முடிந்துபோன வாழ்க்கையை துவங்குவது எப்படி? | Self Motive in Tamil

எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்கிறதோ? இப்படி நீங்கள் பலரிடம் புலம்பியிருக்கலாம் அல்லது பிறர் உங்களிடம் வந்து புலம்பியிருக்கலாம். ஆக இந்தப் புலம்பல் நீடித்த ஒன்றாகவே எப்போதும் இருக்கிறது. நமக்கு மட்டுமே இப்படி நடப்பது கிடையாது, உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழலில் பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன என்ற எதார்த்தத்தை நாம் உணர்ந்துகொண்டோமேயானால் நிச்சயமாக இப்படிப்பட்ட புலம்பல்களை தவிர்த்துவிடுவோம்.

Read more

6 தலைமைக்கான பண்புகள் | 6 Great Tips for Successful Leader

ஒரு நிறுவனத்தை நாம் நடத்தும் போது அங்கே பணி செய்கிறவர்களுக்கு அது தங்களுடைய நிறுவனம் போல தோன்ற வேண்டும், உங்களுக்கு உண்மையாக இருந்திட வேண்டும் என அவர்கள் ஆத்மார்த்தமாக நம்பும்படி இருக்க வேண்டும். அவர்களது உழைப்பை சுரண்டாமல் நிறுவனம் முன்னேறும் போது தாங்களும் முன்னேறுகிறோம் என அவர்களை நம்பவைத்துவிட்டால் போதும், நிறுவனத்தை உயர்த்திட பணியாளர்கள் இணைந்து கடுமையாக உழைப்பார்கள். இன்று பல முதலாளிகள் கோட்டைவிடும் இடமே இதுதான்.

Read more

சரியான கேள்விகள் கேட்பதுதான் “பதில்கள்” : நீங்கள் கேள்விகளை ஒதுக்குபவரா?

ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதனை நீங்கள் எடைபோட விரும்பினால் அவர் சரியான கேள்விகளை கேட்கிறாரா என்பதை கவனியுங்கள். சரியான கேள்விகள் தான் அதற்கான “பதில்கள்”. நீங்கள் பின்பற்றும் ஒரு விசயம் குறித்து பிறர் எழுப்பும் கேள்விகளுக்கு சரியான பதிலை உங்களால் கூற முடியவில்லை எனில் நீங்கள் பின்பற்றுகிற விசயம் சரியானது இல்லை

Read more

பார்வையின்மை சாதிப்பதற்கு தடையல்ல | சாதித்த பூரண சுந்தரி | பாலநாகேந்திரன்

குடிமைப்பணி தேர்வுகளின் முடிவுகள் அண்மையில் வெளியாகின. அதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 60 பேர் தேர்வாகி இருக்கிறார்கள். அதில் இடம்பெற்றுள்ளவர்களில் இருவர் தான் தற்போது பிரபல்யமாக பேசப்படுகிறார்கள். பூரண சுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் எனும் இருவர் தான் அவர்கள். இந்த இருவர் மட்டும் ஒட்டுமொத்தமான கவனத்தையும் ஈர்ப்பதற்கு ஒரே ஒரு காரணம் இருவரும் கண் பார்வை அற்றவர்கள் என்பதுதான். பார்வை குறைபாடு வெற்றிக்கு தடை அல்ல என்பதனை இவர்கள் நிரூபித்துக்காட்டியுள்ளனர்.

Read more

3 அடி உயரம் : ஆர்த்தி டோக்ரா IAS வெற்றிக்கதை – தோற்றம் முக்கியமல்ல செய்கையே முக்கியம்

நாம் எத்தகைய தோற்றத்தோடு பிறக்கவேண்டும் என்பதை நாமோ நமது பெற்றோர்களோ தீர்மானிப்பது கிடையாது. ஆனால் விளம்பரங்களின் சூழ்ச்சியாலோ அல்லது சினிமாவின் தாக்கத்தினாலோ அழகு என்றவொரு விசயம் நம்மில் இயல்பாகவே கலந்துவிட்டது. இப்படி இருப்பது தான் அழகு என்ற கருத்து நம்மில் விதைக்கப்பட்டுவிட்டது. அதற்கு மாற்றாக பிறக்கும் பெரும்பாலானவர்கள் அதனை நினைத்தே தங்களது வாழ்வின் பெரும்பகுதியை வீணாக்கி வருகிறார்கள். ஆனால் நீங்கள் உங்களது தோற்றதால் நிலைத்து நிற்பது கிடையாது, உங்களது திறமையால் தான் நிலைத்து நிற்க முடியும் என அவ்வப்போது சிலர் நிரூபித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

Read more

இரண்டாவது வேலை/வருமானம் அவசியமானது

ஏதோ ஒரு சந்தர்பத்தினால் நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் முதலாவது வேலை பறிபோனாலும் கூட இரண்டாவது வேலையின் மூலமாக கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு உங்களால் வாழ்க்கையை நிம்மதியாக நகர்த்திச்செல்ல முடியும். இரண்டாவது வேலை எப்போதும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். ஆகவே இரண்டாவது வேலை அவசியமானது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

Read more

நினைப்பதைவிடவும் நாம் வலிமையானவர்கள்

வாழ்வின் பெரும்பான்மையான நேரங்களில் நாம் யார் பின்னாடியோ ஓடிக்கொண்டே தான் இருக்கிறோம். அதுதான் பல சமயங்களில் நமக்கு ஏமாற்றத்தை தந்துவிடுகிறது. இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். ஆகவே பிறரை நோக்கி செல்வதை விட்டுவிட்டு உங்களை தேடி கண்டுபிடிக்க முயலுங்கள். நீங்கள் இதுவரை நினைத்துக்கொண்டிருப்பதை விடவும் சிறப்பானவர்கள். அதனை நீங்கள் முதலில் நம்ப வேண்டும். உங்களிடம் உள்ள சிறப்பான விசயத்தை மேலும் மெருகேற்றிக்கொள்ள நீங்கள் உங்களது வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். அதை நீங்கள் செய்ய பயணித்தால் வழிகளில் உங்களது வாழ்க்கைக்கு தேவையான விசயங்கள் அனைத்தும் தானாகவே கிடைக்கும்.

Read more

விடியலை தேடி – ஒரு இளைஞனின் பயணம் – மதன் – சிறுகதை

எல்லோருடைய வாழ்க்கையிலும் இருண்ட காலம் ஒன்று கண்டிப்பாக வரும். அவ்வாறு வரும்பொழுது, நம்முடைய வாழ்க்கையை அந்த இருளில் முடித்துக்கொள்ள எண்ணாமல் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்தப்பயணம் நிச்சயமாக “விடியலைத்தேடி” தரும். – மதன்

Read more

யானையும் மெல்லிய சங்கிலியும் – Motivational Story in Tamil

நீங்கள் கோவில்களுக்கு செல்லும் போது யானைகளை கவனியுங்கள், அதனை ஒரு சிறிய சங்கிலியால் தான் கட்டிப்போட்டு வைத்திருப்பார்கள். இப்படித்தான் நாமும் நம்முடைய வாழ்க்கையில் சில சங்கிலிகளை அறுக்கவே முடியாது என நினைத்துக்கொண்டு முயற்சி செய்யாமலே இருந்துகொண்டு இருக்கிறோம். ஆனால் முயற்சி செய்தால் நிச்சயமாக நம்மால் முடியும். தடைகளை தகர்த்து எறிந்துவிட்டு வெற்றி எனும் சிகரத்தை அடைய நம்மால் முடியும்.

Read more

கணவன்மார்களே, ஒரு மனைவியின் நிலை புரிந்ததா உங்களுக்கு – யாழினி

ஏன் எப்போ பாத்தாலும் கத்திகிட்டே இருக்க …வர வர உனக்கு ஏதோ ஆயிடுச்சு.. இப்படி பல்வேறு குடும்பங்களில் ஆண்கள் பேசுவதை கேட்டிருக்கலாம். வீட்டிற்குள்ளேயே அடைபட்டு கிடந்தால் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் அதே நிலை வரும். கணவன்மார்களே, ஒரு மனைவியின் தனிமை புரிந்ததா உங்களுக்கு – யாழினி

Read more