இந்திய ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால் வெற்றிக்கதை | Indian Hockey Captain rani rampal success story

அவளை ஹாக்கி விளையாட அனுமதித்தால் டீஷர்ட், குட்டைப்பாவாடை அணிவாள் உங்களுக்கு கெட்டபெயர் தான் வந்து சேரப்போகிறது என்று பெற்றோரிடம் சொன்ன அதே சொந்தக்காரர்கள் இன்று ராணி இந்தியாவின் பெருமை என சொல்கிறார்கள் அவர்களது குழந்தைகளை விளையாட அனுமதிக்கிறார்கள் – ராணி ராம்பால்

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு : தேர்வுகளை ரத்து செய்வது சரியா?

10,000 ஆயிரம் காலியிடங்கள் இருக்கக்கூடிய பணிக்கு தேர்வு வரப்போகிறது என்றால் அதற்கு 7 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான விண்ணப்பங்கள் வருகின்றன. சாதாரண குடும்ப பின்னனியில் இருந்து வருகிற இளைஞர்கள் பல ஆயிரங்கள் செலவு செய்து, பல்வேறு சிறப்பு வகுப்புகளுக்கு சென்று, பல மணிநேரம் கடுமையாக படித்து எப்படியேனும் வேலைக்கு தேர்வாகிவிட வேண்டும் என முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். காரணம், அரசுப்பணி அவர்களுக்கு ஒரு மாபெரும் கனவு.

Read more

குடியரசு தினம் – ஜனவரி 26 – ஏன்?

இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து நம்மை நாமே முழுமையாக ஆட்சி செய்ய துவங்கிய தினம் இன்று (ஜனவரி 26 ) . குடியரசு தினம் மலர்ந்த

Read more

மனைவி எப்படி இருக்க வேண்டும், உதாரணம் ஜென்னி மார்க்ஸ் தான்

வெற்றிகரமான காதல் ஜோடிகளுக்கு உதாரணமாக ஒரு ஜோடியை நீங்கள் குறிப்பிட வேண்டும் என்றால் நிச்சயமாக அது கார்ல் மார்க்ஸ் – ஜென்னி மார்க்ஸ் ஜோடியைத்தான் நான் குறிப்பிடுவேன், கார்ல் மார்க்ஸ் வரலாற்றை அறிந்தவர்கள் அப்படித்தான் செய்வார்கள். “மூலதனம்” என்ற அற்புதமான நூலை உலகிற்கு அளித்த மிகச்சிறந்த பொதுவுடைமைவாதி கார்ல் மார்க்ஸ் என்றால் அவர் அந்த சாதனையை படைக்க அவருக்கு பக்கபலமாக செயல்பட்டவர்கள் இருவர், ஒருவர் மனைவி ஜென்னி, இன்னொருவர் நண்பர் ஏங்கல்ஸ்.

Read more

இன்டர்நெட் – இனி இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வந்த அரசியல் பிரிவு 370 ஐ மத்திய அரசு நீக்கியது. அப்போது வன்முறைகள் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்திற்காக ஊரடங்கு உத்தரவு, மிக முக்கிய தலைவர்களை வீட்டுக்காவலில் வைப்பது என நடவடிக்கைளை எடுத்தது அரசு. மிக முக்கியமாக, ஜம்மு காஷ்மீர் முழுவதும் இன்டர்நெட் வசதியை முடக்கி வைத்தது மத்திய அரசு. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை ஆகஸ்ட் முதல் விசாரித்து வந்தது உச்சநீதிமன்றம். தற்போது வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பில் இன்டர்நெட் இந்தியக்குடிமகனின் அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வரவேற்கப்படக்கூடிய தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.

Read more

ஈரான் – அமெரிக்கா இடையே என்ன பிரச்சனை? | Iran – US Problem Explained in tamil

நான் இந்தப்பதிவை எழுதிக்கொண்டு இருக்கும் போது ஈரான், ஈராக்கில் இருக்கும் அமெரிக்க போர் நிலைகளின் மீது வான்வெளி ஏவுகனை தாக்குதலை நடத்திக்கொண்டு இருக்கிறது. இந்த தாக்குதல் ஈரான் போர்த்தளபதி காசிம் சுலைமானியின் படுகொலைக்கு பதிலடி என சொல்லப்படுகிறது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சிக்கல் இருந்து வருவதனை அனைவருமே அறிந்திருப்போம். இந்த சிக்கல்களும் மோதல்களும் இன்று நேற்று அல்ல, அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாகவே நடைபெற்று வருகிறது. இந்தப்பதிவில் இயன்றவரையில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எங்கு பிரச்சனை துவங்கியது முதற்கொண்டு பல தகவல்களை கொடுத்திருக்கிறேன்.

Read more

குழந்தைகளின் கல்வியில் கண்மூடித்தனமாக முதலீடு செய்வது சரியா?

இந்தியப்பெற்றோர்கள் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் படிப்பிற்காக தங்களது அன்றாட வருமானம், சேமிப்பு அனைத்தையும் செலவு செய்கின்றனர். அதேபோல பிள்ளைகளின் கல்விக்காக கடன் வாங்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் கணிசமாகவே அதிகம் தான். இதில் ஒரு சிறப்பம்சம் இருக்கிறது, சில பத்தாண்டுகளுக்கு முன்பு அடுப்பூதும் பெண்களுக்கு எதற்கு கல்வி என கேட்டவர்களும் கூட இன்று பெண் பிள்ளைகளையும் உயர் படிப்புகள் வரை படிக்க வைக்க நினைக்கிறார்கள். இதற்காக தங்களது தலையையும் அடமானம் வைக்க இந்தியப்பெற்றோர்கள் துணிகிறார்கள்.

Read more

இன்சூரன்ஸ் எடுக்க போறீங்களா? நீங்கள் கவனிக்க வேண்டிய விசயங்கள் இவை தான்

கார் அல்லது இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு இன்சூரன்ஸ் என்றால் என்ன? இன்சூரன்ஸ் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது கண்டிப்பாக தெரிந்து இருக்க வேண்டும். உங்களது வாகனம் விபத்து அல்லது திருட்டு அல்லது தாக்குதல் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டால் இழப்பீட்டை பெறுவதற்கு இன்சூரன்ஸ் செய்திருப்பது அவசியம். வாகனம் வாங்கியது முதல் நீங்கள் அதனை சாலையில் ஓட்டுகிற வரை செல்லத்தக்க இன்சூரன்ஸ் ஆவணத்தை வைத்திருக்க வேண்டியது கட்டாயம். அப்படி இன்சூரன்ஸ் வைத்திருக்காவிடில் போலீசாரின் வழக்குக்கு உள்ளாவதுடன் உங்களால் இழப்பீட்டையும் பெற இயலாது.

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் திருநங்கை வெற்றி பெற்று அசத்தல் | ஸ்வப்னா

தமிழில் இளங்கலை பட்டம் பெற்ற மதுரையைச் சேர்ந்த ஸ்வப்னா 2013 ஆம் ஆண்டு TNPSC நடத்திய தேர்வில் பங்கேற்க முயன்றார். ஆனால் அவருக்கு பாலின அடையாளம் சம்பந்தப்பட்ட பிரச்சனையினால் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அறவழி போராட்டம் மற்றும் நீதிபோராட்டம் என தனக்காக நீதி கேட்டு போராடினார். வழக்கம் போல நீதிமன்றம் தலையிட்டு தான் அவருக்கான அனுமதியை வழங்கியது. சென்னை உயர்நீதிமன்றம் அவரை தேர்வில் பங்குகொள்ள அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியது. அவருக்கு மட்டுமல்ல, மூன்றாம் பாலினத்தவர்கள் எவரும் தேர்வில் பங்குகொள்ள அனுமதிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

Read more