சமைக்க துவைக்க மட்டுமில்லை நான் – இப்படிக்கு அவள் நிஷோ !

உரக்க கூவுகின்றன
இன்றைய சேவல்கள்
அலாரம் அடிக்கிறது
அதிகாலை துயில் எழபுதுமை யாதெனில்
அடுமனைக்கு பெயர்
‘smart  kitchen’
அதைத்தவிர பழமை
வேறேதும் மீறப்படவில்லைஏசிய குரலுடன் அன்பாய் அழைக்கிறது ஆண்மை. ஏகாந்த நாதத்தில் ‘பெட் காபி ‘ இல் ஆரம்பித்து டிபன் , சாப்பாடு , இரவு டிபன் என தினமும் திரும்ப திரும்ப தொடர்கின்றது பெண்ணாகிய என் வாழ்வு .

மனதிற்குளாக ஒரு குமுறல் இருபது நூறாய் ஆண்டுகள் கடந்தபின்னும்  எதிலும் மீளவில்லை என்று நான் இன்று வானம் தாண்டி சிறகுகள் விரிக்கின்றேனோ சந்தேகத்துடன் மனசையும் சேர்த்தே துவைக்கின்றேன் ஆடையுடன் .

ஏசியில் படுத்து அயர் நீங்கினாலும் உரக்க சொல்ல தோன்றுகிறது சமைக்கவும் துவைக்கவும் மட்டுமே நானில்லை என்று .

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *