5 tips for being a successful working women | Tamil | பெண்கள் சிறப்பாக வேலை செய்திட 5 ஆலோசனைகள்

அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பணிபுரிகின்றனர்  . ஆனால் சம்பள உயர்வு , பதவி உயர்வு , பணி செய்தல் போன்றவற்றில் மிகப்பெரிய அளவில் தேக்கங்கள் பெண்களுக்கு இருக்கின்றன . இவற்றில் இருந்து மீண்டு பணியிடத்தில் வெற்றிகரமான பெண்ணாக வருவதற்கு முதலில் கவனிக்க வேண்டிய ஐந்து விசயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன .

 

 

பயத்தில் கவனம் செலுத்திட கூடாது

 

என்னதான் பெண்கள் தங்களை தைரியமானவர்களாக காட்டிக்கொண்டாலும் அவர்களுக்குள் நிச்சயமாக பய உணர்வு என்பது இருக்கவே செய்யும் . ஆண் குழந்தையைப்போல அல்லாமல் பெண் குழந்தைகள் பெற்றோரின் அரவணைப்பில் பாதுகாப்பான சூழலில் வளர்க்கப்படுவதும் முக்கிய காரணம் .

 

பிறகு எதற்கு தைரியமானவர்களை போன்று நடந்துகொள்ளவேண்டும் ? பொதுவாக பணியிடங்களில் , பயந்த எதிர்ப்பு தெரிவிக்காத  பெண்களிடத்தில் தான் ஆதிக்கத்தை  அனைவரும் காட்டிட முயல்கிறார்கள் . தைரியமான பெண்களிடத்தில் அவர்கள் அடக்கியே வாசிப்பார்கள் . இதற்க்காகத்தான் பல பெண்கள் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள் .

 

பெண்களில் பலர் தங்களுக்கிருக்கின்ற  பயத்தினை போக்கவோ அல்லது மறைக்கவோ அதிக நேரங்களையும் சக்திகளையும் வீணாக்குவதாக கூறுகிறார்கள் . வேலைபார்க்கும் பெண்கள் செய்யவேண்டியது இதுதான் , பயம் ஆண் பெண் இருவருக்குமே  இருக்ககூடியது . அதனை போக்கியே ஆகவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை . தங்களுடைய பணியில் பயம் தொந்தரவு செய்திடாமல் பார்த்துக்கொள்வதே சிறந்தது . இதனை புரிந்துகொண்டால் வெற்றிதான்.

 

விமர்சனங்களை கடந்திடுதல் அவசியம்

 

ஒரு பெண் ஆணிடம் சிரித்துப்பேசினாலே தவறாக அர்த்தம் கொள்ளும் உலகமிது என்பதனை முதலில் உணரவேண்டியது பெண்கள் . அதிக ஆண்கள் வேலைபார்க்கும் பணியிடங்களில் யாருடனும் பேசாமலும் சிரிக்காமலும் இருக்கவே முடியாது .

 

ஒரு பெண் தங்களைவிட உயருகிறார் என தெரிந்தால் மற்றவர்களின் முதல் தாக்குதல் பெண்ணிண் நடத்தை குறித்துதான் . வேலைபார்க்கும் இடங்களில் இவையெல்லாம் நடக்கக்கூடியவையே என்பதனை உணர்ந்துகொண்டு இதுபோன்ற குப்பைகளை கடந்து போக கற்றுக்கொள்ள வேண்டும் .

 

துறை சார்ந்த பயிற்சியில் ஈடுபடுங்கள்

 

படிக்கும்போது முழுத்திறனையும் கொடுத்து படிக்கின்ற பெண்கள் வேலையில் சேர்ந்துவிட்டபிறகு பல காரணங்களால் முழுத்திறனையும் வெளிப்படுத்துவது இல்லை . பெண்களை ஒப்பிடும்போது ஆண்கள் தங்களுடைய வேலை சார்ந்த அறிவினை வளர்த்துக்கொள்ள புதிதாக படிக்கிறார்கள் , பயிற்சிக்கு செல்கிறார்கள் .

 

பெண்களும் துறைசார்ந்த அறிவினை மேம்படுத்திக்கொள்ள முயலுவது அவசியம் .

 

முடியாது என சொல்வதை விட்டுவிடுங்கள்

 

வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களுக்கு முக்கியதுவம் கொடுப்பதை போன்று பெண்களுக்கு கொடுக்கப்படுவதில்லை , உண்மைதான் . அதற்கான காரணம் பெண்களால் இரவுப்பணி போன்றவற்றையும் கடினமான வேலைகளையும் செய்ய முடியாது அல்லது கடினம் என நம்புவதால் தான் .

 

இந்த எண்ணங்களை உடைத்தெறிய தங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும்போது  அதனை முடியாதென சொல்வதை விட்டுவிடுங்கள் . அவ்வாறு சொல்லிடும்போது உங்களின் திறமையையும் ஆர்வத்தையும் நிறுவனத்தார்  உணர்ந்து அங்கீகரிப்பார்கள் .

 

உங்களை பற்றிய எண்ணங்களை சிறப்பானதாக ஆக்கிக்கொள்ளுங்கள்

 

பிறர் என்னை பற்றி என்ன நினைத்தால் என்ன என கேட்கலாம் . தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் அவ்வாறு நினைத்துக்கொள்ளலாம். ஆனால் பணியிடங்களில் நாம் ஒரு குழுவாகவே செயலாற்றுகிறோம். பிறரிடமிருந்து தான் நமக்கான பணியும் பதவி உயர்வும் கிடைக்கவேண்டி இருக்கின்றது . அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறரின் மனதில் நம்மை பற்றிய எண்ணங்களை உயர்வானதாக வைத்துக்கொள்ளுவது மிகவும் அவசியம் .

 

அதற்கான முயற்சிகளில் பணி இடங்களில் நாம் செயலாற்றிட வேண்டும் .

 

மேற்கூறிய 5 முக்கியமான விசயங்களை பின்பற்றினால் பணி இடங்களில் பெண்களால் சிறப்பாக செயலாற்றிட முடியும் . முயற்சி செய்யுங்கள் , வெல்லுங்கள் .

 

உங்களது நண்பர்களுக்கு தவறாமல் பகிர்ந்துகொள்ளுங்கள் .

 

பாமரன் கருத்து

 

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *