தாய்மை முடிவல்ல – செல்லி ஆன் | Shelly-Ann Fraser-Pryce | win historic golds at world champs

“நான் எனது ஷூக்கள் முழுவதும் எனது உழைப்பால் நிரப்பினேன் அதுபோலவே நீங்களும் செய்திடுங்கள். ஒருபோதும் யாருக்காகவும் உங்களை நிறுத்திவிடாதீர்கள். இதயப்பூர்வமாக விரும்பி முயற்சி செய்திடுங்கள். வெற்றி உங்களுக்கே” – தாய்மை தடையல்ல

Read more

ஆமாம், கிரேட்டா தன்பெர்க் மன வளர்ச்சி குன்றியவள் தான், நீங்கள்

எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல் போகும் பலர், எது நடந்தாலும் குறைந்தபட்சம் கவனித்துவிட்டு கவலைப்பட்டுவிட்டு போகும் பலர், அது ஏன் நடந்தது என கேள்வி கேட்கும் சிலர். இந்த சிலரில் ஒருவர் தான் கிரேட்டா தன்பெர்க். பருவநிலை மாற்றத்தினால் உலகிற்கு மிகப்பெரிய அழிவு காத்திருக்கிறது என்பதனை தெரிந்துகொண்ட கிரேட்டா அது குறித்து மிகவும் கவலைப்படுகிறார். பருவநிலை மாற்றம் குறித்த கவனத்தை அதிகரிப்பதற்காக தன் நாட்டு (ஸ்வீடன்) நாடாளுமன்றம் முன்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் போராட்டம் நடத்துவதில் துவங்கி அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் “How Dare You?” என ஒட்டுமொத்த உலகத்தலைவர்களை நோக்கியும் மிகப்பெரிய கேள்வியை வைத்தார். இது உலக அரங்கில் மிகப்பெரிய கவனத்தையும் விவாதத்தையும் உருவாக்கியது

Read more

கக்கனை மகன் போல வளர்த்த வைத்தியநாத அய்யர் | யார் இவர்?

வைத்தியநாத அய்யர் இறந்தபோது அவர் பெற்றெடுத்த பிள்ளைகள் மொட்டை அடித்துக்கொண்டது போல அவரது வீட்டில் வளர்ந்த கக்கன் அவர்களும் மொட்டை அடித்துக்கொண்டார்.

Read more

கீழடி அகழாய்வு – தமிழர்களுக்கு மிக முக்கியமான அகழாய்வு – ஏன்?

2600 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் எழுத்தறிவு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். சிந்து நாகரிகம், கங்கை நாகரிகம் என்பதை போல விரைவில் வைகைக்கரை நாகரிகம் என்ற ஒரு வரலாறு எழுதப்படும் !

Read more

சமூகவலைத்தளத்தை பயன்படுத்தும் பெரியோரே இதைப் படிங்க

ஒரு விசயம் செய்தி சேனலில் சொல்லப்படுவதைக்காட்டிலும் சமூகவலைதளம் வாயிலாக சொல்லப்படும் போது அதிக முக்கியத்துவத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்க்கு மிக முக்கியக்காரணம், நாம் அறிந்த ஒருவர் அல்லது நம்மைப் போன்றதொரு சாதாரண மனிதர் தான் அந்த செய்தியை பகிர்ந்திருக்கிறார் என்ற எண்ணம் தான். தற்போதைய சூழலில் சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளில் முக்கால்வாசி செய்திகள் பொய்யான செய்திகளாகவே இருக்கிறது. வெறுப்புணர்வினை விதைக்கும் செய்திகளும் எதிர்கட்சிகளை விமர்சனம் செய்திடும் செய்திகளும் அதில் ஏராளம்.

Read more

விபத்துக்களை அதிக அபராதத்தால் தடுக்க முடியாது, நடத்தையில் மாற்றம் வேண்டும்

இந்தியாவை பொறுத்தவரைக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் சாலை விபத்துக்களில் 1.49 லட்சம் பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 12216 பேர் மரணித்து இருக்கிறார்கள். பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு முக்கியக்காரணம் வாகன ஓட்டிகள் முறையாக சாலை விதிகளை பின்பற்றாமை தான் காரணம் என சொல்லப்பட்டது. சாலை விபத்துகளை குறைப்பதற்காக சாலை விதிகளை மீறுவோர் மீது கடுமையான அபராதங்கள் விதிக்கும் வண்ணம் மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது இந்திய அரசு. புதிய அபராதத்தை அந்தந்த மாநிலங்கள் வேண்டுமானால் பின்பற்றலாம் இல்லையேல் தவிர்த்துக்கொள்ளலாம் என இப்போது மாநிலங்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரைக்கும் புதிய அபராதம் விதிக்கப்படுகிறது.

Read more

தோனியிடம் கற்றுக்கொள்ளுங்கள் | Dhoni the Real Leader

நீங்கள் எந்த துறையில் சாதிக்க விரும்பினாலும் தோனியிடமிருந்து சில தலைமை பண்புகளை கற்றுக்கொண்டால் (Learn something from Dhoni) அவை உங்களை உயர்த்தும் .  ரசிகர்கள் மட்டுமல்லாது

Read more

ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் இமானுவேல் சேகரன் | immanuvel sekaran

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் இமானுவேல் சேகரன் என்பவருக்கு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. யார் இந்த இமானுவேல் சேகரன் அவரை எதற்க்காக இத்தனைபேர் கொண்டாடுகிறார்கள் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்காகவே சிறு கட்டுரை.

Read more

அனைத்தையும் இழக்கவில்லை, இஸ்ரோவின் முயற்சியை கொண்டாடும் வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள்

கடந்த ஜூலை மாதம் 22 அன்று நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 என்ற விண்கலத்தை அனுப்பியது. ஒவ்வொரு கட்டமும் எதிர்பார்த்தது போலவே நடந்தாலும் மிகவும் சிக்கலானது என அறியப்பட்ட விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் 2.1 கிலோமீட்டர் மீத தூரம் இருக்கையில் விக்ரம் லேண்டர் இல் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு வரவேண்டிய சிக்னல் வரவில்லை. இதனால் இந்த திட்டத்தின் கடைசி கட்டம் தோல்வியில் முடிந்துபோனது.

Read more

மளிகைக்கடை வைத்து பிழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சுதேசி நாயகன் வ.உ.சி

சுதேசி என்ற சொல்லுக்கு துளிகூட பிறழாமல் வாழ்ந்த ஒருவர் யாரென்றால் வ.உ.சி என வரலாறு கூறும். இதற்க்கு பாரதியார் தான் மிகச்சிறந்த சாட்சி. ஆம் நண்பர்களே, பலர் பல அந்நிய பொருள்களை தவிர்க்க முடியாமல் பயன்படுத்திக்கொண்டே சுதேசி, அந்நிய நாட்டுப்பொருள்களை புறக்கணிப்போம் என பேசிக்கொண்டு இருக்கையில் எழுதுவதற்கு சவாலான கரடுமுரடான காகிதம், மைக்கூடு, புறா சிறகினால் ஆன எழுதுகோல் , அலங்காரமில்லாத கடிகாரம் என முற்றிலும் உள்நாட்டில் தயாரான பொருள்களையே பயன்படுத்தி வந்தார். இதனை பாரதியார் பெருமைப்பட பலரிடம் சொல்லி மகிழ்வார்.

Read more