்தை கடந்தவுடன் மிகவும் ஆபத்தான பகுதி [death zone] வருகிறது. இங்கு மற்ற இடங்களில் இருப்பதில் 40% அளவு மட்டுமே ஆக்சிஜன் இருக்கும். மிக உயரத்தில் உடலை வருத்திக்கொண்டு மலையேறும் போது உடலின் அனைத்து செல்களுக்கும் ஆக்சிஜன் தேவைப்படும். மிகக்குறைந்த அளவு மட்டுமே ஆக்சிஜன் இருக்குமென்பதால் உடல் செயலற்று போக அதிக வாய்ப்பு இருக்கிறது. இவற்றையெல்லாம் கடந்து வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டுமானால் அதற்கு சிறந்த பயிற்சிகளை முன்னரே எடுக்க வேண்டியது கட்டாயமாக இருக்கிறது.

அதிக உயரத்தில் ஏறுகிறவர்களுக்கு மூளையின் வீக்கம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனைத்தொடர்ந்து குமட்டல் மற்றும் வாந்தியை உண்டாகும். இன்னும் ஆபத்தானது, இது சிந்திப்பதில் சிரமத்திற்கு வழிவகுக்கும். ஆபத்தான உயரத்தில் ஏறுபவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை மறந்துவிடலாம் அல்லது பிரமைகள் கூட இருக்கலாம். இது ஆபத்தான ஏறுதலை இன்னும் உயிருக்கு ஆபத்தானதாக மாற்றும்.

இது தவிர பனி சறுக்கு, பனி புயல், அதிக குளிர் உள்ளிட்ட பல சவால்களும் இருக்கும் என்பதனால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது மிகவும் ஆபத்தானது என கூறப்படுகிறது.

உங்களுக்கு சாகசங்கள் செய்வது பிடிக்குமா? கமெண்ட் செய்திடுங்கள். 

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *