பெண்களின் கற்பு ஆண்களின் ஆயுதமா??
நண்பர்களே தொல்காப்பியம் முதல் இன்று வரை ஆண்களாகிய நாம் பெண்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதில் இருந்து கொஞ்சம் கூட விலகவேயில்லை. நாம் இந்த உலக நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து பார்த்தால் நமக்கான சட்டம், மத கோட்பாடு, சிறந்த பல காவியங்கள் என அனைத்தையுமே படைத்தது ஆண்கள் தான். ஆக இந்த உலகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆண்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.
முதன் முதலில் நாகரிகம் சற்று வளர்ந்த காலங்களில் நாம் வேட்டை சமுதாயமாகத்தான் மனித இனம் இருந்தது. அப்பொழுது பெண்களே மிகவும் உயர்ந்தவர்களாகவும் இனத்தை காக்க கூடியவர்களாகவும் தலைமை பெற்றவர்களாகவும் இருந்தனர். வேட்டை சமுதாயத்தின் இறுதிகட்டத்தில் தான் மனிதன் நெருப்பை கண்டுபிடித்தான். அப்படி கண்டுபிடித்த நெருப்பை பொறுப்பு வாய்ந்த மேன்மை பொருந்திய பெண்களிடம் கொடுத்து அணையாமல் பாதுகாக்கும்படி கூறினான்.
எப்பொழுதோ அணையாமல் பாதுகாப்பாக வைக்க சொல்லிய நெருப்பிற்கும் பெண்களுக்குமான தொடர்பு இன்னும் முடியவேயில்லை. நெருப்பை பிரதானமாக கொண்ட சமையலறை பெண்களுக்கு மட்டுமே என இன்று வரை தொடர்கின்றது.
நாம் எப்பொழுது வேட்டை சமுதாயத்தில் இருந்து வேளாண்மை சமுதாயமாக முன்னேற்றம் அடைந்தோமோ அப்பொழுதான் சொத்து, தன் இடம் என்ற பாகுபாடு வர ஆரம்பித்தது. தனக்கென ஒரு இடம் வேண்டும் என்றும் அதில் பயிரிடம்படும் பயிர் தனக்கு மட்டுமே சொந்தம் என்றும் சொல்ல ஆரம்பித்த காலம்.
இந்த சொத்து, தன் இடம், ஆசை போன்ற காரணங்கள் ஆண்களிடம் ஏற்பட்ட பொழுது தனக்கு பிறகு தான் சேர்த்து வைத்த சொத்தினை யாருக்கு கொடுப்பது என்று எண்ணிய பொழுதுதான் தனியுடைமை வந்து சேர்கின்றது. தான் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த சொத்தினை யாருக்கு வைத்துவிட்டு போவது என்ற எண்ணம் தான் கற்பு என்ற பெயரில் வந்து சேர்கின்றது. தான் உழைத்து சேர்த்த இந்த சொத்து தன் மூலமாக தன் மனைவியின் வழியாக வந்த வாரிசுக்கே போய் சேரவேண்டும் என்று எண்ணுகின்றான். ஆக இந்த சொத்துடைமை சமுதாயம் உருவான மறுகணமே தலைமை பொறுப்பு பெண்களிடம் இருந்து பறிக்கப்பட்டு ஆண்களிடம் சென்றது.
அப்போதில் இருந்து தான் ஆண்கள் பெண்களை கற்பு என்ற வலையில் சிக்கவைத்து தனக்கான ஒரு வாரிசை பெற்றுக்கொள்ள பெண்களை பயன்படுத்திக் கொண்டான். நாகரிகம் வளர்ந்த இந்த காலத்திலும் பெண்களுக்கு மட்டுமே சில நேரங்களில் சில சோதனைகள் நடத்தபடுகின்றன.
பெண்களை தனக்கான ஒரு பொருளாகவும் அவள் வேறு யாரிடமும் சென்றுவிட கூடாது என்பதற்காகவும் ஒரு பெண் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்று ஆண்கள் ஒரு இலக்கணத்தை பெண்களிடம் திணித்து வைத்தனர்.அதில் வெற்றியும் பெற்றனர். இத்தனை காலங்கள் ஆன பின்பும் பெண்கள் அதை உணரவில்லை என்பதே உண்மை, ஏனென்றால் பெரும்பான்மையான பெண்கள் அவர்கள் இப்படி இருப்பதையே விரும்புகின்றனர்.
விதிவிலக்காக ஒரு சில பெண்கள் இதனை எதிர்த்தால் அவர்களை இந்த மொத்த சமூகமும் வசை பாடுகின்றன. உதாரணமாக அண்மையில் விஜய் டிவியில் நடந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் பேசியதை கேட்டு அனைவரும் அந்த பெண்ணை திட்டினார்களே தவிர ஆண்கள் செய்யும் எதனையும் பெண்கள் ஏன் செய்யகூடாது என்று நாம் ஏன் எண்ணவில்லை. ஏன் நாம் இன்னும் பெண்களை வேறு ஒரு பிறவியாகவே பாவித்து வருகின்றோம்.
தொல்கப்பியத்தில் ஆண்மகனுக்கான இலக்கணமாக “அறிவும் வலிமையையும்” கூறியவன் பெண்களுக்காக “அச்சம் மடம் நாணம்” மட்டுமே பெண்களுக்காண இலக்கணமாக கூறியுள்ளான். பலி பாவங்களுக்கு அஞ்சுவது அச்சம் [ஆண்களுக்கு இல்லை]. மேலும் ஒரு பெண்ணுக்கு உயிரைவிட நாணம் சிறந்தது என்றும் அந்த நாணத்தை விட கற்பு சிறந்ததென்றும் தொல்காப்பியன் கூறுகிறார். அப்பொழுது ஆரம்பித்த அந்த கற்பு தான் இன்று வரை பெண்களை தொடர்கின்றது. [நன்றி தமிழருவி மணியன்]
பெண்கள் ஒழுக்கமாக கற்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதில் நமக்கு மாற்று கருத்து இல்லை. அதே நேரத்தில் அந்த கற்பையே காரணம் காட்டி அவர்களை முடக்கி போடுவதும், பெண்கள் மட்டுமே ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதும் ஆண்களுக்கு எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதும், ஆண்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் பெண்கள் அதனை செய்யகூடாது என்று எண்ணுவதுமே இந்த சமூகம் பெண்களுக்கு இதுவரை செய்துவந்த துரோகம்…
இனிமேலாவது பெண்களை மதிப்போம், கற்பு இருவருக்குமானது என்பதை உணர்வோம், அவர்களையும் சமமாக நடத்துவோம்…
loosu thanamana katturai.. pengalin karppu theivangalin kattuppadu.. aangalin kattupaadu alla.
எங்கே தெய்வங்கள் பெண்கள் இப்படித்தான் இருக்கவேணும் என கட்டளையிட்டு இருக்கிறார். இந்த சமூகத்தில் நடைபெறும் அனைத்திற்கும் மனித இனம் தான் பொறுப்பு தெய்வமில்லை.
வரலாற்றில் கற்பின் பெயரால் பெண்களை இப்படித்தான் இருக்கவேண்டும் என இலக்கியங்கள் மூலமாகவும் கவிதைகள் மூலமாகவும் கட்டுரைகளின் கதைகளின் மூலமாகவும் என வலியுறுத்திக்கொண்டே வந்தது ஆண் இனமே .