அவமானம் கதை – மண்டோ படைப்புகள் – Avamanam – Manto Padaippugal
துருப்பிடித்த அதன் ஊசிகள், அந்த சிறிய மேசையில் மட்டுமல்லாமல் அறை எங்கும் சிதறிக் கிடந்தன. மேசைக்கு மேல் நான்கு வெவ்வேறு மனிதர்களின் புகைப்படங்கள் சட்டம் போடப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தன. அந்த புகைப்படங்களுக்குச் சற்றுத் தள்ளி, வாயிற்படி அருகில் இடது பக்கத்தில் அடர்த்தியான வண்ணங்களில் ‘கணேஷ்ஜி ‘யின் படம் தொங்கிக்கொண்டிருந்தது. அதன் மேல் பூ வைக்கப்பட்டிருந்தது. சில வாடியவை, சில புதியவை. (இந்தப்படம் துணிச்சுருளைச் சுற்றி இருந்ததிலிருந்து எடுக்கப்பட்டு சட்டம் போடப்பட்டிருக்க வேண்டும்). படத்திற்கு அருகில் எண்ணெய் வழிந்து கொண்டிருந்த சிறிய அலமாரியில் ஓர் எண்ணெய்க் கிண்ணமும், அதன் அருகில் ஓர் எண்ணெய் விளக்கும் இருந்தன. அதன் திரி, சாதி அடையாளத்தை நெற்றியில் போட்டுக்கொள்வது போல், காற்று இல்லாததால், நேராக நின்று கொண்டிருந்தது. அந்தச் சிறிய அலமாரியில் பெரிதும் சிறிதுமாக உடைந்துபோன ஊதுபத்திகளும் கிடந்தன.
Read more