நடிகர் சூர்யாவுக்கு சப்போர்ட் செய்த 6 நீதிபதிகள்….அடடே!

நடிகரும் அகரம் அறக்கட்டளை மூலமாக பின்தங்கிய நிலையில் இருக்கும் ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயில்வதற்கு உதவிகரமாக இருபவருமான நடிகர் சூர்யா அவர்கள் நீட் தேர்வு குறித்து தனது ஆதங்கத்தை கடிதமாக வெளியிட்டார். இதில் நீட் தேர்வு மட்டுமல்லாது நீதிமன்றத்தின் நடவெடிக்கையையும் சாடி இருந்தார் சூர்யா.

பொதுமக்களின் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்த அந்தக் கடிதத்தில் நீதித்துறை குறித்து இடம் பெற்றிருந்த கருத்துக்கள் நீதிமன்றத்தை அவமதிப்பதாக இருப்பதாகவும் இதனால் அவர் மீது நீதிமன்றம் தானாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும் எனவும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம். தற்போது 6 ஓய்வு பெற்ற நீதிபதிகள் சூர்யா மீது நடவெடிக்கை எடுக்க தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்

Read more

சூர்யா பேசக்கூடாதென்றால் நாம்? | பதில் கூறாமல் விமர்சனம் ஏன்? | புதிய கல்விக்கொள்கை | Surya Speech | Neet

புதிய கல்விக்கொள்கை குறித்தும் நுழைவுத்தேர்வுகள் குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்த சூர்யா அவர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு ஆளுமைகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். சூர்யா அவர்கள் வன்முறையை தூண்டும் விதமாகவும், முழுமையாக அறிந்துகொள்ளாமல் பேசுகிறார் என்றும் பல்வேறு எதிர்கருத்துக்கள் வந்தன. இன்னும் சிலரோ சூர்யா ஜோதிகா அவர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியிலா படிக்கிறார்கள் , அவருக்கு அரசுப்பள்ளி குறித்து பேச தகுதி இருக்கிறதா என கேள்வி எழுப்புகிறார்கள். இவை அனைத்திற்குமான விளக்கங்களை தான் நாம் இங்கே பார்க்க இருக்கிறோம். மறவாமல் உங்களது கருத்துக்களை பகிருங்கள்.

Read more