15 லட்சம் NCC மாணவர்களின் மொபைல் எண்களை மோடி கேட்டது எதற்காக ? தேர்தல் யுக்தியா ?

 

பிரதமர் அலுவலகம் நாட்டில் உள்ள கல்லூரிகளில் படிக்கக்கூடிய 15 லட்சம் NCC மாணவர்களின் மொபைல் எண் , ஈமெயில் ஐடி உள்ளிட்ட தகவல்களை கேட்டிருக்கிறது . இதன் மூலமாக அவர்களுடன் நேரடியாக தொடர்புகளை மேற்கொள்ள மோடி விரும்புகிறார் எனவும் சொல்லப்படுகிறது . 

இது எதற்காக என NCC director-general Lt. Gen. B.S. Sahrawat அவர்களிடம் கேட்டபோது அனைத்து மாணவர்களுடனும் பிரதமர் விரைவில் வீடியோ கான்பிரன்ஸ் மேற்கொள்ள இருக்கிறார் . அதற்காகத்தான் இந்த தகவல் கேட்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார் . 

மார்ச் 30 க்குள் இந்த தகவல்கள் பிரதமர் அலுவகத்தில் கொடுக்கப்பட வேண்டும் எனவும் , இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களின் தகவல்களை தனியாக வண்ணமிட்டு காட்டவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது . (News Published On ThePrint : https://theprint.in/security/contact-data-of-15-lakh-ncc-cadets-being-sent-to-pmo-as-modi-wants-to-interact-with-them/43971/amp/) 

நமக்கு எழும் சந்தேகங்கள் ?

 

ஏற்கனவே facebook உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் திருட்டினை செய்தது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் , அது கடந்த நாடளுமன்ற தேர்தலிலும் நான்கு மாநில தேர்தலிலும் பாஜகவிற்கு உதவியுள்ளதாக அறிவித்துள்ளது . 

இந்த தகவல் திருட்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது . ஆகவே இனி facebook இதற்கு அனுமதிக்காது என தெரிகின்றது . 

இது மாற்றுவழியில் ஆதரவாளர்களை உருவாக்கிடும் முயற்சியா ? 

பிரதமராக நாட்டின் NCC மாணவர்களுடன் தொடர்பில் இருக்க நினைப்பது தவறில்லை . ஆனால் இரண்டாம் , மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு சிறப்பு முக்கியதுவம் அளிக்கப்படுவது ஏன் ? அவர்கள் அடுத்த ஆண்டு நடக்கும் நாடளுமன்ற தேர்தலில் வாக்களிக்க போகிறவர்கள் என்பதாலா ? 

வீடியோ கான்பிரன்ஸ் செய்வதற்காக என்கிறார்கள் , அதற்கு எதற்கு மாணவர்களின் தனிபட்ட தகவல்கள் (மொபைல் எண் , மெயில் ஐடி ) ? 

நரேந்திர மோடி வெறும் பிரதமர் மட்டுமல்ல , அவர் பாஜகவை சேர்ந்தவர் , RSS காரர் , தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வித்தை தெரிந்தவர் . நாளடைவில் மிகப்பெரிய பொறுப்புகளில் , ராணுவ பொறுப்புகளில் சேர இருக்கும் NCC மாணவர்களை தனது ஆதரவாளர்களாக பயன்படுத்த முயலுகிறார் மோடி என ஏன் சொல்ல கூடாது ? 

சாதரண NCC மாணவரிடம் பிரதமரே நேரடியாக பேசும்போது (பிரதமரின் IT நபர்கள் தான் உண்மையில் பேசுவார்கள் ) அது எவ்வளவு பெரிய தாக்கத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் . இது மோடியின் ஆதரவாளர்களாக மாணவர்களை மாற்றிடும் முயற்சி அல்லாமல் வேறென்ன ? 

நாட்டில் தற்போது எதை வைத்து யார் என்ன செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை . நாம் facebook சமூக வலைதள ஆப் தானே என நினைத்துக்கொண்டிருக்கும்போது ‘தேர்தல் முடிவுகளையே அது மாற்றியிருக்கிறது‘ என இப்போதுதான் நமக்கு தெரிகின்றது . 

மோடி எந்த நோக்கத்தை வைத்து கேட்டிருந்தாலும் சரி , NCC மாணவர்களை தனது ஆதரவாளர்களாக மாற்றிட இதனை பயன்படுத்தினால் அதனை வெளிக்கொண்டுவர வேண்டிய பொறுப்பும் , அந்த வலையில் சிக்கிக்கொண்டுவிடாத விழிப்பும் NCC மாணவர்களுக்கு இருக்க வேண்டும் .

 

நன்றி
பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *