Incognito browsing is not private as you think | Incognito Mode நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது ?

பெரும்பாலான பிரவுசர்கள் சாதாரண (Normal Mode) மற்றும் பிரைவேட் (Incognito Mode) என இரண்டு ஆப்சன்களை பயனாளர்களுக்கு வழங்குகின்றன . இணையதளத்தை பயன்படுத்துவோர் பல நேரங்களில் பிரைவேட் (Incognito Mode) பயன்படுத்துகின்றனர் . அதற்க்கு முக்கிய காரணம் அது சில Privacy யை தருவதாக நம்புகின்றனர் .

அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்ற பிரவுசர்களான கூகுளின் குரோம் பிரவுசர் (Google Chrome) , மொசில்லா பிரவுசர் (Mozilla Firefox), ஆப்பிள் நிறுவனத்தின் சபாரி பிரவுசர் (Safari) போன்றவை அனைத்துமே பிரைவேட் (Incognito) ஆப்சனை வழங்குகின்றன . பிரவுசரை பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு பிரைவேட் பிரவுசரை வேண்டுமென நினைத்தால் Settings ல் இருக்க கூடிய இன்காக்னீடோ (Incognito) ஆப்சனை செலக்ட் செய்து பயன்படுத்தலாம் .

இந்த ஆப்சனை பயன்படுத்தி இணையதளங்களை பார்க்கும்போது நீங்கள் எந்த இணையதளத்தில் எந்த பக்கத்தை பார்க்கிறீர்கள் என எதையுமே உங்களது பிரௌசர் சேமிக்காது . உங்களுக்கே தெரியும் நீங்கள் ஏதேனும் வார்த்தையை டைப் செய்தால் அந்த வார்த்தை வரக்குடிய இணையதளத்துக்கு நீங்கள் ஏற்கனவே சென்று இருந்தால் அந்த முகவரி கீழே வரும் , வேண்டுமென்றால் அதனை கிளிக் செய்து நுழையலாம் . ஆனால் இதில் பிரைவேட் பிரௌசரை பயன்படுத்தி பார்த்த இணையதளங்கள் வராது .

தற்போது பயன்படுத்துகிறவர்களின் எண்ணம் , தாங்கள் பிரௌஸ் (Browse) செய்கின்ற விசயத்தை வேறு யாரும் பார்த்திட கூடாது, தான் செய்வதை track செய்துவிட கூடாது என்பதற்காகவே Incognito Mode பயன்படுத்துவதாக தெரிகின்றது .

உதாரணமாக நீங்கள் அலுவலக நேரத்தில் youtube பார்க்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் . நீங்கள் அந்த youtube ஐ Incognito window வில் பார்த்தாலும் அது உங்களது அலுவலக சர்வரிலும் youtube இன் சர்வரிலும் நிச்சயமாக பதிவாகும் . உங்களது browser history இல் மட்டும் அது பதிவாகாது .

இந்த பிரௌசர்களும் பயன்படுத்துபவர்களை குழப்புவது போன்றே You are safe here, Your Secrets are Safe இப்படி போட்டு வைத்துள்ளன .
இதனை படிப்பவர்களும் தவறாக புரிந்துகொள்கின்றனர் .

சரி சரி கவலைப்படாதீங்க இவ்வளவு நாளாக தவறாக புரிந்துகொண்டு அலுவலக நேரத்திலோ வீட்டிலோ Incognito window வை பயன்படுத்தியிருந்தால் கவலைப்படாதீங்க . இப்போது தெரிந்துகொண்டீர்களே என சந்தோஷப்படுங்கள் .

உங்களது சந்தேகங்களை கமெண்டில் பதிவிடவும் , மறக்காமல் subscribe செய்யவும் .

PAMARAN KARUTHU

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *