44 உயிர்கள் – கீழவெண்மணி அதிர்ந்தது டிசம்பர் 25, 1968
தஞ்சை , நம்மை பொறுத்தவரைக்கும் நெற்களஞ்சியம் . பச்சை பசேலென்று ஜொலிக்கும் ஊர் . 1960 களில் இப்போதிருப்பதைவிட பலமடங்கு செழித்து விளங்கியது . அந்த பசுமைக்கு பின்னால் எண்ணற்ற கூலித்தொழிலாளிகளின் வியர்வையும் ரத்தமும் அடங்கியிருந்தது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது . காரணம், அந்தப்பசுமை அவ்வளவு வீரியமாக இருந்தது. மிராசுதாரர்களும் பெரும் நிலத்துடன் அப்படித்தான் இருந்தார்கள். அவர்களிடமே நிலம் இருக்கும். உழைக்கும் திறன் உடம்பில் இருக்கிறவரைக்கும் உழைக்கலாம். அவர்கள் ஊதியமென்று எதை கொடுக்கிறார்களோ அதை மறுபேச்சு பேசாமல் வாங்கிக்கொள்ள வேண்டும். இதுதான் அன்றைய நிலைமை. பெரும்பாலானவர்களுக்கு ஒருபடி நெல் , ஒரு கோப்பை கூழ் தான் ஊதியம் . கிட்டத்தட்ட அடிமையாகவே அவர்கள் நடத்தப்பட்டார்கள் .
Read more