சீன பொருள்களை முற்றிலும் புறக்கணித்துவிட முடியுமா? | boycott china

ஒவ்வொருமுறை சீனாவுடன் பிரச்சனை எழும்போதும் சீன பொருள்களை புறக்கணியுங்கள், சீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தாதீர்கள் என்பது போன்ற கோரிக்கைகள் எழுகின்றன. ஆனால் சீனாவையும் சீனத்து பொருள்களையும் அவ்வளவு எளிதாக புறக்கணித்துவிட முடியுமா?

சீன பொருள்களை முற்றிலும் புறக்கணித்துவிட முடியுமா

 

சீன பொருள்களுக்கு எதிரான மனநிலை இந்தியர்களிடம் இயல்பாகவே இருக்கிறது. அதனை அவ்வப்போது பொதுவெளியில் வைக்கப்படும் கருத்துக்களில் இருந்து அறிய முடிகிறது. தற்போது இந்தியா சீனா எல்லையில் நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த பிறகு மீண்டும் சீன பொருள்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் வேகமெடுத்திருப்பதை பார்க்க முடிகிறது. இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை என்றாலும் கூட எதார்த்தத்தில் அது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்திடவே செய்கிறது.

நான் மிகப்பெரிய பொருளாதார வல்லுநர் இல்லை என்பதை முன்னரே சொல்லிவிடுகிறேன். ஆகவே நான் குறிப்பிடும் கருத்துக்கள் எதார்த்தமானவையாக புரிந்துகொள்ளக்கூடியவையாக இருக்கும்.

சில தினங்களுக்கு முன்பாக மருந்தகம் ஒன்றிற்கு மருந்து வாங்க சென்றிருந்தேன். அப்போது அருகில் மருந்து வாங்கிக்கொண்டிருந்த ஒருவர் இதே மருந்தைத்தான் போன மாசமும் வாங்குனேன் அப்போது குறைவாகத்தானே சொன்னீர்கள், இப்போது ஏன் அதிக விலை கூறுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த மருந்துக்கடைக்காரர் கூறிய பதில் “கொரோனா லாக்டவுன் காரணமாக சீனாவில் இருந்து மூலப்பொருள்கள் எதுவும் இந்தியாவிற்கு இறக்குமதி ஆகவில்லை. ஆகவே தான் மருந்தின் விலைகள் கொஞ்சம் உயர்ந்து இருக்கின்றன” என்றார். பல்வேறு மருந்துப்பொருள்களை இந்தியாவில் உற்பத்தி செய்தாலும் கூட அதற்கான பெரும்பான்மையான மூலப்பொருள்களை சீனாவில் இருந்தே இந்தியா இறக்குமதி செய்கிறது. 

இந்தியாவில் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் விற்று தீர்ந்திருக்கிறது OnePlus 8 Pro மொபைல் போன். எங்களால் வாங்க முடியவில்லை என பலர் ட்விட்டரில் புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.

அடுத்தது, தொழில்நுட்பங்கள் மற்றும் ஆப்களை எடுத்துக்கொள்வோம். இன்று இந்தியர்களால் பெரிதும் பயன்படுத்தப்படும் ஆப்பாக டிக்டாக் இருக்கிறதென்று எடுத்துக்கொள்வோம். டிக்டாக் பயன்படுத்தக்கூடாது என்று நாங்களும் கூறி இருக்கிறோம். ஆனால் அது சீன ஆப் என்பதனால் மட்டுமே அல்ல, பாதுகாப்பு குறைபாடு, நேர விரயம் போன்றவற்றினால் தான் கூறினோம். இப்போது சிலர் டிக்டாக் ஆப்பை சீன ஆப் என்றும் ஆகையால் அதனை பயன்படுத்தாதீர்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனால் அவர்களிடம் நான் கேட்கக்கூடிய ஒரு கேள்வி “சரி டிக் டாக் உட்பட எந்த சீனத்து ஆப்பையும் பயன்படுத்தவில்லை, ஆனால் அதற்கு நிகரான இந்திய ஆப்களை சொல்லுங்களேன்” என்பதுதான். 

இந்தியாவில் தற்போது பெரும்பான்மையானவர்களால் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மொபைல் போன்கள் சீனாவோடு தொடர்பு கொண்டவையே. இந்தியாவில் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் விற்று தீர்ந்திருக்கிறது OnePlus 8 Pro மொபைல் போன். எங்களால் வாங்க முடியவில்லை என பலர் ட்விட்டரில் புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.

 

நாம் பெரும்பான்மையாக பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் சீனாவில் தயாரான பொருள்களாகவே இருக்கின்றன. இதில் சீனாவின் தவறு என்ன இருக்கிறது என்பது இன்றும் புரியவில்லை. ஒரு கடைக்கு செல்கிறவர் ஒரு பொருளை கேட்டால் அதில் விலை குறைவானதாக எது இருக்கிறதோ அதைத்தானே வாங்குவார். விலை குறைவாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டால் அனைவரும் தானாகவே இந்தியாவில் தயாராகும் பொருள்களை வாங்கிட ஆரம்பித்துவிடுவார்கள். இதுதான் எதார்த்தமான உண்மை. 

ஆகா, இந்தக்கட்டுரை சீனாவிற்கு ஆதரவாக அல்லவா இருக்கிறது, இந்த கட்டுரையை எழுதியவரை ஆன்ட்டி இந்தியன் என்று சொல்லிவிடலாம் என நீங்கள் நினைத்திருந்தால் அது தவறென இப்போதே உணர்ந்துகொள்ளுங்கள். நான் இங்கே முன்வைத்திருக்கும் உதாரணங்கள் மிகவும் எதார்த்தமானவை. இன்று நாம் பல பொருள்களை விலை குறைவாக பயன்படுத்திக்கொண்டு இருப்பதற்கு காரணம் உலகமயமாக்கல் தான். விலை குறைவாக இருந்தால் பயன்பாடு சிறப்பானதாக இருந்தால் மக்கள் தானாக விரும்புவார்கள். வெறுமனே சீன பொருள்களை பயன்படுத்தாதீர்கள் என்று அறிவுரை சொல்வதற்கு முன்னால் ஏதாவதொரு சீன பொருளுக்கு மாற்றான இந்திய தயாரிப்பை அறிந்து அது பற்றி கூறுங்கள் அல்லது நீங்களே தயாரிக்கும் முயற்சியில் இறங்குங்கள். 

அதுதான் உண்மையான பூரணத்துவமாக இருக்கும். அதுவரைக்கும், சீன பொருள்களை முற்றிலும் புறக்கணித்துவிட முடியாது என்பதே எதார்த்தமான உண்மை.



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *