லஞ்சம் வாங்கினால் தூக்கு தண்டணை ஏன் கொடுக்கக்கூடாது? : கேள்வியெழுப்பிய நீதிமன்றம்

மதுரை உயர்நீதிமன்றக்கிளை மீது எப்போதுமே தனி அபிப்பிராயம் கொண்டவன் நான் . மக்களுக்கு ஆதரவான கேள்விகளை எழுப்புவதில் ஒருபடி மேலே எப்போதும் இருக்கக்கூடியவர்கள் இங்குள்ள நீதிபதிகள் .

Read more

அமெரிக்க பாடப்புத்தகத்தில் இடம்பிடித்த சாமானிய இந்தியர் | Forest Man Of India

நீங்கள் செய்கின்ற செயலால் தான் நினைவில் வைக்கப்படுவீர்கள், கொண்டாடப்படுவீர்கள். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் வருங்கால தலைமுறைக்காகவும் தான் சார்ந்த நிலத்திற்காகவும் இளம் வயதில் ஒவ்வொரு மரமாக

Read more

அம்பேத்கரை ஆதரித்த முத்துராமலிங்கத்தேவர் – புரிதல் வேண்டும் இக்கால தலைமுறைக்கு

இன்றைய இளைய தலைமுறையிடம் வேண்டிக்கொள்வது ஒன்றே ஒன்று தான். முதலில் தேடிப்படியுங்கள். பிறகு பேசுங்கள், விவாதம் செய்திடுங்கள். உங்களுக்கு முந்தைய தலைமுறை என்ன சொல்கிறதோ அதை அப்படியே நம்பிவிடாதீர்கள். அவர்கள் சொல்வதைக்காட்டிலும் புகழ்மிக்க பல விசயங்களை செய்திருக்கிறார்கள் நீங்கள் கொண்டாடும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களும் அம்பேத்கர்
அவர்களும். இருவருமே ஜனநாயகத்தை சமத்துவத்தை ஏற்படுத்திட பல விசயங்களை செய்தவர்கள். நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள்.

Read more

ஆரோக்யா சேது ஆப்பை உருவாக்கியது யார்? கேலிக்கூத்தாகும் தகவல் அறியும் உரிமை சட்டம்

இரண்டு மாதங்களுக்கு முன்னதாக சௌரவ் தாஸ் என்பவர் ஆரோக்யா சேது ஆப்பை யார் உருவாக்கினார்கள் உள்ளிட்ட சில தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அறிந்துகொள்ள விண்ணப்பித்து உள்ளார். அரசாங்கத்திற்கு தேவையான இணையதளங்கள், ஆப்கள் உள்ளிட்டவற்றை தயார் செய்து தரும் அமைப்பாக இருக்கக்கூடிய தேசிய தகவல் மையமானது [National Informatics Centre] ஆரோக்யா சேது ஆப்பை உருவாக்கியவர்கள் பற்றிய தகவல்கள் தங்களிடம் இல்லை என தெரிவித்துவிட்டது.

Read more

கொரோனவை விடவும் ஆபத்தானது இதுதான், அறிஞர்கள் எச்சரிக்கை

தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தியா, வடகொரியா ஆகிய நாடுகளிடம் நியூக்கிளியர் அணு ஆயுதங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. தோராயமாக, இப்போதைக்கு பூமியில் 15000 நியூக்கிளியர் அணு ஆயுதங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் இந்த எண்ணிக்கை கூடலாம். இதில் அதிகபட்சமாக அணு ஆயுதங்களை கொண்ட நாடாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இருக்கிறது. இரண்டு நாடுகளும் தலா 7000 அணு ஆயுதங்களை கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 14,000 அணு ஆயுதங்கள் இந்த இரண்டு நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவை இந்த பூமியை அழித்து ஒழித்துவிட போதுமானவை.

Read more

போராளி பிரபாகரன் இறந்த கதை

பிரபாகரன்: வாழ்வும் மரணமும் என்ற புத்தகத்தில் ஆசிரியர் பா ராகவன் பல விசயங்களை அருமையாக ஆராய்ந்து தொகுத்து வழங்கியிருக்கிறார். பிரபாகரன் இளமைக்காலம் முதல் இறுதிக்காலம் வரையிலான பல்வேறு விசயங்களை சுருக்கமாகவும் சரியாகவும் படிக்க வேண்டுமெனில் இந்த புத்தகத்தை வாசிக்கலாம். இதன் விலை 199 ரூபாய். நீங்கள் Kindle Unlimited கணக்கு வைத்திருந்தால் இலவசமாகவும் தரவிறக்கி படிக்கலாம். இங்கே பிரபாகரன் இறந்த கதை எனும் தலைப்பில் ஆசிரியர் அளித்திருக்கும் விசயங்களை பார்ப்போம்.

Read more

மறக்கப்பட்ட தியாகி : அஞ்சலை அம்மாள் – ஜெயிலில் பிறந்த ஜெயவீரன் : ராஜா வாசுதேவன்

சுதந்திர போராட்டத் தியாகிகள் யார் என வளரும் தலைமுறைகளிடம் கேட்டால் காந்தி என ஆரம்பித்து பிரபல்யமான சில பெயர்களை சொல்லுவார்கள். அதில் நிச்சயமாக கடலூர் அஞ்சலை அம்மாள் என்ற பெயர் இருக்க வாய்ப்பே இல்லை. காரணம் அவரைப்பற்றிய பெரிய அளவிலான பதிவுகளோ புத்தகங்களோ எங்கும் இல்லை என்பது தான். அந்தக்குறையை போக்குவதற்கு ஊடகத்துறையில் சுமார் 35 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த திரு ராஜா வாசுதேவன் பெரும் முயற்சி எடுத்து கடலூர் அஞ்சலை அம்மாள் என்கிற மிக முக்கியமான சுதந்திரபோராட்ட வீராங்கனையின் வரலாற்றை நாவல் வடிவில் தந்திருக்கிறார்.

Read more

ஹாரி பாட்டர் எழுத்தாளர் ஜே கே ரௌலிங் எப்படியெல்லாம் நிராகரிக்கப்பட்டார் தெரியுமா?

எந்த விதத்தில் பார்த்தாலும் எனக்கு தெரிந்தவரையில் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தவள் நானாகத்தான் இருப்பேன்

ஹாரிபாட்டர் என்ற நாவலின் மூலமாக பில்லியனர் ஆக மாறிய முதல் பெண் எழுத்தாளர் என்ற பெருமைக்கு உரிய ரௌலிங் சொன்ன வார்த்தைகள் தான் இவை. அடுத்த நாவல் எப்போது வரும்? ஹாரிபாட்டருக்கு என்னவாகும்? என உலகம் முழுமைக்கும் இவரது அடுத்த பதிவிற்க்காக காத்திருந்தவர்கள் கோடி. இவருடைய புத்தகங்கள் 73 மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு கிட்டத்தட்ட 20 மில்லியன் பணத்தை சம்பாதித்த இவர் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நபரா? என உங்களின் புருவம் உயரலாம். ஆனால் அதுதான் உண்மை.

Read more

மேதகு பிரபாகரன் ஆயுதமேந்தியது ஏன்?

1972 ஆம் ஆண்டு பிரபாகரனுக்கு வயது பதினாறு. அப்போது பிரபாகரன் அவர்களின் அக்காவின் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்விற்கு ஊரே கூடியிருந்த போதும் பிரபாகரன் எங்கோ சென்றுவிட்டு தாமதமாகவே வந்து சேர்ந்தார். நண்பர்களுடன் வெறுமனே ஊர் சுற்றும் சிறு பிள்ளையென்றால் பரவாயில்லை, ஆனால் பிரபாகரன் ஏதோ ஒரு காரணத்தோடு தான் ஊர் சுற்றுகிறார் என்பது தெரிந்தபடியால் வேலுப்பிள்ளை கவலையாகவே இருந்தார்.

Read more

மகள்களுக்கு விடுக்கப்படும் ஆபாச மிரட்டல்கள் : தண்டிக்கப்படுவார்களா?

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகளை துவங்குவது என்பது எளிதான விசயம். இதனைப் பயன்படுத்தி பலர் போலியான கணக்குகளை துவங்கி ஆபாசமான கருத்துக்களை தெரிவித்து வருவது வாடிக்கையாகிவிட்டது. சிலர் இப்படித்தான் இயங்குவார்கள் என்ற எண்ணத்தில் அவற்றை கடந்து செல்லும் காரணத்தினால் தான் விஜய் சேதுபதி மகள் குறித்து பதிவிட்டது போல பயமில்லாமல் பதிவிடுகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றபோது தோனியின் மகளுக்கு ஆபாச மிரட்டல்கள் வந்தன என்பதும் இதன் ஒருவகை தான்.

Read more