கேமரான் ஜான்ஸன் 19 வயதில் மில்லியனர் ஆன உண்மை | Cameron Johnson young age millionaire entrepreneur story in Tamil
நிராகரிப்பிற்கு பயப்படாதே
கேட்பதற்கு பயப்படாதே
*********************************
உலகிடம் இருந்து எதையும் எடுத்துக்கொள்வது பண்பல்ல ; பகிர்ந்துகொள்வது தான் பண்பு
இந்த இரண்டு ஆலோசனைகளும் 19 வயதிலேயே மில்லியன் டாலருக்கு சொந்தமான கேமரான் ஜான்ஸன் என்பவருடையது . பொதுவாக அனைவருமே பணக்காரர் ஆகவேண்டும் என்பதற்காகவே அன்றாடம் முயன்று வருகின்றோம் . அப்படி முயல்பவர்களுக்கு கேமரான் ஜான்ஸன் என்கிற இளம் பணக்காரரின் வாழ்க்கை அனுபவம் உந்து சக்தியாக இருக்குமென கருதியே இந்த பதிவினை இடுகின்றேன் .
1994 , கேமரான் ஜான்சனுக்கு 9 வயது , தனது அப்பா , அம்மா சகோதரியுடன் விர்ஜினியாவில் தங்கியிருக்கிறார் . அப்போது அம்மா அப்பாவின் விடுமுறை தின கொண்டாத்திற்காக தானே அழைப்பிதழ்களை தயாரிக்கிறார் ஜான்சன் . அவருடைய திறமை அக்கம்பக்கதில் இருப்பவர்களுக்கும் பரவுகின்றது .
தன்னுடைய 11 வது வயதில் greeting card விற்பனையின் மூலமாக சில ஆயிரம் டாலர்களை சேமிக்கிறார் . அந்த வயதில் அவருடைய நிறுவனத்திற்கு வைத்துக்கொண்ட பெயர் Cheers and Tears .
தன்னுடைய 12 ஆம் வயதில் தன்னுடைய சகோதரியிடம் இருக்கக்கூடிய 30 Ty Beanie Babies என அழைக்கப்படும் பொம்மைகளை 100 டாலர் கொடுத்து விலைக்கு வாங்குகிறார் . அதனை எதற்கு சகோதரர் வாங்குகிறார் என்பது அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை .
வாங்கிய வேகத்தில் அந்த பொம்மைகளை ebay இல் பத்து மடங்கு லாபத்திற்கு விற்கிறார் . அந்த பொம்மைகளுக்கு மக்களிடம் காணப்பட்ட வரவேற்பை உணர்ந்த ஜான்ஸன் நேரடியாக பொம்மை நிறுவனத்திடம் இருந்து பொம்மைகளை வாங்கி ebay யிலும் தன்னுடைய Cheers and Tears இணையதளத்திலும் விற்க ஆரம்பித்தார் .
இந்த விற்பனை சூடுபிடிக்க ஓராண்டிற்கு உள்ளாகவே 50 ஆயிரம் டாலருக்கு சொந்தக்காரர் ஆகிறார் ஜான்சன் . அதுவரை பொம்மைகளை விற்பனை செய்துவந்த ஜான்சனின் பார்வை இணையதளம் பக்கமாக சாய்ந்தது .
ஒரு தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரை பணிக்கு அமர்த்தினார் , அவருக்கு சம்பளம் கொடுத்து My EZ Mail என்கிற ப்ரோக்ராமை உருவாக்கினார் . இதன் மூலமாக அனுப்புபவர் பெறுபவர் இவர்களின் தகவல்களை கண்காணிக்காமல் தகவல்களை சேமிக்காமல் மெயில் அனுப்பிட முடியும் . இதுவும் வரவேற்ப்பினை பெற மாதந்தோரும் 3000 டாலர் வருமானம் கிடைத்தது . இந்த வருமானம் விளம்பரங்களின் மூலமாக கிடைத்தது .
செய்தவை அனைத்திலும் வெற்றி கண்டு லாபம் கிடைத்தாலும் கேமரான் ஜான்சன் தன்னுடைய முயற்சியை புதிய விசயங்களில் முதலீடு செய்வதை நிறுத்தவேயில்லை .
1997 ஆம் ஆண்டு தன்னைப்போன்ற இரண்டு நண்பர்களுடன் இணைந்து Surfingprizes.com என்ற ஆன்லைன் விளம்பர கம்பெனியை ஆரம்பித்தார்கள் . அந்த நிறுவனத்தின் software ஐ டவுன்லோடு செய்தால் மணிக்கு உங்களுக்கு 20 cents அளிக்கப்படும் என அறிவித்தார்கள் . அவர்களினுடைய software ஐ டவுன்லோடு செய்தால் நமது கணிணி திரையில் விளம்பரங்கள் காட்டப்படும் .
அந்த இடையூருக்காக தான் 20 cents .
மேலும் இந்த software ஐ refer செய்பவர்களுக்கு டவுன்லோடு செய்பவரின் வருமானத்தில் 10 சதவிகிதம் கொடுக்கப்படும் .
மறுபக்கம் இவர்கள் Double click , L90 , advertising.com போன்றவற்றுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள் .இடைப்பட்ட நபராக விளம்பரங்களின் மூலமாக 30 சதவிகித தொகையினை இவர்கள் பெற்றனர் .
19 ஆம் வயதில் சொத்து மதிப்பு 1 மில்லியன் டாலர்
கேமரான் ஜான்சன் தன்னுடைய 19 ஆம் வயதில் தன்னுடைய கம்பெனி மற்றும் software ஐ விற்பனை செய்தார் . அப்போது அவருடைய சொத்து மதிப்பு 1 மில்லியன் டாலர் .
24 வயதில், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதிலும் அதற்கான வகுப்புகளை நடத்துவதிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுவருகிறார் .
அவருடைய ஆலோசனை இதுதான் ,
நிராகரிப்பிற்கு பயப்படாதே
கேட்பதற்கு பயப்படாதே
என்னுடைய பார்வையில் கேமரான் ஜான்சன் அவர்களினுடைய வெற்றிக்கு காரணம் , எதிலும் திருப்தி அடைந்துவிடாமல் சொகுசாக நினைத்து அதையே செய்துகொண்டு இருந்துவிடாமல் புதிய புதிய உக்திகளை கையாண்டதே.
நீங்களும் முயன்றால் வெல்லலாம் .
கேமரான் ஜான்சன் அவர்களினுடைய வெற்றிக்கு இணையதளம் http://www.cameronjohnson.com
பாமரன் கருத்து