உங்களுக்கு மகள் இருக்கிறாரா? இந்தத்திரைப்படம் பாருங்கள் | குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்

மிகவும் ஆபத்தான சூழலில் காயம்பட்டுவிட்ட இந்திய வீரர்களை மீட்பதற்காக குஞ்சன் சக்ஸேனா ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் துப்பாக்கி குண்டுகளும் ஏவுகணைகளும் தங்களை தாக்கியதாக குறிப்பிடுகிறார். பெண்களின் உடல் வலிமை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெண்களை போர் பகுதிக்கு அனுப்புவதை இந்திய ராணுவம் பெரிதாக விரும்பாத சூழ்நிலை அது. ஆனாலும் விமானத்தை இயக்கும் விமானிகளுக்கு அதிக தேவை இருந்தபடியால் திறமையான பெண் விமானிகளும் பயன்படுத்தப்பட்டனர். முதல் முறையாக போர்ப்பகுதிக்கு சென்ற முதல் பெண் விமானி குஞ்சன் சக்ஸேனா என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

பார்வையின்மை சாதிப்பதற்கு தடையல்ல | சாதித்த பூரண சுந்தரி | பாலநாகேந்திரன்

குடிமைப்பணி தேர்வுகளின் முடிவுகள் அண்மையில் வெளியாகின. அதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 60 பேர் தேர்வாகி இருக்கிறார்கள். அதில் இடம்பெற்றுள்ளவர்களில் இருவர் தான் தற்போது பிரபல்யமாக பேசப்படுகிறார்கள். பூரண சுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் எனும் இருவர் தான் அவர்கள். இந்த இருவர் மட்டும் ஒட்டுமொத்தமான கவனத்தையும் ஈர்ப்பதற்கு ஒரே ஒரு காரணம் இருவரும் கண் பார்வை அற்றவர்கள் என்பதுதான். பார்வை குறைபாடு வெற்றிக்கு தடை அல்ல என்பதனை இவர்கள் நிரூபித்துக்காட்டியுள்ளனர்.

Read more

மனிதக்கணினி “சகுந்தலா தேவி” யின் சொல்லப்படாத கதை | Shakuntala Devi | Human Computer

நவம்பர் 04,1929 ஆம் நாள் பெங்களூருவில் பிறந்தார் சகுந்தலா தேவி. அப்போது அவரது அப்பா ஒரு சர்க்கஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சகுந்தலா தேவிக்கு மூன்று வயது இருக்கும் போது அவரது அப்பா சகுந்தலா தேவிக்கு கணிதத்தில் பெரும் ஆர்வமும் எண்களை நியாபக படுத்துவதில் பெரும் ஆற்றல் இருப்பதையும் கண்டறிந்தார். அதன் பின்னர் சர்க்கஸ் கம்பெனியில் இருந்து வெளிவந்த அவர் தனது மகளின் ஆற்றலை சாலையில் பொதுமக்களிடம் வெளிப்படுத்த ஆரம்பித்தார்.

சகுந்தலா தேவி தனது முதல் கணிதத்திறமை மைசூர் பல்கலைக்கழகத்தில் வெளிப்படுத்தினார். பிறகு 1944 ஆம் ஆண்டில் தனது தந்தையுடன் லண்டனுக்கு சென்று பின்னர் 1960 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பினார்.

Read more

3 அடி உயரம் : ஆர்த்தி டோக்ரா IAS வெற்றிக்கதை – தோற்றம் முக்கியமல்ல செய்கையே முக்கியம்

நாம் எத்தகைய தோற்றத்தோடு பிறக்கவேண்டும் என்பதை நாமோ நமது பெற்றோர்களோ தீர்மானிப்பது கிடையாது. ஆனால் விளம்பரங்களின் சூழ்ச்சியாலோ அல்லது சினிமாவின் தாக்கத்தினாலோ அழகு என்றவொரு விசயம் நம்மில் இயல்பாகவே கலந்துவிட்டது. இப்படி இருப்பது தான் அழகு என்ற கருத்து நம்மில் விதைக்கப்பட்டுவிட்டது. அதற்கு மாற்றாக பிறக்கும் பெரும்பாலானவர்கள் அதனை நினைத்தே தங்களது வாழ்வின் பெரும்பகுதியை வீணாக்கி வருகிறார்கள். ஆனால் நீங்கள் உங்களது தோற்றதால் நிலைத்து நிற்பது கிடையாது, உங்களது திறமையால் தான் நிலைத்து நிற்க முடியும் என அவ்வப்போது சிலர் நிரூபித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

Read more

பெண்ணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருந்தால்…..

ஆண்கள் ஒரு குழுவாக இணைந்து தொழில்களை துவங்கி வெற்றியடைந்த ஏராளமான கதைகளை நாம் கேட்டிருப்போம். ஆனால் பெண்கள் குழுவாக இணைந்து தொழில்களை துவங்கி வெற்றியடைந்த கதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே நடந்து நாம் கேட்டிருப்போம். பெண்கள் இயல்பிலேயே பிறருடன் எளிதில் ஒட்டிக்கொள்ளும் ஆற்றல் உடையவர்கள் என்றாலும் கூட பெண் குழுக்கள் உருவாவது கிடையாது. அது ஏன் என்ற கேள்விக்கான பதில் ஆச்சர்யகரமானது.

Read more

கணவன்மார்களே, ஒரு மனைவியின் நிலை புரிந்ததா உங்களுக்கு – யாழினி

ஏன் எப்போ பாத்தாலும் கத்திகிட்டே இருக்க …வர வர உனக்கு ஏதோ ஆயிடுச்சு.. இப்படி பல்வேறு குடும்பங்களில் ஆண்கள் பேசுவதை கேட்டிருக்கலாம். வீட்டிற்குள்ளேயே அடைபட்டு கிடந்தால் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் அதே நிலை வரும். கணவன்மார்களே, ஒரு மனைவியின் தனிமை புரிந்ததா உங்களுக்கு – யாழினி

Read more

யார் அந்த 7 பெண்கள்? மோடியின் சமூகவலைதள பக்கங்களை கையாண்ட பெண்கள் இவர்கள் தான்

மகளிர் தினத்தை [மார்ச் 08] முன்னிட்டு இந்தியப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் சமூக வலைதளங்களை நிர்வகிக்கவும் அதன் மூலமாக தாங்கள் செய்துவரும் பணிகள் மற்றும் தங்களது எதிர்கால நோக்கம் குறித்தும் தகவல்களை பரிமாற 7 சாதனைப்பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதன்படி பிரதமரின் யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் அந்தபெண்களிடம் கொடுக்கப்பட்டது. அதனை பயன்படுத்தி 7 பெண்களும் தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் மார்ச் 8 ஆம் தேதி முழுவதும் பகிர்ந்துகொண்டார். அந்த 7 சாதனைப்பெண்கள் குறித்த சிறு அறிமுகத்தைத்தான் இந்தப்பதிவில் பார்க்க இருக்கிறோம்.

Read more

இந்திய ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால் வெற்றிக்கதை | Indian Hockey Captain rani rampal success story

அவளை ஹாக்கி விளையாட அனுமதித்தால் டீஷர்ட், குட்டைப்பாவாடை அணிவாள் உங்களுக்கு கெட்டபெயர் தான் வந்து சேரப்போகிறது என்று பெற்றோரிடம் சொன்ன அதே சொந்தக்காரர்கள் இன்று ராணி இந்தியாவின் பெருமை என சொல்கிறார்கள் அவர்களது குழந்தைகளை விளையாட அனுமதிக்கிறார்கள் – ராணி ராம்பால்

Read more

தையல் மெஷின் தான் என்னையும் என் மகளையும் காப்பாற்றியது – இப்படிக்கு அவள் | Part 2

தையல் மெஷின் இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக நான் கற்றுக்கொண்ட தையல் தொழில் இன்று யாரும் எனக்காக இல்லாதபோது என்னை காப்பாற்றி வருகிறது. ஆகவே நீங்களும் உங்களது எதிர்காலத்தில் யாரையும் சார்ந்திருக்காமல் வாழ்வதற்கு இந்த பயிற்சி வகுப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்

Read more

தாய்மை முடிவல்ல – செல்லி ஆன் | Shelly-Ann Fraser-Pryce | win historic golds at world champs

“நான் எனது ஷூக்கள் முழுவதும் எனது உழைப்பால் நிரப்பினேன் அதுபோலவே நீங்களும் செய்திடுங்கள். ஒருபோதும் யாருக்காகவும் உங்களை நிறுத்திவிடாதீர்கள். இதயப்பூர்வமாக விரும்பி முயற்சி செய்திடுங்கள். வெற்றி உங்களுக்கே” – தாய்மை தடையல்ல

Read more