வென்ற தமிழிசை, வீழ்ந்த வீண் விமர்சகர்கள்

ஆமாம் எனக்கும் அழுகை வரும், நானும் சாதாரண பெண் தானே. ஆனால் ஒரு துளி கண்ணீருக்கு 10 முறை அதிகமாக வீரியத்துடன் செயல்பட வேண்டும் என எழுந்துவிடுவேன்.
வென்ற தமிழிசை, வீழ்ந்த வீண் விமர்சகர்கள்

மைக் உயரம் போதாமையால் ஏதாவது ஒன்றின் மீது நின்று பேசுவது போன்ற வீடியோ, பரட்டை தலை முடி என விமர்சனம் செய்யும் மீம்ஸ்கள், கறுப்பான நிறத்தை குறிவைத்து தாக்கும் சொல்லாடல்கள், எது சொன்னாலும் சிரிப்பாகவே சித்தரிக்கும் சமூக வலைதள பதிவுகள் என தினம் தினம் இவற்றை அரசியல் சவால்களோடும் கேள்விகளோடும் கூடுதலாக சந்திக்க வேண்டிய நிலையில் தான் தமிழிசை இருந்தார்.

 

ஒரு நேர்காணலில் இது குறித்தான கேள்விக்கு “எனக்கும் வருத்தம் ஏற்படும், சில சமயங்களில் கண்ணீர் சிந்தி இருக்கிறேன். ஆனால் ஒரு முறை கண்ணீர் சிந்தினால் அதனை விட பத்து மடங்கு வீரியமாக செயலாற்ற வேண்டும் என எழுவேன்” என பதில் அளித்தார்.

அவர் சொன்னதைப்போலவே இவ்வளவு குறைந்த வயதில் அரசியல் சாசன பதவியான ஆளுநர் பதவியை அவர் அடைந்திருக்கிறார். காங்கிரஸ் குடும்ப பின்னனியில் இருந்து சாதாரண உறுப்பினராக வாழ்க்கையை துவங்கிய ஒருவர் ஆளுநர் பதவி வரை அடைந்திருப்பது, குறிப்பாக இவ்வளவு சவால்களை கடந்தும் ஒரு பெண் ஒருவர் இத்தகைய நிலை வரை உயர்ந்திருப்பது என்பது பெருமைப்படக்கூடியது. இங்கே தமிழிசை வென்றுவிட்டார், வீண் விமர்சகர்கள் தோற்றுவிட்டார்கள் என்பதே உண்மை.

தமிழக பாஜகவில் இருப்பதே சாதனை தான்

தமிழிசை மற்றும் சோபியா

பெருவாரியான மக்களுக்கு விருப்பமில்லாத பாஜக கட்சியில் தலைமை பொறுப்பை நடத்துவது என்பது மிகவும் சவாலான காரியம். திமுகவில் இருக்கக்கூடியவர்கள் மக்கள் முன்னால் எளிமையாக செல்ல முடியும், சமாளிக்க முடியும். மக்களிடம் ஆதரவு இருக்கின்ற ஒரு கட்சியின் சார்பாக நடந்துகொள்வது என்பது மிகப்பெரிய சாதனை என சொல்லிவிட முடியாது. ஆனால் பாஜக கட்சியின் நிலை தமிழகத்தில் அப்படியா இருக்கிறது. குறிப்பாக தமிழிசை எதாவது பேசுவார் அதனை வைத்து கிண்டல் செய்யலாம் என எத்தனையோ பேர் காத்துக்கொண்டு இருக்கும் போது எதையும் கண்டுகொள்ளாமல் தனக்கே உரித்தான பாணியில் பதில் சொல்லியே வந்திருக்கிறார் திருமதி தமிழிசை.

திட்டமிட்ட விமர்சனங்களை கடந்து சென்றவர்

வென்ற தமிழிசை, வீழ்ந்த வீண் விமர்சகர்கள்

உங்களது தலை முடி பரட்டை போன்று இருக்கிறது என தினந்தோறும் சிலர் கிண்டல் செய்துகொண்டு வந்தால் நீங்கள் வெளியில் செல்லவே  தயங்குவீர்கள். ஒரு பெண்னென கூட பாராமல் திட்டமிட்டே உருவத்தை அடிப்படையாக கொண்ட விமர்சனங்கள் அவர் மீது தயவு தாட்சண்யமின்றி வைத்துக்கொண்டே தான் வந்தார்கள். ஆனால் இதனை வெற்றிகரமாக கடந்துகொண்டே தான் தமிழிசை தனது அரசியல் பயணத்தை கொண்டு சென்றார்.

பெண்களுக்கு சிறந்த முன்னுதாரணம்

@DrTamilisaiBJP Congrats mam..#TamilisaiSoundararajan #TelanganaGovernor pic.twitter.com/X37ZvstabN

— M.Rajadurai (@RajaduraiTweet) September 1, 2019

பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என சொல்லுவார்கள் ஆனால் அவர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களது உடல், நடத்தை என விமர்சனங்களை முன்வைத்து அவர்களை காலி செய்துவிடுவார்கள். அதனையும் தாண்டி பெண்கள் அரசியலில் ஒரு நல்ல நிலைக்கு வருவதென்பது மிகவும் சவாலானது. என்னைப்பொறுத்தவரையில் தமிழிசை அப்படிப்பட்ட சவால்களை கடந்து வந்திருக்கிறார் என்றே சொல்லுவேன்.

கற்றுக்கொள்ளுங்கள்

தமிழிசை ஒரு நேர்காணலில் “ஊழல் கரை படியக்கூடாது, ஒழுக்கம் சார்ந்த பிரச்சனைகளில் சிக்கக்கூடாது” என்ற இரண்டு விசயங்களை பிரதானமாக ஆரம்பகாலம் முதற்கொண்டு கடைபிடித்து வந்ததாக சொன்னார். உங்களை திட்டமிட்டே ஏளனமோ, விமர்சனமோ செய்கிறார்கள் எனில் அதற்க்கு பதில் சொல்லியே தீர வேண்டும் என்கிற அவசியமில்லை. அப்படி நீங்கள் சொல்லத்துவங்கினால் அதிலேயே உங்களது வாழ்நாள் முடிந்துவிடும். விமர்சனம் செய்கிறவர்கள் செய்தால் செய்யட்டும் என ஒதுக்கிவிட்டு நீங்கள் செயல்பட துவங்கினால் நீங்கள் முன்னேறலாம். இதோ பாருங்கள், விமர்சனம் செய்தவர்கள் அடுத்தது யாரை விமர்சனம் செய்யலாம் என தேடிக்கொண்டு இங்கேயே இருக்கிறார்கள், தமிழிசை தெலுங்கானாவிற்கு ஆளுநராக முன்னேறிவிட்டார்.

தனி நபராக தமிழிசை அவர்கள் மீதான பார்வை தான் இந்தக்கட்டுரை மாறாக பாஜக ஆதரவு என நினைத்துவிட வேண்டாம்.

Join with me :

எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/BpBkoxYbAdXLPCC0kZ4Apg





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

One thought on “வென்ற தமிழிசை, வீழ்ந்த வீண் விமர்சகர்கள்

  • September 6, 2019 at 7:24 am
    Permalink

    மிக சரியான பதிவு உயர் திரு தமிழிசை சவுந்தராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *