1976 ஆட்சி கலைக்கப்பட்டபோது கருணாநிதி என்ன செய்தார் தெரியுமா?
ஜனவரி 31, 1976 அன்று முதல்வராக இருந்த கருணாநிதி, சென்னை டான் போஸ்கோ பள்ளியின் ஆண்டுவிழாவில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டு இவ்வாறு பேசுகிறார். “நான் இங்கு முதலமைச்சராக வந்திருக்கிறேன். அநேகமாக முதலமைச்சர் என்ற நிலையில் நான் கலந்துகொள்ளும் கடைசி நிகழ்ச்சியாக இது இருக்கும்” என பேசுகிறார். அவரது பேச்சில் எந்தவித வருத்தமும் இல்லை.
கருணாநிதி அவர்கள் இவ்வாறு பேசுவதற்கு முக்கிய காரணம் “இந்திராகாந்தியின் அவசரகால நிலையை கடுமையாக எதிர்த்தும் அதனை இந்திராகாந்தி விரும்பாததும் தான்”. நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட ஜூன் 25, 1975 அடுத்த 24 மணி நேரத்தில் திமுக செயற்குழு கூட்டப்பட்டு கண்டன தீர்மானம் இயற்றப்பட்டது. ஜனநாயத்திற்கு எதிரான நெருக்கடி நிலையை திமுக கடுமையாக எதிர்த்தது.
இதனால் தான் திமுக ஆட்சி கலைக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கருணாநிதி நம்பினார். பள்ளியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பினார் கருணாநிதி. வீட்டில் அவரது வருகைக்காக காத்திருந்த அவரது மருமகன்கள் கையில் ஒரு துண்டுத்தாளோடு காத்திருந்தனர். அவர்கள் கருணாநிதி அவர்களிடம் ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது என தெரிவிக்கிறார்கள்.
எந்தவித ஆச்சர்யமோ அதிர்ச்சியோ அடையாத கருணாநிதி அவர்கள் “அப்பாடா சஸ்பென்ஸ் முடிந்தது” என தெரிவித்துவிட்டு சாலை பக்கம் திரும்பி தான் வந்த அரசு வாகனத்தை தலைமை செயலகத்திற்கு எடுத்து செல்லுங்கள் என உத்தரவிட்டுவிட்டு வீட்டிற்கு உள் செல்கிறார். பின்னர் இந்த செய்தியை பிறருக்கு தெரிவிக்க முயற்சி செய்கிறார், ஆனால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது.
இதனை தன்னுடைய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் கருணாநிதி எழுதுகிறார்.
இவ்வளவு நடந்த பின்னரும் கூட இந்திராகாந்தியுடன் பின்னாளில் அன்பு பாராட்டினார் கருணாநிதி.
கருணாநிதி குறித்து இந்திராகாந்தி இவ்வாறு கூறுகிறார்,
” அரசியலில் நண்பராக இருக்கும்போதும் சரி, எதிரியாக இருக்கும் சரி , தன நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர் திமுக தலைவர் கருணாநிதி”
தன்னுடைய நற்பழக்கத்தினாலும் சமூக நீதிக்கொள்கைகளாலும் எதிர்ப்பக்கத்தில் இருப்பவர்களின் நன்மதிப்பையும் பெற்று இருந்தவர் கருணாநிதி.
பாமரன் கருத்து