உங்களுக்கு மகள் இருக்கிறாரா? இந்தத்திரைப்படம் பாருங்கள் | குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்
மிகவும் ஆபத்தான சூழலில் காயம்பட்டுவிட்ட இந்திய வீரர்களை மீட்பதற்காக குஞ்சன் சக்ஸேனா ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் துப்பாக்கி குண்டுகளும் ஏவுகணைகளும் தங்களை தாக்கியதாக குறிப்பிடுகிறார். பெண்களின் உடல் வலிமை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெண்களை போர் பகுதிக்கு அனுப்புவதை இந்திய ராணுவம் பெரிதாக விரும்பாத சூழ்நிலை அது. ஆனாலும் விமானத்தை இயக்கும் விமானிகளுக்கு அதிக தேவை இருந்தபடியால் திறமையான பெண் விமானிகளும் பயன்படுத்தப்பட்டனர். முதல் முறையாக போர்ப்பகுதிக்கு சென்ற முதல் பெண் விமானி குஞ்சன் சக்ஸேனா என்பது குறிப்பிடத்தக்கது.
Read more