Vijayakanth is BACK | பழைய விஜயகாந்த் வந்துவிட்டாரா? வெல்வாரா கோட்டையை ?

தற்போது இணையத்தில் விஜயகாந்த் பேசும் வீடியோ ஒன்று பரவலாக பரவி வருகிறது. அதில் பேசுகின்ற விஜயகாந்த் “பேச்சு வரலை பேச்சு வரலை விஜயகாந்த் க்கு பேச்சு வரலை ..எவண்டா சொன்னது?” என நீள்கிறது அந்த வீடியோ. விஜயகாந்தின் இந்த பேச்சு இளைஞர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. இணையத்திலும் பரவலாக வைரல் ஆகியிருக்கிறது.

கடந்த ஆண்டு பேசிய வீடியோவாக இருந்தாலும் தற்போது இணையத்தில் பரவலாக பரப்பப்படுகிறது . உண்மையிலயே அவரது ஆதரவாளர்கள் விஜயகாந்த் மீண்டு வர வேண்டும் என நினைக்கிற சூழ்நிலையில் உண்மையாலுமே விஜயகாந்த் பழைய மாதிரி மீண்டு வருவாரா ?

 

 

    • உண்மையில் விஜயகாந்த் மீண்டு வந்துவிடுவாரா ?பழைய மாதிரி அதிரடியாக பேசுவாரா ? கோட்டையை வெல்வாரா என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளை தான் இந்த பதிவில் காணப்போகிறோம்.

 

திரை துறையில் விஜயகாந்த் :

தேசப்பற்றுள்ள திரைப்படங்களில் சிறப்பாக நடிக்கும் சில நடிகர்களில் மிக முக்கியமான இடம் திரு விஜகாந்த் அவர்களுக்கு உண்டு. ரஜினி, கமல் என இரண்டு ஆளுமைகள் திரைத்துறையில் இருந்தாலும் அசராமல் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தனது சிறந்த நடிப்பினால் கொண்டிருந்தவர் விஜயகாந்த்.
நடிகர் சங்க தலைவராக இருந்த காலத்தில் சங்க கடனை திருப்பி செலுத்துவதில் மிக சிறப்பாக செயல்பட்டார் விஜயகாந்த். அவருடைய துல்லியமான தகவல்கள் அடங்கிய அடுக்கு வசனங்கள் மக்கள் மத்தியில் பிரபலம்.

அரசியலில் விஜயகாந்த் :

நடிகராக, நடிகர் சங்க தலைவராக சிறப்பாக செயல்பட்ட திரு விஜயகாந்த் மதுரையில் 14 செப்டம்பர் 2005 இல் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்றொரு கட்சியினை ஆரம்பித்தார். விஜயகாந்த் அவர்களின் நடிப்புக்கு கொடுத்த ஆதரவினை அவரது அரசியல் கட்சிக்கும் ரசிகர்கள் மக்கள் கொடுத்தனர். பிற நடிகர்களின் ரசிகர்களும் கூட விஜயகாந்திற்கு ஆதரவு அளித்தனர்.

2006 இல் பங்கேற்ற முதல் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார். பிறகு 2011 இல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்தார்.

ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமைகள் ஆக்டிவாக இருக்கும் போதே அரசியலுக்கு வந்தவர் விஜயகாந்த்

 

எவருக்கும் அஞ்சாமல் துணிவோடு சட்டசபையில், பொது மேடைகளில் பேசிய பேச்சுக்கள் அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவை பெற்றுத்தந்தன.

சரிவை சந்தித்த விஜயகாந்த் :

எந்த பேச்சு விஜயகாந்த் அவர்களுக்கு திரைப்படத்திலும் அரசியலின் ஆரம்ப காலங்களிலும் மக்களின் ஆதரவை பெற்று தந்ததோ அந்த பேச்சு விஜயகாந்த் அவர்களிடமிருந்து மெல்ல விலகியது. அவர் மேடைகளில் பேசுவதும் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிப்பதும் காமெடியாக சமூக வலைத்தளங்களில் வளம் வந்தன. இதற்க்கு காரணமாக “மதுவிற்கு அவர் அடிமையாகிவிட்டார்” என பலரும் “அவருக்கு நோய் தாக்குதலினாலேயே பேச்சு இவ்வாறு மாறி போய்விட்டது” எனவும் “மருத்துவ சிகிச்சையின் போது கொடுக்கப்படுகின்ற மருந்தினால் அவர் நிலை தடுமாறி பேசுகிறார்” என பல காரணங்கள் சொல்லப்பட்டன.

எது எப்படியாயினும் விஜயகாந்தை வீழ்த்த நேரம் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு அவரின் வேடிக்கையான செயல்பாடுகள் வரப்பிரசாதமாக அமைந்தன. அவை சமூக வலைத்தளங்களில் அளவிற்கு அப்பாற்பட்டு பரப்பப்பட்டன. அவர் இனி அரசியலுக்கு லாயக்கற்றவர் என மக்கள் நினைக்கும் அளவிற்கு அவை மக்களிடத்தில் கொண்டுசேர்க்கப்பட்டன.

விஜயகாந்த் மதுவிற்கு அடிமையாக இல்லை, மற்றவர்களை விட அவரிடம் அதிக நேரம் இருக்கும் எனக்கு அது தெரியும். மருத்துவ சோதனை செய்யவும் தயார் – மனைவி பிரேமலதா விஜயகாந்த்

 

அண்மையில் வெளியான வீடியோ :

அண்மையில் விஜயகாந்த் அவர்கள் “பேச்சு வரலை பேச்சு வரலை விஜயகாந்த் க்கு பேச்சு வரலை ..எவண்டா சொன்னது?” என பேசிய வீடியோ வந்தவுடன் விஜயகாந்த் மீண்டும் வந்துவிட்டார். இனி நன்றாக பேசுவார் என நம்பிக்கை வந்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

இன்றும் விஜயகாந்த் அவர்களுக்கு மக்களிடம் ஆதரவு இருந்து கொண்டு தான் இருக்கிறது. ரஜினி , கமல் இருவரும் கட்சி ஆரம்பித்து இருந்தாலும் அவர்கள் இருவருமே கருணாநிதி, ஜெயலலிதா என்கிற ஆளுமைகள் இல்லாத வெற்றிடத்தில் விளையாட வந்தவர்கள் என்கிற பார்வையும் மக்களிடத்தில் இருக்கத்தான் செய்கிறது.

அதேநேரத்தில் ஜெயலலிதா, கருணாநிதி ஆக்டிவாக இருக்கும் போதே வந்தவர் என்கிற பெருமை, அதனால் வரும் ஆதரவு இன்றும் விஜயகாந்த்-க்கு இருக்கிறது.

ஆனாலும் முன்பை போல மக்களின் ஆதரவை வெகுவாக பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல .

விஜயகாந்த் மீண்டு வந்து ஆட்சியை பிடிப்பாரா என கேட்ட கேள்விக்கு சில நண்பர்களின் கருத்துக்கள் இங்கே…

சிங்கார பிரபு திருச்சி:

விஜயகாந்த் முதல்வராக வர வாய்ப்பில்லை . அவரது உடல்நிலை சரியில்லை , மேலும் தேமுதிக விஜயகாந்தை மட்டுமே முன்னிறுத்துகின்றன , கொள்கைகளை முன்னிறுத்துவதில்லை . அவர் தமிழர் அல்ல என்பதும் சிறு சறுக்கலை கொடுக்கும் . அவரது அர்த்தமில்லாத மேடை பேச்சுக்கள் மக்களிடம் இருந்த நன்மதிப்பை குறைத்துவிட்டன .

 

 வினோத் சென்னை:

கோட்டையை பிடிக்க வாய்ப்புள்ளது , கட்சி ஆரம்பித்தபோது இருந்ததுபோல விஜயகாந்த் வந்தால் மக்கள் விரும்புவார்கள் .

ஆனாலும் மக்கள் இன்னும் திமுக அதிமுக விற்கே வாக்களிக்கிறார்கள் , பணமும் அதில் பங்காற்றுகிறது .

ரங்கநாதன் சென்னை :

ராஜ தந்திர போக்கு கிடையாது…
Administration skills இல்லை னு நினைக்குறேன்…கட்சி பலமும் இல்லை இப்போ…உடல் நலமும் சரி இல்லை…
மது அவரை ஆட்கொண்டு விட்டது…
இந்த நிலமையில் அவர் ஓய்வு எடுப்பது அறிவுரைக்க தக்கது…

குமார் சென்னை :

முதல்வராக வாய்ப்பில்லை . அவரது உடல்நிலை சரியில்லை . அவரது கடந்த கால செயல்பாடுகளால் தொண்டர்கள் பலம் குறைந்துவிட்டது . குடும்ப அரசியலும் முக்கிய காரணம் .

வினோத்குமார் சேலம் :

தோல்விக்கான காரணங்களை கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்யவேண்டும் .கட்சி நிர்வாகிகள் தேர்வில் குடும்ப உறுப்பினர்களின் தலையீட்டை நிறுத்தவேண்டும். பொது இடங்களில் கோபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். மீடியாக்கள் கேக்கும் கேள்விகளுக்கு தகுந்த பதிலளிக்கவேண்டும். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கருணாநிதி , ஜெயலலிதா இல்லாவிடினும், அவருக்கு போட்டியாக, அதிமுக மற்றும் திமுக ஓட்டுவங்கிகள், சீமான், அன்புமணி, ரஜினி, கமல் முதலானோர் சிம்மசொப்பனமாக இருக்கிறார்கள் . அவர்களை ஓரம்கட்ட புதிய வியூகம் அமைக்கவேண்டும்.

நீங்க என்ன நினைக்கிறீங்க உங்கள் கருத்துக்களை கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள் .

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *