ரஜினி தாக்கத்தை ஏற்படுத்துவார் | எப்படி என அறிய முழுமையாக படியுங்கள்

கிட்டத்தட்ட 25 ஆண்டுகால இழுபறிகளுக்கு பிறகு அரசியல் களத்திற்கு வந்திருக்கிறார் திரு ரஜினிகாந்த். அவர் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டார் என இரண்டு மெகா கட்சியினர் சொல்லிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் ரஜினி அவர்களை அப்படி எல்லாம் ஒதுக்கிவிட முடியுமா என ஆராய்வதே இந்தக்கட்டுரையின் நோக்கம்
Rajini speech

ரஜினி அவர்களின் அரசியல் வருகை இத்தனை தாமதமாக நடந்திருப்பதில் மற்றவர்களைப்போலவே எனக்கும் உடன்பாடில்லாத ஒன்று தான். காரணம், அவருடைய உடல் நலனில் கொண்டிருக்கும் அக்கறை, இரண்டு ஆளுமைகள் இல்லாத சூழலை பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் மனப்பான்மை, பாஜகவின் தூண்டுதலில் தான் அரசியலுக்கு வருகிறாரோ என்கிற அச்சம் என பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் வாக்கு அரசியலில் இத்தகைய விமர்சனங்களை மட்டுமே கொண்டிருப்பவர்கள் பங்கேற்கப்போவது இல்லை. மாறாக, அரசியல் ஆராய்ச்சியெல்லாம் செய்திடாமல் மனதுக்கு தோன்றுகிறவர்களுக்கு வாக்களிக்கும் மக்கள் ஏராளமாக இங்கே இருக்கிறார்கள். இவர்கள் தான் எந்தக்கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கிற சக்திகள்.

இவர்கள் எந்தக்கட்சியையும் சாராதவர்கள். இவர்களுடைய வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவே அரசியல் கட்சிகள் பெரும்பாடுபடுகின்றன. இவர்களில் பெரும்பாலானவர்களின் வாக்குகள் திமுக அதிமுக என்ற இரண்டில் ஏதாவது ஒரு கட்சிக்குத்தான் போகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்கு முக்கியக் காரணம், அவர்கள் இருவர் தான் இங்கே போட்டியிடும் இரண்டு மெகா கட்சிகள். இவைகளில் ஒன்று தான் ஆட்சி அமைக்கும் என்ற எண்ணம் தான் அதற்குக் காரணம்.

இப்போதும் திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகள் தானே இருக்கின்றன. அவைகளில் ஒன்று தானே ஆட்சி அமைக்கும். இதில் ரஜினி எப்படி தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறுகிறீர்கள் என நீங்கள் கேட்கலாம். அப்படி நீங்கள் கேட்டிருந்தால் அரசியலை உன்னிப்பாக கவனிக்கிறீர்கள் என அர்த்தம்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் வென்றவருக்கும் இரண்டாம் இடம் பிடித்தவருக்கும் இடைப்பட்ட வித்தியாசத்தை பார்த்தால் ரஜினி அவர்கள் இந்தத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை புரிந்துகொள்ள முடியும். நீங்கள் பார்க்கும் பின்வரும் பட்டியலில் 2 தொகுதிகளில் 100 க்கும் குறைவான வாக்குகள் தான் வெற்றியை தீர்மானித்து இருக்கின்றன. 17 தொகுதிகளில் 1000 க்கும் குறைவான வாக்குகள் தான் வெற்றியை தீர்மானித்து இருக்கின்றன. 55 தொகுதிகளில் 5000 க்கும் குறைவான வாக்குகள் தான் 55 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானித்து இருக்கின்றன. 97 தொகுதிகளில் 10000 க்கும் குறைவான வாக்குகள் தான் வெற்றியைத் தீர்மானித்து இருக்கின்றன.

Results
# Name Winner Party Margin
228 Radhapuram I.Inbadurai   AIADMK 49
159 Kattumannarkoil N. Murugumaran   AIADMK 87
72 Tindivanam P. Seethapathy   DMK 101
105 Anthiyur K. R. Rajakrishnan   AIADMK 107
12 Perambur P. Vetrivel   AIADMK 124
33 Thiruporur M. Kothandapani   AIADMK 304
34 Cheyyur R. T. Arasu   DMK 304
218 Kovilpatti C. Kadambur Raju   AIADMK 428
135 Karur M. R. Vijayabhaskar   AIADMK 441
222 Tenkasi S. Selvamohandas Pandian   AIADMK 462
217 Ottapidaram R. Sundararaj   AIADMK 493
170 Thiruvidaimarudur Govi. Chezhian   DMK 532
224 Tirunelveli A. L. S. Lakshmanan Pillai   DMK 601
181 Thirumayam S. Regupathy   DMK 766
95 Paramathi-Velur K. S. Moorthiy   DMK 818
52 Bargur V. Rajendran   AIADMK 982
177 Peravurani M. Govindarasu   AIADMK 995
117 Kavundampalayam V. C. Arukutty   AIADMK 1,025
17 Royapuram D. Jayakumar   AIADMK 1,031
21 Anna Nagar M. K. Mohan   DMK 1,086
221 Kadayanallur K.A.M. Muhammed Abubacker   IUML 1,194
22 Virugambakkam V. N. Virugai Ravi   AIADMK 1,222
122 Kinathukadavu A. Shanmugam   AIADMK 1,332
6 Avadi K. Pandiarajan   AIADMK 1,395
158 Chidambaram Pandian K A   AIADMK 1,506
126 Madathukulam R. Jayaramakrishnan   DMK 1,667
5 Poonamallee T. A. Elumalai   AIADMK 1,763
149 Ariyalur S. Rajendran   AIADMK 2,043
180 Pudukkottai Periyannan Arasu   DMK 2,084
131 Natham M. A. Andi Ambalam   DMK 2,110
151 Tittakudi V. Ganesan   DMK 2,212
100 Modakkurichi V. P. Subramani   AIADMK 2,222
81 Gangavalli A. Muruthamuthu   AIADMK 2,262
183 Aranthangi E. Rathinasabhapathy   AIADMK 2,291
110 Coonoor Ramu   AIADMK 2,412
51 Uthangarai Manoranjitham Nagaraj   AIADMK 2,613
206 Virudhunagar A. R. R. Seenivasan   DMK 2,870
35 Maduranthakam S. Pugazhenthi   DMK 2,957
178 Gandharvakottai B. Arumugam   AIADMK 3,047
154 Panruti P. Sathya   AIADMK 3,128
24 Thiyagarayanagar B. Sathyanarayanan   AIADMK 3,155
96 Tiruchengodu Pon. Saraswathi   AIADMK 3,390
216 Srivaikuntam S. P. Shanmuganathan   AIADMK 3,531
175 Orathanadu M. Ramachandran   DMK 3,645
143 Lalgudi A. Soundara Pandian   DMK 3,837
80 Kallakurichi A. Prabhu   AIADMK 4,104
38 Arakkonam S. Ravi   AIADMK 4,161
77 Ulundurpettai R. Kumaraguru   AIADMK 4,164
204 Sattur S. G. Subramanian   AIADMK 4,427
223 Alangulam Poongothai Aladi Aruna   DMK 4,754
161 Mayiladuthurai V. Rathakrishnan   AIADMK 4,778
202 Rajapalayam S. Thangappandian   DMK 4,802
10 Thiruvottiyur K. P. P. Samy   DMK 4,863
53 Krishnagiri T. Senguttuvan   DMK 4,891
99 Erode (West) K. V. Ramalingam   AIADMK 4,906
54 Veppanahalli P. Murugan   DMK 5,228
157 Bhuvanagiri K. Saravanan Durai   DMK 5,488
125 Udumalaipettai Udumali Radhakrishnan   AIADMK 5,687
193 Madurai Central P.T.R.Palanivel

Thiagarajan

  DMK 5,762
229 Kanniyakumari S. Austin   DMK 5,912
57 Palacode K. P. Anbalagan   AIADMK 5,983
56 Thalli Y. Prakash   DMK 6,245
85 Mettur S. Semmalai   AIADMK 6,282
186 Sivaganga G. Baskaran   AIADMK 6,636
147 Perambalur R. Thamizhselvan   AIADMK 6,853
75 Vikravandi K. Rathamani   DMK 6,912
88 Salem (West) G. Venkatachalam   AIADMK 7,247
67 Arani Sevvoor S. Ramachandran   AIADMK 7,327
120 Coimbatore (South) Amman K. Arjunan   AIADMK 7,419
144 Manachanallur M. Parameswari   AIADMK 7,522
37 Kancheepuram C. V. M. P. Ezhilarasan   DMK 7,548
50 Tirupattur
(Vellore)
A. Nallathambi   DMK 7,647
118 Coimbatore North P. R. G. Arunkumar   AIADMK 7,724
98 Erode (East) K. S. Thennarasu   AIADMK 7,794
18 Harbour P. K. Sekar Babu   DMK 7,836
41 Ranipet R. Gandhi   DMK 7,896
146 Thuraiyur S. Stalinkumar   DMK 8,068
4 Thiruvallur V. G. Raajendran   DMK 8,138
124 Valparai V. Kasthuri Vasu   AIADMK 8,244
66 Polur K. V. Sekaran   DMK 8,273
15 Thiru. Vi. Ka. Nagar P. Sivakumar   DMK 8,322
7 Maduravoyal P. Benjamin   AIADMK 8,402
179 Viralimalai Dr. C. Vijaya Baskar   AIADMK 8,447
171 Kumbakonam G. Anbalagan   DMK 8,457
68 Cheyyar K. Mohan   AIADMK 8,527
210 Tiruvadanai Karunas   AIADMK 8,696
44 Anaikattu A. P. Nandakumar   DMK 8,768
20 Thousand Lights Ku. Ka. Selvam   DMK 8,829
26 Velachery Vagai Chandrasekhar   DMK 8,872
160 Sirkazhi P. V. Bharathi   AIADMK 9,003
92 Rasipuram V. Saroja   AIADMK 9,631
59 Dharmapuri P. Subramani   DMK 9,676
39 Sholingur N. G. Parthiban Mudaliar   AIADMK 9,732
45 Kilvaithinankuppam G. Loganathan   AIADMK 9,746
89 Salem (North) R.Rajendran   DMK 9,873
167 Mannargudi T. R. B. Rajaa   DMK 9,937
182 Alangudi Siva.Ve. Meyyanathan   DMK 9,941
101 Dharapuram Kalimuthu V.S   INC 10,017
164 Kilvelur U. Mathivanan   DMK 10,170
73 Vanur M. Chakrapani   AIADMK 10,223
16 Egmore K. S. Ravichandran   DMK 10,679
29 Sriperumbudur K. Palani   AIADMK 10,716
49 Jolarpet K. C. Veeramani   AIADMK 10,991
42 Arcot J. L. Eswarappan   DMK 11,091
201 Cumbum S. T. K. Jakkayian   AIADMK 11,221
106 Gobichettipalayam K. A. Sengottaiyan   AIADMK 11,223
209 Paramakudi Dr. S. Muthiah   AIADMK 11,389
61 Harur R. Murugan   AIADMK 11,421
46 Gudiyattam C. Jayanthi Padmanabhan   AIADMK 11,470
137 Kulithalai E. Ramar   DMK 11,896
36 Uthiramerur K. Sundar   DMK 12,156
71 Mailam R. Masilamani   DMK 12,306
93 Senthamangalam C. Chandrasekaran   AIADMK 12,333
176 Pattukkottai V. Sekar   AIADMK 12,358
62 Chengam M. P. Giri   DMK 12,691
60 Pappireddippatti P. Palaniappan   AIADMK 12,713
103 Perundurai N. D. Venkatachalam   AIADMK 12,771
107 Bhavanisagar S. Eswaran   AIADMK 13,104
102 Kangayam U.Thaniyarasu   AIADMK 13,135
225 Ambasamudram R. Murugaiah Pandian   AIADMK 13,166
166 Thiruthuraipoondi P. Adalarasan   DMK 13,250
212 Mudhukulathur S. Pandi   INC 13,348
123 Pollachi V. Jayaraman   AIADMK 13,368
8 Ambattur V. Alexander   AIADMK 13,498
94 Namakkal K. P. P. Baskar   AIADMK 13,534
112 Avanashi P. Dhanapal   AIADMK 13,674
109 Gudalur M. Thiravidamani   DMK 13,679
152 Vriddhachalam V. T. Kalaiselvan   AIADMK 13,777
19 Chepauk-Thiruvallikeni J. Anbazhagan   DMK 14,164
173 Thiruvaiyaru Durai Chandrasekaran   DMK 14,343
199 Periyakulam K. Kathirkamu   AIADMK 14,350
139 Srirangam S. Valarmathi   AIADMK 14,409
31 Tambaram S. R. Raja   DMK 14,445
91 Veerapandi P. Manonmani   AIADMK 14,481
219 Sankarankovil V. M. Rajalakshmi   AIADMK 14,489
47 Vaniyambadi Nilofer Kafeel   AIADMK 14,526
79 Sankarapuram T. Udhayasuriyan   DMK 14,528
108 Udhagamandalam R. Ganesh   INC 14,561
25 Mylapore R. Nataraj   AIADMK 14,728
205 Sivakasi K. T. Rajenthra Bhalaji   AIADMK 14,748
130 Nilakottai R. Thangathurai   AIADMK 14,776
187 Manamadurai S. Mariappankennady   AIADMK 14,889
121 Singanallur N. Karthik   DMK 15,180
200 Bodinayakanur O. Panneerselvam   AIADMK 15,608
226 Palayamkottai T. P. M. Mohideen Khan   DMK 15,872
114 Tiruppur (South) S. Gunasekaran   AIADMK 15,933
111 Mettupalayam O. K. Chinnaraj   AIADMK 16,114
23 Saidapet M. A. Subramanian   DMK 16,255
194 Madurai West Sellur K. Raju   AIADMK 16,398
142 Thiruverumbur Anbil Mahesh Poyyamozhi   DMK 16,695
227 Nanguneri H. Vasanthakumar   INC 17,315
82 Attur R. M. Chinnathambi   AIADMK 17,334
83 Yercaud G. Chitra   AIADMK 17,394
153 Neyveli Saba Rajendran   DMK 17,791
27 Sholinganallur Aravind Ramesh   DMK 17,913
207 Aruppukkottai K. K. S. S. R. Ramachandran   DMK 18,054
69 Vandavasi Ambeth Kumar   DMK 18,068
138 Manapaarai R. Chandrasekar   AIADMK 18,277
184 Karaikudi Kr. Ramasamy   INC 18,283
58 Pennagaram P. N. P. Inbasekaran   DMK 18,446
213 Vilathikulam K. Uma Maheswari   AIADMK 18,718
220 Vasudevanallur A. Manoharan   AIADMK 18,758
148 Kunnam R. T. Ramachandran   AIADMK 18,796
191 Madurai North V. V. Rajan Chellappa   AIADMK 18,839
28 Alandur T. M. Anbarasan   DMK 19,169
14 Villivakkam B. Ranganathan   DMK 19,321
2 Ponneri P. Balaraman   AIADMK 19,336
188 Melur P. Selvam   AIADMK 19,723
162 Poompuhar S. Pavunraj   AIADMK 19,935
133 Vedasandur V. P. B. Paramasivam   AIADMK 19,938
84 Omalur S. Vetrivel   AIADMK 19,956
78 Rishivandiyam K. Vasantham Karthikeyan   DMK 20,503
163 Nagapattinam Thamimum Ansari   AIADMK 20,550
132 Dindigul Dindigul C. Sreenivasan   AIADMK 20,719
214 Thoothukudi P. Geetha Jeevan   DMK 20,908
230 Nagercoil N. Suresh Rajan   DMK 20,956
169 Nannilam R. Kamaraj   AIADMK 21,276
141 Tiruchirappalli (East) Vellamandi N. Natarajan   AIADMK 21,894
70 Gingee K. S. Masthan   DMK 22,057
30 Pallavaram I. Karunanithi   DMK 22,165
74 Villupuram C. V. Shanmugam   AIADMK 22,291
150 Jayankondam J. K. N. Ramajeyalingam   AIADMK 22,934
55 Hosur P. Balakrishna Reddy   AIADMK 22,964
195 Thiruparankundram S. M. Seenivel   AIADMK 22,992
165 Vedaranyam O. S. Manian   AIADMK 22,998
3 Tiruttani P. M. Narasimhan   AIADMK 23,141
1 Gummidipoondi K. S. Vijayakumar   AIADMK 23,395
196 Tirumangalam R. B. Udhaya Kumar   AIADMK 23,590
134 Aravakurichi V. Senthil Balaji   AIADMK 23,661
192 Madurai South S. S. Saravanan   AIADMK 23,763
40 Katpadi Duraimurugan   DMK 23,946
172 Papanasam R. Doraikannu   AIADMK 24,365
155 Cuddalore M. C. Sampath   AIADMK 24,413
190 Sholavandan K. Manickam   AIADMK 24,857
104 Bhavani K. C. Karuppannan   AIADMK 24,887
127 Palani I .P. Senthil Kumar   DMK 25,586
215 Tiruchendur Anitha R. Radhakrishnan   DMK 26,001
231 Colachel J. G. Prince   INC 26,028
43 Vellore P. Karthikeyan   DMK 26,210
9 Madhavaram S. Sudarsanam   DMK 26,253
32 Chengalpattu M. Varalakshmi   DMK 26,292
65 Kalasapakkam V. Panneerselvam   AIADMK 26,414
208 Tiruchuli Thangam Thennarasu   DMK 26,577
174 Thanjavur M. Rangaswamy   AIADMK 26,874
129 Athoor I. Periasamy   DMK 27,147
48 Ambur R. Balasubramani   AIADMK 28,006
156 Kurinjipadi M. R. K. Panneerselvam   DMK 28,108
140 Tiruchirappalli (West) K. N. Nehru   DMK 28,415
198 Andipatti Thanga Tamil Selvan   AIADMK 30,196
90 Salem (South) A. B. Sakthivel Mudaliar   AIADMK 30,453
145 Musiri M. Selvarasu   AIADMK 32,087
115 Palladam Nadarajan   AIADMK 32,174
189 Madurai East Moorthy P   DMK 32,772
197 Usilampatti P.Neethipathi   AIADMK 32,906
233 Vilavancode S. Vijayadharani   INC 33,143
211 Ramanathapuram Dr. M. Manikandan   AIADMK 33,222
64 Kilpennathur K. Pitchandi   DMK 34,666
136 Krishnarayapuram M. Geetha   AIADMK 35,301
116 Sulur R. Kanagaraj   AIADMK 36,631
203 Srivilliputhur M. Chandra Prabha   AIADMK 36,673
87 Sankari S. Raja   AIADMK 37,374
113 Tiruppur (North) K. N. Vijayakumar   AIADMK 37,774
11 Dr. Radhakrishnan Nagar J. Jayalalithaa   AIADMK 39,545
13 Kolathur M. K. Stalin   DMK 39,730
232 Padmanabhapuram T. Mano Thangaraj   DMK 40,905
76 Tirukkoyilur K. Ponmudy   DMK 41,057
185 Tiruppattur
(Sivaganga)
A. Nallathambi   DMK 42,004
86 Edappadi Edappadi K. Palanisamy   AIADMK 42,022
234 Killiyoor S. Rajeshkumar   INC 46,295
97 Kumarapalayam P. Thangamani   AIADMK 47,329
63 Tiruvannamalai E. V. Velu   DMK 50,348
119 Thondamuthur S. P. Velumani   AIADMK 64,041
128 Oddanchatram R. Sakkarapani   DMK 65,727
168 Thiruvarur M. Karunanidhi   DMK 68,366

ஏற்கனவே 2016 இல் அமைந்த கூட்டணி தான் இந்தத்தேர்தலிலும் நீடிக்கும் என எதிர்பார்க்கலாம். கமல், ரஜினி, நாம் தமிழர் கட்சி ஆகியன தனித்து போட்டியிடவே அதிகம் வாய்ப்பு இருக்கிறது. தமிழக தேர்தலில் கமல் அவர்கள் பங்கேற்றாலும் கூட அவருக்கு பின்னர் அரசியலுக்கு வரும் ரஜினி அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார். இதனை மறுக்கவே முடியாது. சூப்பர் ஸ்டார்கள் எளியவர்களின் மனதில் எளிதில் ஆக்கிரமிப்பு செய்துகொள்கிறார்கள். இது தமிழக அரசியல் களத்தில் எதார்த்தமான உண்மையாக இருக்கிறது.

துக்ளக் ஆசிரியர் திரு குருமூர்த்தி அவர்கள், திமுக அதிமுக இரண்டு கட்சிகளையும் சாராதவர்கள் மூன்றாம் சக்தியை எதிர்பார்க்கிறார்கள். ரஜினி அந்த சக்தியாக அமைவார். ஆகவே அவர் ஆட்சிக்கு வருவார் என ஆரூடம் சொல்லியிருக்கிறார். ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று என அடித்துச்சொல்ல முடியும். மிகப்பெரிய சம்பவங்கள் நடைபெற்று மக்களிடம் மாபெரும் அலை ஒன்று ஏற்பட்டால் ஒழிய புதிய ஒருவர் ஆட்சி அமைப்பது எதார்த்தத்தில் சாத்தியமில்லாத ஒன்று. ஜெயலலிதா அவர்கள் மறைந்த போது அதிமுகவில் வெற்றிடம் நிலவியது உண்மை தான். இதனை யாராலும் மறுக்க முடியாது. ஒருவேளை அதே சூழல் இன்றளவும் நீடித்து இருந்தால் திமுகவிற்கு எதிராக ரஜினி என்ற ஒன்றினை கட்டமைத்து இருக்க முடியும்.

ஆனால் இரண்டு மாதங்களில் கலைந்து விடும் என்ற அதிமுக ஆட்சியை வெற்றிகரமாகவும் ராஜ தந்திரமாகவும் 5 ஆண்டுகள் நடத்தி இருக்கிறார் இப்போதைய தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி. இப்போது மக்கள் மனதில் ‘இவரும் நல்லாத்தானே பன்றாரு’ என்ற எண்ணம் தோன்றத்துவங்கி இருக்கிறது. ஆகவே திமுகவிற்கு எதிரான கட்சியாக இன்றளவும் அதிமுகவே இருக்கிறது. அதில் மாற்றுக்கருத்து இல்லை.

ரஜினி எந்தவிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனில் ஆட்சி அமைக்கப்போவது திமுகவா அல்லது அதிமுகவா என்பதில் தான் ரஜினி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார். சொற்ப வாக்குகளே வெற்றியைத் தீர்மானித்து இருக்கிற சூழலில் ரஜினி அவர்கள் பெறக்கூடிய வாக்குகள் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும். ஆட்சியமைக்க திமுகவிற்கு சாதகமான சூழல் நிலவுவதாக கருத்தப்படக்கூடிய சூழ்நிலையில் அந்த வாய்ப்பை திமுகவிடம் இருந்து ரஜினியால் தட்டிப்பறித்து அதிமுகவிடம் கொடுக்க முடியும். இல்லையேல் அதிமுகவிற்கு போகவேண்டிய வாக்குகளை பெற்று திமுகவிற்கு வெற்றியை எளிதாக்கலாம். ஆக ரஜினி அவர்கள் இந்தத் தேர்தலில் தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்துவார். அவர் ஆட்சியை பிடிப்பார் என்பது சாத்தியமில்லாத ஒன்று. 

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *