அதென்ன “மகிழ்ச்சி பாடத்திட்டம்” – டெல்லி அரசுப்பள்ளிகளில் நடத்தப்படும் புதுவித பாடத்திட்டம்

ஒருவர் கல்வி கற்கிறார் எனில் அந்தக்கல்வியானது அவருக்கு மகிழ்ச்சி, விழிப்புணர்வு, தன்னம்பிக்கை மற்றும் சமூகத்திற்கு அவசியமான மனிதனாக எப்படி நடந்துகொள்வது போன்றவற்றை தர வேண்டும். இதுதான் கல்வியின் தார்மீக நோக்கமாக இருக்க வேண்டும். இதனை அடிப்படையாகக்கொண்டுதான் டெல்லி அரசாங்கம் “மகிழ்ச்சி பாடத்திட்டம்”ஒன்றினை வடிவமைக்க துவங்கியது. ஜூலை,2018 இல் சில டெல்லி அரசுப்பள்ளிகளில் மட்டுமே சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட “மகிழ்ச்சி பாடத்திட்டம்” தற்போது கிட்டத்தட்ட 1000 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடத்தப்படுகிறது. தினசரி 45 நிமிட கால அளவுள்ள இந்த வகுப்பானது நர்சரி முதல் 8 ஆம் வகுப்பு வரை நடத்தப்படுகிறது.

Read more