மனிதனா இயற்கையா? முடிவை அறிவித்த கரோனா வைரஸ்

இந்த பூமியில் சிந்திக்கக்கூடிய ஒரே ஆயுதம் மனிதர்கள் தான். ஆதலால் தானோ என்னவோ சில இயந்திரங்களையும் சில தொழில்நுட்பங்களையும் உருவாக்கிய பிறகு இந்த பூமியில் தானே உயர்ந்தவன் என மனிதன் எண்ணிக்கொள்ள ஆரம்பித்துவிட்டான். ஆனால் உண்மை அதுவல்ல.

Read more

சச்சின் அடித்ததிலேயே வலி நிறைந்த சதம் இதுதான் | Sachin scored 140 after his father death

சாதாரண மனிதர்களைக்காட்டிலும் ஒரு சூழ்நிலையை சிறப்பாக கையாள விளையாட்டு வீரர்களுக்கு தெரியும். அவர்கள் அதற்காகவே பயிற்சி பெற்றவர்கள். ஆனால் இறுதியில் அவர்களும் மனிதர்கள் தான். அப்பாவின் திடீர் மறைவு ஏற்படுத்திய வலிகளை கடந்து சச்சின் அடித்த 140 ரன்கள் என்பது மகத்தான சாதனை.

Read more

கரோனாவை அலட்சியமாக எதிர்கொள்ளும் தமிழர்கள் [இந்தியர்கள்]

கரோனா வைரஸ் வெயிலில் பரவாது, தமிழர்களை தாக்காது போன்ற வெற்று வதந்திகளை நம்பி அலட்சியமாக செய்யப்படுவதை இப்போதாவது நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் மிகப்பெரிய விலை கொடுக்கவேண்டி இருக்கும்.

Read more

“கேசவானந்த பாரதி வழக்கு” – இந்தியாவின் ஆத்மா காப்பாற்றப்பட்ட வழக்கு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்தவிதியையும் மாற்றுகிற அல்லது புதிதாக எப்படிப்பட்ட சட்டத்தையும் அதில் இணைக்கிற அதிகாரம் இருக்கிறதா என்பதற்கான பதிலை கொடுத்த மிகமுக்கியமான வழக்கு “கேசவானந்த பாரதி வழக்கு”

Read more

அதென்ன “மகிழ்ச்சி பாடத்திட்டம்” – டெல்லி அரசுப்பள்ளிகளில் நடத்தப்படும் புதுவித பாடத்திட்டம்

ஒருவர் கல்வி கற்கிறார் எனில் அந்தக்கல்வியானது அவருக்கு மகிழ்ச்சி, விழிப்புணர்வு, தன்னம்பிக்கை மற்றும் சமூகத்திற்கு அவசியமான மனிதனாக எப்படி நடந்துகொள்வது போன்றவற்றை தர வேண்டும். இதுதான் கல்வியின் தார்மீக நோக்கமாக இருக்க வேண்டும். இதனை அடிப்படையாகக்கொண்டுதான் டெல்லி அரசாங்கம் “மகிழ்ச்சி பாடத்திட்டம்”ஒன்றினை வடிவமைக்க துவங்கியது. ஜூலை,2018 இல் சில டெல்லி அரசுப்பள்ளிகளில் மட்டுமே சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட “மகிழ்ச்சி பாடத்திட்டம்” தற்போது கிட்டத்தட்ட 1000 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடத்தப்படுகிறது. தினசரி 45 நிமிட கால அளவுள்ள இந்த வகுப்பானது நர்சரி முதல் 8 ஆம் வகுப்பு வரை நடத்தப்படுகிறது.

Read more

அகதிகளின் தேசம் தான் எது? விண்வெளியில் இருந்து குதித்தார்களா?

பாதுகாப்பு, செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் ஒதுக்கிவிட்டு ஒரு சராசரி மனிதனாக சிந்தித்து பாருங்கள். எப்படியேனும் அகதிகள் என்போரும் இந்த பூமியில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அதை எவராலும் மறுக்க முடியாது அல்லவா. ஏதோ ஒரு சூழலினால் அவர் பிறந்த இடத்தில் வாழ இயலவில்லை. அதற்காக இந்த பூமியில் அவர் எங்குமே வாழக்கூடாது என சொல்ல இயலுமா? சொல்வது மனிதம் ஆகுமா?

Read more

சத்துணவு திட்டத்தை முதலில் துவக்கியவர் இவரே – எல்.சி.குருசாமி

முதல் முதலில் சத்துணவு திட்டத்தை துவங்கியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான எல்.சி.குருசாமியை எப்படி வரலாறு மறந்து போனது? எல்.சி.குருசாமி என்ற பெயர் தான் அது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே மதிய உணவு அல்லது சத்துணவு திட்டத்தை துவங்கியவர் இவரே. அதன்படி சென்னையில் இருக்கும் சேத்துப்பட்டு, கோரப்பாளையம் ஆகிய இடங்களில் சத்துணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் செலவு மிகுதியால் இந்த திட்டம் வெகுகாலம் நீடிக்கவில்லை.

Read more

த பீஸ்ட், நியூக்ளியர் புட்பால் – டிரம்ப் கொண்டுவருவதிலேயே சக்தி வாய்ந்தது இதுதான்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார். அமெரிக்க அதிபர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது அவர்கள் சில பொருள்களை தங்களுடன் கொண்டுசெல்வது வழக்கமாக பின்பற்றப்படுகிற நடைமுறை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணம் செய்வதற்கு உலகிலேயே மிகவும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிற த பீஸ்ட் கார் வருகிறது. மேலும் எப்போதும் அமெரிக்க அதிபர் தன்னுடனேயே வைத்திருக்கும் நியூக்ளியர் புட்பால் கொண்டுவரப்படுகிறது.

எத்தகைய தாக்குதலையும் சமாளித்து நிற்க வல்லது த பீஸ்ட், உலகின் எந்த பகுதியையும் தாக்கி அழிக்கும் அணு ஆயுதத்தை இயக்கும் தொழில்நுட்பங்களை கொண்டது நியூக்ளியர் புட்பால்.

Read more

அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றிக்கு இதுதான் காரணமா? | Aravinth Kejriwal Winning Strategy

அண்மையில் நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி மீண்டும் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்கவிருக்கிறார். மோடி, அமித்ஷா போன்றவர்களின் வியூகங்களை எப்படி உடைத்தார் கெஜ்ரிவால் என்ற கேள்வியும் ஆச்சர்யமும் பலரிடம் தொற்றிக்கொண்டுள்ளது.

Read more

இந்திய ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால் வெற்றிக்கதை | Indian Hockey Captain rani rampal success story

அவளை ஹாக்கி விளையாட அனுமதித்தால் டீஷர்ட், குட்டைப்பாவாடை அணிவாள் உங்களுக்கு கெட்டபெயர் தான் வந்து சேரப்போகிறது என்று பெற்றோரிடம் சொன்ன அதே சொந்தக்காரர்கள் இன்று ராணி இந்தியாவின் பெருமை என சொல்கிறார்கள் அவர்களது குழந்தைகளை விளையாட அனுமதிக்கிறார்கள் – ராணி ராம்பால்

Read more