கவியரசு கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு

மனிதர்கள் வந்துபோகும் இந்த தரணியிலே மறைந்தும் நிலைத்து நிற்கும் வல்லமை உடையோர் “படைப்பாளிகள்” தான். தமிழ் தாய் ஈன்றெடுத்த படைப்பாளிகளில் என்றும் தமிழக மக்களின் உள்ளங்களில் உயிர்ப்போடு வாழ்ந்துகொண்டிருப்பவர் கவியரசர் கண்ணதாசன். பிறப்பில் துவங்கி இறப்பு வரைக்கும், இளமையில் துவங்கி முதுமை வரைக்கும், மகிழ்ச்சியில் துவங்கி துன்பம் வரைக்கும், தோல்வியில் துவங்கி வெற்றி வரைக்கும் அனைத்து உணர்வுகளுக்குமான கவிதைகளை தமிழுக்குத் தந்தவர் கவியரசு கண்ணதாசன். கவியரசு கண்ணதாசன் அவர்கள் வெறும் கவிதைகளோடு தன் எல்லையை சுருக்கிக்கொள்ளாமல் அரசியல், மதம், ஆன்மீகம் என பரந்துபட்டு சிந்தித்து செயலாற்றினார்.

Read more

“கருப்பு” தமிழ் கவிதை

கருப்பு  மேலும் பல கவிதைகள் இங்கே வெள்ளையா இருக்கவன்  பொய் சொல்லமாட்டான்  என்ற சொல்லாடலை நகைச்சுவையாக  கடந்துபோகலாம் ஆனால் எத்தனை மூளைகள் கருப்பு நிறத்தவரை கண்டவுடன்   நம்பும்

Read more

#கனவு தமிழ் கவிதை

கனவு – கவிதை மேலும் பல கவிதைகள் இங்கே சாமானியர்கள் வாழ்வில்  வறுமை தடுக்கும் வசந்த நிகழ்வுகளை  அளவில்லாமல் அள்ளிக்கொடுத்து அற்புதம் நிகழ்த்தும் “கனவு” அதிகாரபலம் பொருந்திய  பல பயில்வான்களின்

Read more

நெல்சன் மண்டேலா வரலாறு : 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த போராளி

நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி அன்று தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவராக இருந்து வந்தார். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் ‘நெல்சன் ரோபிசலா மண்டேலா’. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரது பெயரில் இருக்கும் நெல்சன் என்பது அவரது பள்ளியில் ஆசிரியர் ஒருவர் வைத்த பெயர் என சொல்லப்படுகிறது.

Read more

“செல்லாத பணம்” எளிய நடையில் எழுதப்பட்ட சிறந்த நாவல் | PDF DOWNLOAD

அண்மையில் செல்லாத பணம் என்ற நாவலுக்காக எழுத்தாளர் இமயம் அவர்கள் சாகித்ய அகாடமி விருதினை வென்றுள்ளார். மக்களின் உணர்வுகளை எழுதக்கூடிய முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் இமயம் அவர்களுக்கு இவ்விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான விசயமாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. பின்வரும் வீடியோவில் செல்லாத பணம் குறித்த மிகவும் விரிவாக பேசியிருக்கிறேன். நீங்கள் செல்லாத பணம் என்ற புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும்.

Read more

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் | PDF DOWNLOAD

மிகவும் நாணயமிக்க பெற்றோர்களை கொண்டிருந்த ஜான் பெர்கின்ஸ் அமெரிக்காவின் ரகசிய உளவு அதிகாரியாக வேலை பார்த்தவர். அமெரிக்காவின் உத்தரவிற்கு இணங்கி பல நாடுகளை ஆசை காட்டியோ அல்லது அந்த நாட்டின் தலைவர்களை சில சிக்கல்களில் சிக்கவைத்து மிரட்டியோ அமெரிக்காவிற்கு அடிமைப்படுத்தும் வேலைகளை கச்சிதமாக செய்து வந்துள்ளார். பனாமா நாடு உருவாக்கம், சவூதி அரேபியாவில் குப்பை அள்ளும் வேலை மூலமாக நுழைந்து அடிமைப்படுத்தியது, ஒசாமா பின்லேடன் வளர்த்தெடுக்கப்பட்டது என பல்வேறு ரகசியங்களை போட்டு உடைத்திருக்கிறார் ஜான் பெர்கின்ஸ்.

Read more

நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவது சாத்தியமா? வாய்ப்புகள் சவால்கள்

இந்தியாவில் ஒருவர் மருத்துவர் ஆக வேண்டுமெனில் நீட் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றால் மட்டும் தான் சாத்தியம். சமூக நீதிக்கு எதிராகவும் அரசுப்பள்ளி மாணவர்களின் நலனுக்கு எதிராகவும் நீட் தேர்வு இருப்பதனால் அதனை நீக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன. நீட் தேர்வை நீக்க முடியுமா? அதிலே இருக்கும் சவால்கள் என்னென்ன? வாருங்கள் பேசலாம்.

Read more

பாரதியார் : அப்போது யாரும் கண்டுகொள்ளவில்லை ஆனால் இப்போது…

ஒரு சிறந்த சாதனையாளருக்கு சமூகம் செய்யக்கூடிய சிறந்த அங்கீகாரம் என்பது அவர் உயிரோடு இருக்கும் போதே அவரது சாதனைக்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் வழங்குவது தான். ஆனால் நாமோ

Read more

வெற்றி பெற்றவர்கள் புரிந்துகொண்ட 10 உண்மைகள், மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லை

இங்கே அனைவரும் வெற்றிக்காகத்தான் போராடுகிறோம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்றவர்களை நீங்கள் பட்டியலிட்டு அவர்களது கடந்த காலத்தை கவனித்துப் பார்த்தால் அதிலே அவர்கள் பல தோல்விகளை சந்தித்தவர்களாகத்தான் இருப்பார்கள். அதே தோல்வியை சந்தித்த பலர் காணாமல் போயிருக்கும் போது சிலர் மட்டும் எப்படி வெற்றியாளர்களாக மாறினார்கள் என யோசித்தால் ‘அவர்கள் உண்மைகளை புரிந்துகொண்டவர்கள்’ என்பது புலப்படும். நீங்களும் வெற்றிக்காக போராடுகிறவர் எனில் பின்வரும் உண்மைகளை புரிந்துகொள்ளுங்கள்.

Read more

அகில் குரேஷி : நீதிபதிக்கு மறுக்கப்பட்ட நீதி

ஒவ்வொருமுறை ‘கொலிஜியம்’ புதிய நீதிபதிகளை பரிந்துரை செய்திடும் போதும் சில கேள்விகளும் எழவே செய்கின்றன. அதில் முக்கியமான கேள்விகள் அனைத்தும் ‘கொலிஜியம்’ அமைப்பின் வெளிப்படைத்தன்மை குறித்ததாகவே இருக்கும். அந்தக் கேள்விகள் அனைத்தும் “ஏன் இவரை நியமிக்கவில்லை?”என்பதை ஒட்டியே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது. ‘கொலிஜியம்’ அமைப்போ ஒருவரை ஏன் பரிந்துரை செய்திடவில்லை என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக சொல்லும் வழக்கத்தை கொண்டிருக்கவில்லை என்பதனால் விமர்சனத்தை அது எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

Read more