எகிப்து பிரமிடுகள் ஏன் இன்றும் பிரம்மிப்பானவை? எகிப்து பிரமிடுகள் எப்படி கட்டப்பட்டன?
பண்டையகால எகிப்தில் வாழ்ந்த மக்களுக்கு இறப்புக்கு பிறகான வாழ்க்கையில் அதீத நம்பிக்கை உண்டு. உயிரோடு இருக்கும் போது எப்படி வாழ்க்கை உள்ளதோ அதைப்போலவே இறப்புக்கு பிறகும் வாழ்க்கை உண்டு என்ற அவர்களின் நம்பிக்கை காரணமாக தங்களை ஆண்ட மன்னர்களுக்கு மிகப்பெரிய பிரமிடுகளை கட்டினார்கள். இந்த பிரமிடுகள் அனைத்தும் ஆட்சி செய்த மன்னர்களுக்கும் சில நேரங்களில் ராணிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் கட்டப்பட்டன. சாதாரண மக்களுக்கு இப்படிப்பட்ட பிரமிடுகள் கட்டப்படவில்லை. எகிப்தை போலவே சீனா உள்ளிட்ட பிற இடங்களிலும் பிரமிடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், எகிப்தில் உள்ள பிரமிடுகள் மிகவும் பழமையானவை மற்றும் பெரியவை. தற்போது, கிசாவின் உயரமான பிரமிடு தான் மக்களை ஈர்க்கும் விதத்தில் ஒரு முழுமையான பிரமிடாக இருக்கிறது. இதன் உயரம் 146.5 மீ. மனிதனால் உருவாக்கப்பட்ட உயரமான படைப்பு இதுதான் என்கிற சாதனையை அடுத்த 3800 ஆண்டுகளுக்கு தன்னகத்தே கொண்டிருந்தது கிசா பிரமிடு.
Read more