தாய்ப்பால் கொடுக்காவிட்டால் என்னாகும் தெரியுமா? | தாய்ப்பால் வாரம் 2018
தாய்ப்பாலே குழந்தையின் முதல் பாதுகாப்பு அருமருந்து – தாய்ப்பால் வாரம் 2018
தாய்ப்பால் , வாழ்க்கையின் அடித்தளம்
தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கமே, இயற்கை ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கியிருக்கின்ற அற்புத சக்தி வாய்ந்த அருமருந்தான தாய்ப்பாலை ஒவ்வொரு அம்மாவும் மறுக்காமல் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் .
தாய்ப்பால் கொடுப்பது அம்மாவின் கடமை
நியாபகம் இருக்கிறதா ஜிலு ஜோசப் அவர்களை,
கடந்த ஆண்டென்று நினைக்கிறேன் ஒரு மலையாள பத்திரிக்கையில் வெளியான அட்டைப்படமொன்று பரவலாக ஆதரவையும் விமர்சனங்களையும் பெற்றது . கிரகலட்சுமி என்கிற பத்திரிக்கையில் ஜிலுஜோசப் என்கிற பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது போன்ற அட்டைப்படம் தான் அது .
தாய்ப்பாலின் மகிமை
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தவறாமல் கொடுப்பதனால் குழந்தைக்கு மட்டுமல்ல தாய்க்கும் பல நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள் .
அனைத்து உயிர்களுக்கும் போலவே குழந்தைக்கும் தாய்ப்பாலே முதல் உணவு . சீம்பால் அதாவது குழந்தை பிறந்த முதல் மூன்று நாட்களில் சுரக்கும் சீம்பாலில் பல அதீத சக்தி நிறைந்த ஊட்டசத்து மற்றும் நோய் எதிர்ப்பு சத்து நிறைந்திருக்கிறது .
குழந்தைக்கு எந்தவித தொந்தரவும் இன்றி ஜீரணமாகும் உணவு தாய்ப்பால் மட்டுமே
தாய்ப்பால் கொடுப்பது உங்களது குழந்தைக்கு செய்யும் பேருதவி
தாய்ப்பால் தவறாமல் கொடுப்பதன் மூலமாக தாய்மார்கள் மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் .
தாய்ப்பால் கொடுக்கும்போது ஆக்சிடோசின் என்கிற ஹார்மோன் சுரந்து கருப்பையை சுருங்க வைப்பதனால் ரத்த போக்கு குறைகிறது .
தாய்ப்பால் கொடுக்க மறுப்பதற்கான காரணமாக பெண்கள் கூறுவது என்ன ?
நமது நாட்டை பொருத்தவரை தாத்தா பாட்டிகள் தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும் என தங்களது பிள்ளைகளிடம் வலியுறுத்தி வந்ததாலோ என்னவோ , மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிக அளவில் தாய்ப்பால் கொடுத்து வருகின்றனர் நமது ஊர் தாய்மார்கள் .
ஆனால் தற்போது பல்வேறு காரணங்களால் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்குவது குறைந்து வருவதாக கூறப்படுகிறது .
எதற்காக குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க மறுக்கிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு , தங்களின் மார்பழகு குறைந்து போகிறது என கூறியிருக்கிறார்கள் .
இன்னும் பலர் , குறிப்பிட்ட இடைவெளியில் கொடுக்க வேண்டும் என்பதனால் தங்களின் தூக்கம் போகிறது என்றல்லாம் கூறியிருக்கிறார்கள் .
வேலைப்பளுவினால் தவிர்க்கபடும் தாய்ப்பால்
தற்போதைய சூழலில் பெண்கள் வேலைக்கு போவது அதிகரித்தபடியால் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தாய்ப்பால் புகட்டிட முடியவில்லை என தெரிவித்திருந்தனர்.
2017 ஆம் ஆண்டுவாக்கில் பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் ஓராண்டுக்கு பின்னர் தாய்ப்பால் அருந்திடும் குழந்தைகளின் எண்ணிக்கையில் பிரேசில் நாட்டில் 56 சதவிகிதமாகவும் ஜெர்மனியில் 23 சதவிகிதமாகவும் பிரிட்டனில் 0 . 5 சதவிகதமாகவும் இருகின்றது .
தாய்மார்கள் என்ன செய்திட வேண்டும் ?
குழந்தைகளுக்கு மூன்றாண்டு வரை தாய்ப்பால் கொடுக்கலாம் என்றும் அவ்வாறு கொடுக்கின்றபட்சத்தில் அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள் என மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது .
அதனால் தான் கிராமப்புறங்களில் நடக்கின்ற குழந்தை கூட தாய்ப்பால் குடிப்பதை பார்த்து வந்திருக்கிறோம் .
இன்றைய காலகட்ட இளம் தாய்மார்களோ தங்களின் அழகு குறைந்துவிடும் என்றோ வேலைப்பளு அதிகமாயிருக்கிறது என்றோ காரணங்களை காட்டி தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்து வருகுறீர்கள் ? உங்களிடம் நான் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்க விரும்புகின்றேன் ?
யாருக்காக கடினமாக வேலை செய்கிறீர்கள் ? யாருக்காக உங்களது வாழ்வையே அர்பணிக்கிறீர்கள் ? குழந்தைக்காகத்தானே அப்படியானால் அவர்களின் நலனில் அக்கறை கொண்டவர்களானால் தாய்ப்பால் கொடுப்பதை எந்த காரணத்திற்காகவும் நிறுத்திவிடாதீர்கள் .
தாய்ப்பால் கொடுப்பதனால் தாய்மார்களாகிய உங்களுக்கும் பல நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன . அதனை உணர்த்துவதற்காகத்தான் தாய்ப்பால் வாரம் ஆகஸ்டு முதல் வாரத்தில் கடைபிடிக்கப்படுகிறது .
ஜெயலலிதா அவர்களின் பயணிகள் நிறுத்தங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தாய்ப்பால் கொடுக்கும் அறைகள்
எப்போதுமே தமிழக அரசு உலகின் முன்னோடி திட்டங்களை மிக எளிமையாக பலருக்கும் முன்னாலேயே செய்துவிடுவது வழக்கமான ஒன்று .
அந்தவகையில் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் குழந்தைகளுக்கு பால் கொடுப்பது மிகவும் சிரமமானதாக இருக்கும்.
அதனை தவிர்க்க மறைந்த நமது முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சிறப்பான திட்டம் தான் தாய்ப்பால் புகட்டும் அறைகள் .
இன்றுவரை அனைத்து பேருந்து நிலையங்களிலும் பாலூட்டும் அறைகள் சிறப்பாக செயல்படுகின்றன .
திட்டங்களையும் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் அரசு மேற்கொண்டு வந்தாலும் உரிய மாற்றங்கள் சாதாரண மக்களிடம் இருந்துதான் தொடங்கிட வேண்டும் .
இளம் தாய்மார்களே செய்வீர்களா ?
பதிவு குறித்த உங்களது கருத்துக்களை பகிருங்கள் .
உங்களுக்கு தெரிந்தவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்