வெ.இறையண்பு ஐஏஎஸ் எழுதிய சிறந்த 10 புத்தகங்கள்

தமிழகம் நன்கறிந்த IAS அதிகாரிகளில் ஒருவர் இறையண்பு ஐஏஎஸ் [V. Iraianbu IA] . அதுமட்டுமல்லாமல், எதிர்கால இளைய தலைமுறைகளுக்கு தேவையான கருத்துக்களை பேசுவதையும் எழுதுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். பல்வேறு தலைப்புகளில் இறையண்பு ஐஏஎஸ் பல புத்தகங்களை எழுதி இருக்கிறார். அவை அனைத்துமே படிக்க உகந்தவை என்றாலும் கூட நாம் ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டிய சில முக்கியமான புத்தகங்களைத்தான் இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன். இறையண்பு ஐஏஎஸ் எழுதிய சிறந்த 10 புத்தகங்கள் ஒவ்வொன்றையும் தவறாமல் படித்திடுங்கள்.

Read more

ஏன் ஒன்றிய அரசு விவாதம் தற்போது எழுந்துள்ளது?

இந்தத்தலைமுறையில் மத்திய அரசு என்ற வார்த்தையைத்தான் நாம் நெடுங்காலமாக பயன்படுத்தி வந்திருக்கிறோம். ஆகவே தான் ‘ஒன்றிய அரசு’ என்பது ஏதோ புரட்சியின் அடையாளமாக சிலர் கருதுகிற அளவுக்கு பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. மாநில உரிமைகள் பறிபோவதாக கருதுகிற ஒவ்வொரு தலைவர்களும் கடந்த காலங்களில் டெல்லியிலே அமைந்திருக்கும் அரசுக்கு நீங்கள் ஒரு ‘ஒன்றிய அரசு’ என்பதை நினைவூட்ட இந்த சொல்லாடலை பயன்படுத்தியே வந்திருக்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில் தூங்கிக்கொண்டிருந்த இந்த சொல்லாடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின்.

Read more

யார் இந்த பழனிவேல் தியாகராஜன்?

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் பழனிவேல் தியாகராஜன். ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கியமான விசயங்களில் அவ்வப்போது கருத்துக்களை புள்ளி விவரங்களோடு தெரிவித்து வந்தார். ஆனால் அப்போதெல்லாம் இவர் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் ஜக்கி வாசுதேவ் அவர்களின் ‘ கோயில் அடிமை நிறுத்து’ என்ற பிரச்சாரத்திற்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன்வைத்து இருந்தார் பழனிவேல் தியாகராஜன். அதை தொடர்ந்து எச் ராஜா குறித்த விமர்சனம் என தொடர்ந்ததை அடுத்து தமிழக அரசியலில் ஹாட் டாபிக் ஆனார் பழனிவேல் தியாகராஜன்.

Read more

லட்சத்தீவு மக்களின் மீது அடக்குமுறையா? என்ன நடக்கிறது அங்கே?

அரபிக்கடலில் கேரளாவில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் தான் 36 சிறிய சிறிய தீவுகளாக இருக்கிறது லட்சத்தீவு. இதில் ஒரு தீவான பாராலி கடல் அரிப்பின் காரணமாக கடலுக்குள் மூழ்கிவிட்டபிறகு எஞ்சியிருக்கும் 35 தீவுகளில் மக்கள் வசித்து வருகிறார்கள். அங்கே வாழ்கிறவர்களில் 98% முஸ்லீம் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய குற்றங்களே இல்லாத ஒரு பிரதேசமாக வந்திருக்கிறது லட்சத்தீவு. இதற்கு மிக முக்கியக்காரணம், அங்கே மதுவிற்கு அனுமதி கிடையாது என்பதோடு இந்தியர்களாக இருந்தாலும் சரி வெளிநாட்டினராக இருந்தாலும் சரி அவர் இந்திய அரசின் முறையான அனுமதியை பெற்றபிறகே லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்ல இயலும்.

Read more

2021 இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் என்னென்ன?

இந்தியாவில் 50 லட்சம் அல்லது அதற்கு மேல் பயனாளர்களைக் கொண்டிருக்கும் சமூக வலைதள நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இதனை கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் இந்த விதிமுறைகள் அனைத்தும் பேஸ்புக், கூகுள், ட்விட்டர், கூ உள்ளிட்ட ஆப்களுக்கு தான் பொருந்தும். காரணம், அவை தான் 50 லட்சத்திற்கும் மேலான பயனாளர்களை கொண்டிருக்கிறார்கள்.

Read more

அனில் அம்பானியை விடவும் முகேஷ் அம்பானி வெற்றியாளராக இருப்பது ஏன்? தெரியுமா?

திருபாய் அம்பானி [Dhirubhai] யின் இரண்டு திறமைசாலி பிள்ளைகள் தான் அனில் அம்பானியும் முகேஷ் அம்பானியும். 2002 ஆம் ஆண்டு திருபாய் இறந்த பிறகு மெல்ல மெல்ல சகோதரர்களுக்குள் மோதல் ஆரம்பித்தது. இருவருக்கும் இடையே இருக்கும் சண்டையை முடிவுக்கு கொண்டுவர சொத்துக்களும் நிறுவனங்களும் பிரிக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவானது. அப்போதைய காலகட்டத்தில், அம்பானி குடும்பத்தின் முகமாக இருந்தவர் அனில் அம்பானி. அவர் தான் முதலீட்டாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர். முகேஷ் அம்பானியோ அந்த காலகட்டத்தில் நிறுவனத்தை எப்படி முன்னேற்றுவது என்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

Read more

தடுப்பூசி உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸை உருவாக்குகிறதா? | Luc Montagnier

கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் பலருக்கும் உண்டு. லூக் மாண்டாக்னியர் போன்ற ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட ஒரு விஞ்ஞானி சொல்லும் போது அந்த கருத்துக்கள் மேலும் வலுப்பெறுவதோடு அவர்களது வாய்வார்த்தையையே பலரும் ஆதாரமாக பயன்படுத்தும் சூழலும் ஏற்படுகிறது. சரி வாருங்கள் அவர் என்ன சொன்னார் என பார்ப்போம், அவரை நம்பலாமா என பார்ப்போம்.

Read more

பிட்காயின் என்றால் என்ன? பிட்காயின் வாங்குவது எப்படி?

முன்னனி இணையதளங்களின் தகவலின் படி உலகில் தற்போது புழக்கத்தில் இருக்கக்கூடிய முதன்மையான க்ரிப்டோகரன்சிகளில் முன்நிலை வகிப்பது பிட்காயின் தான் . கிரிப்டோகரன்சியென்றால் முற்றிலும் இணையத்திலேயே இருக்ககூடிய டிஜிட்டல் கரன்சி . நாம் பயன்படுத்தக்கூடிய பணம் கைகளால் தொட்டுப்பார்க்க முடியும் , பிறரிடம் நேரடியாக கொடுத்து வாங்க முடியும் . ஆனால் கிரிப்டோகரன்சி முற்றிலும் டிஜிட்டல் மயமானது . இதனை ஆன்லைனில் பரிமாறிக்கொள்ளலாம் , பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் .

Read more

டீச்சர் சைலஜாவுக்கு இதனால் தான் அமைச்சரவையில் இடம் இல்லையாம்

கேரளாவில் கொரோனா அவசர நிலையை கேரளா சிறப்பாக கையாண்டதில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டவர் சுகாதாரத்துறை அமைச்சர் டீச்சர் சைலஜா. தற்போது அமையவிருக்கும் அமைச்சரவையில் அவருக்கே இடம் கொடுக்கப்படாதது பெரும் பேசுபொருளாக இருக்கிறது. ஆனால் ஏன் அவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை என்ற காரணம் வியப்பை அளிக்கிறது.

Read more

கரிசல் கதை சொல்லி கி.ராஜநாராயணன் பற்றி தெரியுமா?

கரிசல் மக்களின் கதைகளை யார் விரும்பி படிக்கப்போகிறார்கள் என பிறர் நினைத்தார்களோ என்னவோ தெரியாது. ஆனால் கரிசல் மக்களுக்கும் வாழ்வியல் உள்ளது, ஏற்ற இறக்கங்கள் உள்ளது, அவர்களுக்கும் ஏக்கம் உள்ளது என்பதை தனது கதைகளின் வாயிலாக மண் மனம் மாறாமல் புனைவுகளை நாடாமல் உள்ளது உள்ளபடி எழுதினார். கரிசல் மக்களின் கதைகளை இலக்கியத்தின் அனைத்து முறைகளிலும் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். கடிதமாக, நாவலாக, சிறுகதையாக, இலக்கியமாக எழுதினார். “கரிசல் வட்டார வழக்கு அகராதி” என்ற ஒன்றினை எழுதி கரிசல் எழுத்தாளர்களுக்கு வலு சேர்த்தார் கி.ரா.

Read more