திருமாவின் பிறந்தநாளில் பனைமரம் நடு

ஆகஸ்டு 17 அன்று திருமாளவன் அவர்களின் பிறந்த தினம் . ஆகஸ்டு 17 1962 ஆம் ஆண்டு பிறந்த தொல் திருமாளவன் அவர்களுக்கு 56 வயதாகிறது .தனது இந்த பிறந்த தினத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பனங்கன்றுகளை நட வேண்டும் என கட்சியினருக்கு அன்பு கட்டளையிட்டு தானே விதை சேகரிக்கும் பணியிலும் நடும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்

 

பனை விதை சேகரிப்பில் திருமாவளவன்
பனை விதை சேகரிப்பில் திருமாவளவன்

 

ஒவ்வொரு அரசியல் தலைவர்களிடமும் பல சிறந்த பண்புகள் நிச்சயமாக இருக்கும் . அப்படிப்பார்த்தால் தொல் திருமாளவன் அவர்களிடமும் சிறந்த பண்புகள் இருக்கின்றன . அவற்றில் சில

 

கொள்கைக்கான  அரசியல்

 

அன்றும் இன்றும் அரசியலுக்கு வருகிறவர்களுக்கு மிக முக்கிய கொள்கையாக இருப்பது “முதல்வர் நாற்காலியை அடைவது ” தான் . சிலர் இதனை வெளிப்படையாக கூறி அரசியல் செய்வார்கள் அல்லது மனதிற்குள் ஆசையை வைத்துக்கொண்டு அரசியல் செய்வார்கள் .

 

திருமாவளவன்
திருமாவளவன்
ஆனால் தன்னால் முதல்வராக முடியாதென்பதனை உணர்ந்திருந்த திருமா அதனை பல சமயங்களில் வெளிப்படையாக கூறியுள்ளார் . அது குறித்து பேசியபோது “தாங்கள் முதல்வரானால்  இதை செய்வோம் அதை செய்வோம் என மற்றவர்களைப்போல்  என்னால் வாக்குறுதி எதனையும் தந்து ஏமாற்றிட முடியாது . என்னால் முதல்வராக முடியாது என தெரிந்தும் அரசியல் செய்பவன் நான் ” என கூறியுள்ளார் .

 

இதற்கு முக்கிய காரணம் திருமா அவர்கள் தலித் இன மக்களுக்கான தலைவராக கட்டமைக்கப்பட்டதுதான் .

 

ஆக அவரது அரசியல்நோக்கம் முற்றிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை , உரிமையை , நிலையை உயர்த்துவதற்கான போராட்டம் சார்ந்ததாகவே இருக்கின்றது.

 

அரசியல் பண்பு

 

தலைவன் எவ்வழியோ  தொண்டனும் அவ்வழி என்பார்கள் . இன்றிருக்கும் அரசியல்வாதிகளில் பலர் வெறுப்பு அரசியலையும் வன்முறை அரசியலையும் பேசி தொண்டர்களை வசியப்படுத்தி வைக்கும் வேலைகளை செய்துவருவதை கண்டிருக்கிறோம் .

 

நான் கண்டவரையில் திருமாளவன் அவர்கள் அவ்வாறு தூற்றி பேசியதோ உணர்வுகளை தூண்டும் விதமாக பேசியதாக தெரியவில்லை .

 

பொதுவாழ்வில் பலருக்கு முன்னோடியாக செல்பவர்களுக்கு இருக்கவேண்டிய பொறுப்புகளில் இது மிக முக்கியமான ஒன்று , அது திருமாவளவனிடம் இருக்கின்றது . அரசியலில் வருகிறவர்கள் கற்க வேண்டிய பண்பு இது .

 

திருமாவும் பனைமரமும்

 

பனைநாடு அமைப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க திருமாளவன் அவர்கள் தன்னுடய இந்த பிறந்தநாளை பனை மரங்கள் நடுவதன் மூலமாக கொண்டாடப்போவதாக அறிவித்து அதற்கான வேலைகளை தொடங்கியிருப்பது சிறப்பு .

 

 

அவர் இணையதள சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் “தன்னுடைய பிறந்த தினத்தில் ஒரு லட்சம் பனை விதைகளாவது நடப்படும்” என கூறினார் . தானகவே விதைகளை சேகரிப்பது  நடுவது என பனை நடுதலுக்கான வேலைகளை தொடங்கியும் வைத்துள்ளார் .

 

இனி தன்னுடய கட்சி தொண்டர்கள் அவர்களின் பிறந்தநாளை பனைமரம்  நடுவதன் மூலமாக கொண்டாடலாம் எனவும் கூறியுள்ளார் .

 

பனைமரம் இயற்கை நமக்கு அளித்த கொடை . பெரிய பராமரிப்பு எதுவும் செய்யாமலே இயற்கையாகவே வளருகின்ற பனைமரத்தினை நாம் இன்று இழந்துவருகிறோம் . அதனை மீட்கவேண்டிய  பொறுப்பு கட்சிகளை தாண்டி நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது .

 

அரசியலைத்தாண்டிய திருமாவளவனின் இம்முயற்சிக்கு பாராட்டுக்கள்.

 

பனை நடுவோம் ! இயற்கையை காப்போம்

 

பாமரன் கருத்து
பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *