Three important ideas for successful blog

புதிதாக இணையதளம் தொடங்கும் அனைவருக்குமே தங்களது இணையத்தளத்தினை மிகவும் பிரபலமானதாக ஆக்கிட வேண்டும் எனவும் பலரும் வந்து படிக்க வேண்டும் எனவும் விரும்புவோம். ஆனால் அது அவ்வளவு எளிதானது இல்லை.

உங்களது இணையதளம் சிறப்பானதாக மக்கள் விரும்பும் படியானதாக இருக்கவேண்டும் எனில் நீங்கள் பின்வரும் மூன்று விசயங்களில் அக்கறை செலுத்திட வேண்டும்.

 

> இணையதளத்தை சரியாக டிசைன் செய்தல் | Attractive Designing 

 

> சிறப்பான தகவல்கள் | Good Information

 

> விளம்பரப்படுத்துதல் | Advertisement

 

இணையதளத்தை சரியாக வடிவமைத்தல் [Proper Blog Setup] 

 

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் செயல்முறைகளை பயன்படுத்தி ஒரு இணையதளத்தை வடிமைக்க முடியும். ஒரு இணையதளத்திற்கு அதில் இருக்கக்கடிய தகவல்கள் மட்டுமே போதுமானது அல்லது மாறாக உங்களது இணையதளத்திற்கு வருபவர்கள் எளிமையாக சென்று படிக்கும் வண்ணம் வைத்திருப்பதும் அவசியம்.

 

மேலும் உங்களது வாடிக்கையாளர்களை கவரக்கூடியவகையில் உங்களது blog வடிவமைக்கப்பட்டிருப்பதும் அவசியம். ஒவ்வொரு முறையும் உங்களது blog இன் வடிவமைப்பை மாற்றிக்கொண்டே செல்ல கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்களது blog க்கிற்கு மீண்டும் வருகிறவர்களை சிரமம் அடைய செய்யும்.

 

சிறப்பான தகவல்கள் [Good Content] 

 

இணையத்தில் கோடிக்கணக்கான தகவல்கள் பல இணையதளங்களில் கிடைக்கும்போது எதற்காக ஒருவர் உங்களது இணையதளத்தை நோக்கி வர வேண்டும் ? இந்த ஒரு கேள்வியே உங்களை சிறந்த blogger ஆக மாற்றி விடும். ஆம் வாசகர்களுக்கு எது தேவையோ அதனை நாம் கொடுக்கும்போது நிச்சயமாக அவர்கள் நம்மை நோக்கி வருவார்கள்.

 

அதே போல தகவல்களை தொகுத்து கொடுப்பதும் சரியான தகவல்களை கொடுப்பதும் வாசகர்களை தொடர்ச்சியாக உங்களது இணையதளத்திற்கு ஈர்க்கும். அதோடு சேர்த்து நீங்கள் பதிவிடும் தகவலுக்கு ஏற்றவாறு படங்கள், வீடியோக்களை இணைப்பதும் படிப்பவர்களை ஈர்க்கும்.

 

விளம்பரப்படுத்துதல்  [Marketing]

 

சிறந்த வடிவமைப்பு, சிறப்பான தகவல்கள் இருந்தாலும் வாசகர்கள் உங்களது இணையதளத்திற்கு வர வாய்ப்பில்லை, காரணம் வாசகர்களுக்கு அது குறித்து தெரிந்து இருந்தால் தானே அவர்களால் வர முடியும்.

 

ஆகவே உங்களது இணையதளம் குறித்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். தற்போது இருக்கக்கூடிய Facebook , Twitter , Google+ , Email போன்றவற்றின் மூலமாக உங்களது இணையதளம் குறித்த தகவல்களை பிறருக்கு தெரியப்படுத்திடுங்கள்.

 

உங்களது பள்ளி கல்லூரி நண்பர்களுடைய உதவியை நாடி அவர்களையும் உங்களது இணையதள விளம்பரத்திற்கு பயன்படுத்தலாம்.  Subscribe பட்டனை வைத்தல் , Newsletter அனுப்புதல் போன்றவற்றை செய்து உங்களது இணையதளத்தை விளம்பரப்படுத்திடலாம்.

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *